Wednesday, February 6, 2013

எது எதை நீக்குகிறது.


எது எதை நீக்குகிறது.

உழைப்பு தரித்திரத்தை நீக்குகிறது, தியானம் பாபத்தை நீக்குகிறது, மௌனம் கலங்கங்களை நீக்குகிறது, விழிப்புணர்வு பயத்தை நீக்குகிறது.

தெய்வத்தை எங்கே காண்கின்றனர்.


தெய்வத்தை எங்கே காண்கின்றனர்.

யாகம் செய்ய ஆசைபடுபவர்கள், தெய்வத்தை அக்னியில் காண்கின்றனர். தபம் செய்பவர்கள் இதயத்திலும், உருவவழிபாடு செய்பவர்கள் விக்கிரகத்தில் தரிசிக்கின்றனர். ஆனால் ஞானிகளோ தெய்வத்தை எங்கும் தரிசிக்கின்றனர்.


இழந்ததை பெற, விபத்து ஏற்ப்படாமல் இருக்க.


இழந்ததை பெற, விபத்து ஏற்ப்படாமல் இருக்க.

இழந்ததை பெற, விபத்து ஏற்ப்படாமல் இருக்க.
 சிவாலயத்தில் இருக்கும் கால வைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6 மணிக்குள், (ராகு காலத்தில்) தொடர்ந்து நெய்விளக்கு தீபமேற்றி வழிபட உடன் பலன் உண்டாகும்.


சனி பாதிப்பு நீங்க


சனி பாதிப்பு நீங்க 

சனியினால் ஏற்படும் பாதிப்பிற்கு வெள்ளி இரவு சிறிது எள்ளை எடுத்து தலைக்கடியில் வைத்து படுத்து, பின் சனிகிழமை அந்த எள்ளை சோற்றுடன் கலந்து காகத்திற்கு வைக்க சனி பாதிப்பு நீங்கும்.


திருமணத் தடை அகல

திருமணத் தடை அகல 

கன்று ஈனும் நிலையில் இருக்கும் பசுவை சுற்றிவந்து வணங்கினால், திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.


சூரிய வழிபாடு

சூரிய வழிபாடு 

சூரியனை உதயகாலத்தில் இந்திரனும்,  மதியம் வாயுவும், மாலை சந்திரனும், இரவில் பிரம்மன், விஸ்ணு, மற்றும் ருத்திரன் ஆகியோர் வணங்குகின்றனர். 

ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஸ்தோத்திரம் கூறி சூரியனை வணங்கினால் அனைத்திலும் வெற்றிபெறலாம். சூரியனை நாள்தோறும் வணங்கினால்  உடல்நலம், மனபலம் பெறலாம்.

சூரிய உதயத்தின் பொது, சூரியன் உதிக்கும் திசை பார்த்து 

'ஓம் நமோ ஆதித்யாய புத்திர் பலம் தேஹிமே  சதா' என்று சொல்லி வணங்க ஆயுள் கூடும், கண்நோய் வராது, தோல் நோய் விலகும்.

வாஸ்து தோஷ பரிகாரம்

வாஸ்து தோஷ பரிகாரம் 

வெளிநாடுகளில் உள்ள கூடுதலான வீடுகளில் அல்லது Apt டில் வாஸ்து தோஷம்  இருப்பதால், அதற்கு மிக சுலபமான பரிகாரம். ஸ்வர்ண அலங்காரம் செய்யப்பட்ட வெங்கடாஜலபதி படத்தை வாசலுக்கு நேர் எதிரே வைத்திட வாஸ்து தோஷம் நீங்கும்.

சிவ வழிபாடு

சிவ வழிபாடு 

திங்கட்கிழமை: 
வெள்ளை பூவின் இதழ்களால் அர்ச்சனை செய்து, வெண்பொங்கல் படைத்தல் சிறப்பைத்தரும்.

இரத்தம் சுத்தமடைய

இரத்தம் சுத்தமடைய 

தண்ணீரை சூடாக்கி ஆறவைத்து அந்த நீரில் துளசி இலையை போட்டுவைத்து ஊறியபின் அந்தநீரை குடித்தால் இரத்தம் சுத்தமாகும். இரத்தத்தில் அதிகமாக இருக்கும், சீனி, பித்தம், உப்பு போன்றவை குறைந்துவிடும்.
பேரீச்சம்பழம் 

இரவில் இரண்டு பேரீச்சம்பழம் பாலும் குடித்துவந்தால் பெண்களின் கர்ப்பபையில் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பர் . ஆண்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை இரவில் இரண்டு சாப்பிட்டுவர நல்ல ஆரோக்கியத்துடன் இருபபர் . தைராய்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

யாரை வணங்குவது

யாரை வணங்குவது 

தடைகள் நீங்கி வெற்றிபெற:  விநாயகர் 
அழகு, வீரம், ஞானம் பெற:  முருகன் 
அனைத்துசக்தியும் பெற்று வீரத்துடன் இருக்க: அம்பிகை 
இவ்வுலக எல்லா இன்பங்களும் பெற: திருமால் 
செல்வம் பெற: திருமகள் 
கல்வி பெற: சரஸ்வதி 
முக்தியைப் பெற: சிவபெருமான்.

சாப்பிடும்போது கவணிக்க.

சாப்பிடும்போது கவணிக்க.

சாப்பிடும்போது பேசக்கூடாது. தொலைக்காட்சி பார்க்கக்கூடாது.பேசக்கூடாது. தண்ணீர் குடிக்கக்கூடாது, அவசரம் என்றால் மட்டும் சிறிது தண்ணீர் குடிக்கவும், குறைந்தது சாப்பிட்டு அரை மணித்தியாலத்திற்கு பின் தான் தண்ணீர் குடிக்கலாம். கர்ப்பிணி பெண்கள் மிகவும் அமைதியாகவும், பொறுமையாகவும், ருசித்து சாப்பிடவேண்டும். யாரும் நின்றுகொண்டு சாப்பிடக்கூடாது .

பெற்றோரே தெய்வம்

பெற்றோரே தெய்வம் 

பெற்றோரை சரியாக கவனிக்காத பிள்ளைகள் வாழ்கையில் தோல்வியையே சந்திக்கின்றனர் . தாயை கவனிக்காதவர் பல நோய்களாலும், தந்தையை கவனிக்காதவர் பொருளாதாரத்தாலும் பாதிப்படைவதை நாம் காணக்கூடியதாக உள்ளது.

துயில் எழ எது சரியான நேரம்.

துயில் எழ  எது சரியான நேரம்.

சூரிய உதயத்திற்கு முன் படுக்கையை விட்டு எழ வேண்டும். இதனால் நரம்பு தளர்ச்சி, இரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

பூஜை அறை

பூஜை அறை 

பூஜை அறையில் தெய்வ படங்களை  கிழக்கு  திசை பார்த்து வைக்கவேண்டும்.  வடக்கு திசை பார்த்து வைக்கக்கூடாது.
இயலாத சூழ்நிலையில் திருமாலை தெற்கு திசை பார்த்து வைக்கலாம்.
மற்ற தெய்வங்களை மேற்கு பார்த்து வைக்கலாம்.