Sunday, April 24, 2011

சைவத்தின் சரிதம். 8

4 . சைவ சித்தாந்தம்  


அடிப்படை நூல்கள்
           சைவ சித்தாந்தம் தமிழ் நாட்டில் வழங்கும் மெய்ப்பொருட் கொள்கையாகும்.
இதற்கு அடிப் படையை அமைத்துத் தருவன வேதங்களும் திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் ஆகும். இவற்றுள்ளும் பின்னர்க்கூறிய இரண்டுமே மிகவும் இன்றியமையாதவை. சைவ நாயன்மார்கள் அருளியவை பன்னிருதிருமுறைகள் எனப்படும்.
திருஞான சம்பந்தர் 1 - 3 திருமுறைகள். 
திரு நாவுக்கரசர் 4 - 6 திருமுறைகள்.    
சுந்தரமூர்த்தி நாயனார் 7 ஆம் திருமுறையும்,
 தேவாரங்கள், மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் - திருக்கோவையார் 8    திருமுறை. ஆகியவை முதல் எட்டுத் திருமுறைகள் ஆகும்.
இந்நால்வரும் சமயக்குரவர் எனப்படுவர். 
திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்வர் இயற்றிய திருவிசைப்பா - திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை;
திருமூலரின் திருமந்திரம் 10 ஆம் திருமுறை.
திரு ஆலவாயுடையார் (சிவபெருமான்) தொடங்கி நம்பி ஆண்டார் நம்பிகள் வரை உள்ள பன்னிருவர் செய்த 40 பிரபந்தங்கள் 12 ஆம் திருமுறை.
நம்பியாண்டார் நம்பிகளே இராசராச  சோழன் காலத்தில் திருமுறைகளாகத் தொகுத்தவர் (கி.பி.1000 - 1040 ). இதன் பின்னர் தோன்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் 12 ஆம் திருமுறை.

         சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். அவை: 
1 . திரு உந்தியார் - ஆசிரியர் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் (கி பி 1148 )
2 . திருக்களிற்று பாடியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் கி பி 1178 
3 . சிவஞான போதம் - திருவெண்ணெய் நல்லூர் மெய்க்கண்ட தேவநாயனார்.
4 . சிவஞான சித்தியார்.
5 . இருப்பா இருபஅஃது இவ்விரண்டையும் இயற்றியவர் மெய்கண்ட தேவரின்     
     சீடர் அருள் நந்தி சிவாசாரியார் (கி.பி. 1253 )
6 . உண்மை விளக்கம்- திருவதிகை மனவாசகம் கடந்தார். இனி வரும் எட்டு 
     நூல்களையும் இயற்றியவர் தில்லை வாழ் அந்தணர் மரபைச் சேர்ந்த 
     கொற்றவன் குடி உமாபதி சிவம் (கி.பி.1300 - 1325 ) இவை சித்தாந்த அஷ்டகம் 
    எனப் பெயர் பெரும்.
7 . சிவபிரகாசம்
8 . திரு அருட்பயன் 
9 . வினா வெண்பா 
10 .போற்றிப் பக்ரோடை
11 .கொடிக்கவி
12 .நெஞ்சு விடு தூது 
13 .உண்மைநெறி விளக்கம்
14 .சங்கற்ப நிராகரணம்.

        சைவ சித்தாந்தக் கொள்கையை முறைப்படி வகுத்துத் தத்துவமாக்கிய முதல் முயற்சியாளர் மெய்கண்டாரே ஆவார். இவரே திருக்கயிலாய பரம்பரையில் வந்த சந்தான குரவர்கள் நால்வருள் முதல்வர். அதனாலேயே இந்த நூல்கள் மெய்க்கண்ட சாத்திரங்கள் எனப்படுகின்றன. மெய்க்கண்டார், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகிய நால்வரும் சந்தான குறவர் எனப்படுவர். இவர் இயற்றிய சிவஞான போதமே இச்சாத்திர நூல்களுள் தலைமை சான்றதாய் விளங்குகிறது. காரணம் இதுவே சிவாகம அறிவும் திருமுறை ஞானமும் ஒன்றை ஒன்று-சிவம், அதன் உண்மை இயல்பை உணரும் அறிவு - ஞானம் அவ்வறிவினால் தெளிவடைந்து பெரும்பயன்- போதம். இதற்கு ஆகமாந்தம் என்றொரு பெயரும் உண்டு. இச்சிவஞான போதத்தைச் சிறப்பித்துக் கூறும் பாடல் ஒன்று.

வேதம் பசு; அதன்பால் மெய் ஆகமம்; நால்வர்
ஓதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதம்மிகு
நெய்யின் உருசுவையால் நீள்வெண்ணெய் 
மெய்கண்டான் 
செய்த தமிழ் நூலின் திறம்.

     இதன் பொருள்: வேதம் பசு; அதன் உண்மையான பால் ஆகமம்;
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பாடிய நற்றமிழ் 
அப்பாளிநின்றும் எழுந்த நெய்; அந்த நெய்யின் சுவைதான் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் இயற்றிய இந்தச் சிவஞான போதம் என்னும் செந்தமிழ் நூல். இந்நூல் வடமொழியில் உள்ள ரௌரவாகமத்தின் 73 -ஆம் பகுதியான பாபவிமோசனப் படலத்தின் 12 ஆம் அத்தியாயத்தின் மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு சிலரின் கருத்து.

அடுத்து நாம் சித்தாந்த மெய்ப்பொருள்கள்