Tuesday, January 18, 2011

பிராணாயமம் செய்ய ஏற்ற நேரம் எது?

பிராணாயமம் செய்ய ஏற்ற நேரம் எது?
பிராணாயாமம் மாலையில் செய்தால் உடலுக்குத் துன்பம் தரும் கபம் நீங்கும்.

மத்தியானத்தில் செய்தால் வஞ்சக வாதம் நீங்கும்.

விடியற்காலையில் செய்தால் பித்தம் நீங்கும்.
--------------------------------------------------------------------------------------------------------
அஞ்சனம் போன்று உடல்ஐ அறும் அந்தியில் 
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில் 
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தறும் 
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
(திருமந்திரம் 727 )
------------------------------------------------------------------------------------------
பிராணாயாமம் எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
என்பதை நாளை காண்போம்.

ருதிராக்ஷையின் மகிமை

ருதிராக்ஷையின் மகிமை:
1.உருத்ராக்ஷையின் மகிமை. 

நம் உடல், உயிர், அறிவு இவையனைத்திலும் நிரவிக்கிடப்பவன் சிவநேயன்றி வேறில்லை.
நம் செயலில் உண்டாகும் புகழுக்குக்கூட நாம் கர்வப்படக்கூடாது. நாம் ஆட்டுவிக்கும் பொருள் மட்டுமே, ஆடுவதும், ஆனந்தமடைவதும், அறிதலும், புரிதலுமை உலகில் இயைந்து, மானுடனை வழிநடத்தும் மகத்தான சக்தி அந்த மகேசனே!
          நடமாடும் இறைவனாய் நம்மை ஆழவந்துள்ள ருத்ரட்சையின் வகைகள் பற்றி இனி அறிவோம்.

ஒரு முக ருத்ராக்ஷை :
 இரண்டு முகம் கொண்ட ருத்ராக்ஷை பற்றி நாளை அறிவோம்.
தொடரும்...

சிவபெருமான் கூறும் நந்திதேவரின் பெருமை:


சிவபெருமான் கூறும் நந்திதேவரின் பெருமை.

 சாண்டில்ய முனிவர் ஒருமுறை பிரதோஷம் பற்றி கூறுகையில், பிரதோஷ வேலையில் சிவபெருமானைப் பூஜிப்பதற்கு முன் நந்தி தேவரைப் பூஜிப்பதே மிகவும் உத்தமமாகும். இவ்வாறு நந்திதேவரை முதலில் பூஜை செய்வதற்கான காரணகாரியங்களை சிவபெருமான், உமாமஹெஸ்வரியிடம்  கூறியதை இங்கு காண்போம்.  

ஒருமுறை பூவுலகில் மக்களிடையே ஏற்ப்பட்ட இறைபக்தியின்மையும், அதனால் மக்களிடையே அறியாமை, அநீதி, துஷ்ட செயல்கள் போன்றவை கூடிகொண்டிருப்பதை நாரத முனிவர் சிவபிரானிடம் கூறியதற்கு, அவரும் தனக்கு நிகரான சக்தி கொண்ட இரண்டாம் சிவனாம் நந்திதேவரை, பூவுலகிற்கு அனுப்பி யாம் அதை சரி செய்வதாகக் கூறினார். இதைக் கேட்ட பார்வதி தேவி. நந்திதேவர் எந்த வகையில் உங்களுக்கு நிகரானர்வர் என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு பரவேச்வரன்,

"தேவி! நந்திதேவன் தந்து தூய்மையான பக்தியால், தவத்தால் எனக்கு நிகரானவன், உண்மையைச் சொன்னாள், நானே நந்திதேவன், அனாதியே தோன்றியவன். தர்ம வடிவானவன், நான்மறைகளையும் தன் நான்கு பாதங்களாக அடைந்தவன். எங்கும் நிறைந்துள்ள எனக்கே, இந்த நந்திதேவன் வாகனமாகி என்னை எக்காலமும் சுமப்பதால் எனக்கு ஈடானவன். வேதன்கலனைத்தும் புகழ்ந்தேற்றும் உன்னதமானவன். எனவே இந்த நந்திதேவரை துதிப்பவர்க்கு, பக்தி, செல்வமும்,காரியசித்தியும், மக்கட்செல்வத்தையும், சகல சௌபாக்கியங்களையும், தந்து இறுதியில் வீடு பேற்றையும் அளித்து வருகிறேன்" என்று கூறி முடித்தார்.




 எம்பெருமான் கூறியதைக் கேட்டு பரமேஸ்வரி, மனம் நெகிழ்ந்துருகி, நீங்கள் கூறுவது உண்மைதான், ஒழுக்கம், உண்மை, நியாயம், ஞானம், மோட்சம், உறுதியான பக்தி, சிவநேசம் ஆகிய அனைத்தும் ஒருங்கினந்தவரும், ஈரேழு உலகங்களிலும் எங்கும் பரவியிருப்பவருமான தங்களையே சுமக்கின்ற வலிமையைப் பெற்றவருமாகிய, அனைத்து சிறப்புகளும் பெற்றவரான நந்தி தேவரைத் தங்களுக்கு ஈடானவரென சொல்வது சாலப் பொருந்தும் என்று கூறினார்.

எனவே, இத்தகைய மேன்மைகளுக்கும் பெருமைகளுக்கும் உரியவரான நந்திதேவரை இரண்டாம் சிவன் என்ற முழுநம்பிக்கையுடன், புனிதமான பிரதொசவேலையில் வழிபடுவதால் அளவிட முடியாத அளவு புண்ணியத்தையும் நன்மையையும் நாமும் நம் அடுத்த தலைமுறையும் பெற்று சிறந்து விளங்கலாம்.     
தொடரும்...