Monday, January 10, 2011

கடவுளை காண்பது எப்படி?

பயிற்சி நாள் 1:
கடவுளை காண எடுக்கும் முதல் அடி.
கடவுளை காண்பதற்கு எத்துணையோ வழிகள் இருந்தாலும், நான் முதலில் எடுத்துகொள்வது, இரண்டு வழிகள். அவற்றில் ஒன்று தியானத்தின் முலம் கடவுளை காண்பது, மற்றது பக்தியின் முலம் கடவுளைக் காண்பது.  
இந்த இரண்டிற்கும் முதலில் தேவைப்படுவது, நம் உடலில் மின் காந்த அலையின் அளவை அதிகப்படுத்த வேண்டும். அதனால் சக்தி ஓட்டத்தின் அளவை அதிகமாக்கிவிடலாம், அதற்கு நாம் முதலில் செய்யவேண்டியது, மூச்சு பயிற்சி.

இந்த மூச்சுப்பயிற்சியில் (பிரணாயமம்) பல வகை இருந்தாலும் அடியேன் முதலில், இந்த பயிற்சியின் மூலம் தொடங்குகிறேன். 
இந்த பயிற்சிக்குத்தேவை 
தூய்மையான, அமைதியான இடம், மற்றும் வசதியான இருக்கை.(ஆசனம்)
தற்போது நீங்கள் பத்மாஷனத்திலோ அல்லது உங்களுக்கு வசதியான ஒரு ஆசனத்தில் அமர்ந்துகொள்ளவும், பத்மாசனத்தில் இருக்க விரும்பினால், முடிந்தால், கீழே உள்ள படத்தில் இருப்பதுபோல் அமர்ந்துகொள்ளவும். நீங்கள் மிகவும் வசதியாக இருக்கவேண்டும் என்பதே இங்கே முக்கியமாக இருக்கிறது. உங்களின் இருக்கை உங்களுக்கு சிரமத்தை கொடுக்காமல் இருக்கவேண்டும். 
பத்மாசனம் 
இப்போது உங்களின் முதுகு, கழுத்து மற்றும் தலை ஒரு நேர்கோட்டில் இருப்பதுபோல் நிமர்ந்து அமர்ந்துகொண்டு கண்களை மூடவும்.
1  நீங்கள் இப்போது உங்களின் வலதுகையின் பெருவிரலால், மூக்கின் வலதுபுரத்தை     அமத்திகொண்டு, இடது புற நாசியின் வழியே மூச்சை சப்தமில்லாமல் உள்ளே  இழுக்கவும். அப்படி இழுக்கையில் 1 முதல் 6 வரை உங்களுக்குள்(மனத்தால்) எண்ணவும்.
2 பின் மூச்சை உள்ளேயே நிறுத்திகொண்டு 1 முதல் 3 வரை எண்ணவும்.

3 இப்போது உங்களின் வலது கை மோதிரவிரல் மற்றும் நடுவிரளாலும் மூக்கின் இடதுபுற நாசியை அமத்திகொண்டு வலது நாசியின் வழியாக மூச்சை சத்தமில்லாமல் வெளியிடவும். இப்போது 1 முதல் 6 வரை எண்ணவும்.

4 தற்போது மூச்சை உள்ளே இழுக்காமல் அப்படியே ௧ முதல் ௩ வரை எண்ணவும்.
 இப்படி 5 நிமிடங்கள் வரை செய்யவும்.
இப்பயிற்சி செய்வதற்கு பொருத்தமான நேரம்.
விடியற்காலை, மதியம் மற்றும் சூரியன் மறையும் நேரம்.
இந்த பயிற்சித்தொடர்புடைய ஒரு ஒளிப்பதிவு (வீடியோ கிளிப்) கீழே கொடுத்துள்ளேன். அதை பார்த்து பழகவும். இது ஆங்கிலத்தில் உள்ளது. இருப்பினும் உங்களுக்கு விழங்கும் என்று நம்புகின்றேன்.
  இதை பார்த்து பழகவும். 
மூச்சுபயிர்ச்சிக்கும், கடவுளை காண்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது பற்றி 
பயிற்சி நாள் 2 இல்  பார்ப்போம்