Monday, February 11, 2013

இறைவனின் ஐந்தொழில்கள் 5

இறைவனின் ஐந்தொழில்கள் 5

5: அருளல் 

உயிர் மீது படிந்த பாசம் மடிந்தபின் ஞானம் பிறக்கிறது. உயிர் கடவுளை நாடுகிறது. தூய்மை அடைந்த ஆன்மாவை நிலையான இன்பம் அனுபவிக்குமாறு செய்வதே அருளல் எனப்படும்.

இறைவனின் ஐந்தொழில்கள் 4

இறைவனின் ஐந்தொழில்கள் 4

4: மறைத்தல் 

உயிர்கள் வினைப் பயன்களை ஒரே பிறவியில் தீர்த்துக் கொள்வது இயலாது. இதனால் உயிர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்க வேண்டியிருப்பதாயிற்று. இவ்வாறு பிறவி எடுப்பதில்  உயிர்கள் வெறுப்படையாது, பாசம் தேயுமளவு அவர்களின் வினைப்பயனை அனுபவிக்குமாறு, உயிர்களை அதில் ஆழ்த்துவதே மறைத்தல் எனப்படும்.

இறைவனின் ஐந்தொழில்கள் 3

இறைவனின் ஐந்தொழில்கள்3

3: அழித்தல் 

உயிர்களுக்கு இறைவன் அளித்த தனு, கரண, புவன, போகங்களை நீக்குதலே அழித்தல் எனப்படும்.

இறைவனின் ஐந்தொழில்கள் 2

இறைவனின் ஐந்தொழில்கள் 2

2: காத்தல் 

உடம்பு பெற்ற உயிரானது செய்த நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப, வினைப் பலனை அனுபவிக்க செய்தாலே காத்தல் எனப்படும்.



சிவலிங்கத்தின் சிறப்பு 5

சிவலிங்கத்தின் சிறப்பு 5

உலோகத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபட்டால் தர்மங்கள் வந்தடையும். பித்ரு சாபங்கள் நீங்கும்.

சிவலிங்கத்தின் சிறப்பு 4


சிவலிங்கத்தின் சிறப்பு 4


இரத்தினத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை வழிபட்டால் இலட்சுமி கடாக்ஷம் உண்டாகும். குபேரன் உங்கள் கூடவே வருவார்.

சிவலிங்கத்தின் சிறப்பு 3


சிவலிங்கத்தின் சிறப்பு 3


பவளத்தால் செய்யப்பட்ட சிவலிங்கத்தைப் பூஜித்தால் நிலையான செல்வப் பேறு உண்டாகும், வெற்றிமேல் வெற்றி கிட்டும்.

சிவலிங்கத்தின் சிறப்பு 2

சிவலிங்கத்தின் சிறப்பு 2

மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை போஜிப்பவர்கள், தான்விரும்பிய பொருளையெல்லாம் பெறுவார். கல்லினால் செய்யப்பட்ட சிவலிங்கத்தை அர்ச்சிப்பவர்கள் நினைத்த சித்திகளை அடைவர்.

சிவலிங்கத்தின் சிறப்பு

சிவலிங்கத்தின் சிறப்பு 

சிவலிங்க பிரதிஷ்ட்டை செய்த ஒருவனை பார்த்து, தானும் அதுபோல் சிவலிங்க பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று எவன் ஒருவன் விரும்புகின்றானோ, அப்பொழுதே அவன் பரமபுண்ணியனாகித் தான் செய்த பாவங்களை எல்லாம் ஒழித்து, முக்தி அடைவதற்குரிய தகுதியைப் பெற்று விடுகின்றான்.

இப்படித்தான் நீராட வேண்டும்.

இப்படித்தான் நீராட வேண்டும்.

குளிப்பதற்கு முன் இருகைகளாலும் தண்ணீரை அள்ளி சர்வ புன்னியதீர்தங்களையும் அதன் அதிபதி வர்ணதேவனையும் அன்புடன் அந்த கையில் உள்ள நீரில் வரும்படி கேட்டு, அந்த நீரை குளிக்கவைத்திருக்கும் வாலியில் ஊற்றவேண்டும், இது போல் மூன்று முறை செய்துவிட்டு, அந்த வாலி தண்ணீரிடம் , உங்களுடைய தேகத்தையும், பஞ்ச கோசத்தையும், அதாவது ஐந்து தேகத்தையும் ஆரோக்கியமாக இருக்க தூய்மை செய்யுமாறு கேட்டுவிட்டு, பின் குளிக்க வேண்டும். இதனால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள கண் திருஷ்ட்டி, மற்றும் நோய்கள் குணமடையும். இப்படித்தான் குளிக்க வேண்டும்.