கடவுட் கொள்கை
சத் (உண்மை) சித் (அறிவு) ஆனந்த (மகிழ்ச்சி) என்னும் மூன்று பண்புகளையும் சேர்த்துள்ள மிக உயர்ந்த பிரம்மம் தான், சிவதத்துவம். வீரசைவம், இதனை 'ஸ்தல' என்று குறிப்பிடுகிறது. இதற்கு இடம், நிலை, இருப்பிடம் என்றும் பொருள்கள் உண்டு. எல்லாப் பொருள்களுக்கும் இருப்பிடமாய் இருப்பது பரசிவம். அவருக்குள் இவ்வுலகம் இருக்கிறது(ஸ்த): இறுதியில் அவரையே சென்று அடைகிறது (ல). அவர் தனது விருப்பத்தின் பேரிலேயே லிங்கமாகவும் அங்கமாகவும் பிரிந்திருக்கிறார். அவரது சக்தியும் கலா (பகுதி) என்றும் பக்தி (அன்பு) என்றும் இரு பிரிவாய் இருக்கிறது. 'கலா' சிவத்தை நாடுகிறது. 'பக்தி' தனித்த ஆன்மாவைச்சேருகிறது. சிவத்தினின்றும் உலகத்தை வெளிப்படுத்தும் பணியைக் 'கலா' செய்கிறது. சிவத்திடம் ஆன்மாவைச் சேர்த்திடப் 'பக்தி' துணை நிற்கிறது.
'லிங்க ஸ்தல' ஆறு வடிவங்களில் வெளிப்படுகிறது. இவை 'ஷட் ஸ்தல (ஷட்-ஆறு) எனப்படும். இவ்வாறே 'அங்க ஸ்தல' என்பதும் ஆறு வடிவங்களைப் பெறும். ஒவ்வொரு வடிவ வெளிப்பாடும் நன்மையில் தொடங்கி மொத்த நிலையை அடைகிறது. ஒவ்வொரு லிங்க வெளிப்பட்டின்போது அதற்குப் பொருந்திய அங்க வெளிப்பாடும் தோன்றும். இதனால் இவ்விரண்டும் எல்லா நிலைகளிலும் பிரிந்திராத் தன்மை கொண்டுள்ளன என்னும் உண்மை புலப்படுகிறது. இந்த உண்மையின் மூலம் உணர்த்தபடுவது என்ன வெனில் இதன் இறுதி இலக்கு அங்கமும் லிங்கமும் ஒன்றாக சேர்வதே அதாவது ஒன்றுவது என்பதே.
'லிங்க ஸ்தல'
லிங்க என்பது சிவமே தவிர அவரை எந்த விதத்திலும் குறைக்கும் அடையாளம் அல்ல. லிங்க ஸ்தல - பாவலிங்க, பிராணலிங்க, இஷ்டலிங்க என மூன்று வகைப்படும். 1 .பாவ லிங்க என்பது பகுதிகள் (கலா) இல்லாதது.
நம்பிக்கையால் மட்டுமே உணரப்படுவது. சத் (உண்மை) ஆனா அது இடத்தாலும் காலத்தாலும் கட்டுபடாதது: உயர்ந்ததை விட மிகவும் உயர்ந்தது. 2 .பிராண லிங்க என்பது மனத்தாலேயே உணரக்கூடியது. பகுதிகள் உடையது. 3 .இஷ்ட லிங்க என்பது பகுதிகள் கொண்டது, ஆனால் கண்ணால் காணக் கூடியது. விரும்பிய பொருளை தரவல்லது, துயர்களை கலயவள்ளது; இது விரும்பி வணங்கப்படுவதால் இப்பெயரைப் பெறுகிறது. 'பிராணலிங்க' பேரான்மாவின் உணர்வு (சித்) என்றால் 'இஷ்டலிங்க ' மகிழ்ச்சி,இன்பம் ஆகும். முதலாவது மிகஉயர்ந்த தத்துவம். இரண்டாவது நுண்ணிய உருவம், மூன்றாவது மொத்த உருவம். இந்த மூவகை லிங்கங்களும் ஆன்மா, வாழ்க்கை, மொத்தம் என்னும் வடிவங்கள் கொண்டு, பயன் (பிரயோகம்), மந்திரங்கள், செயல் (கிரியை) ஆகியவற்றால் முறையே விவரிக்கப் படுகின்றன; கலா, நாத, விந்து என்னும் வடிவங்களைப் பெறுகின்றன. இந்த மூன்று லிங்கங்களும் மீண்டும் மூவகைபடுகின்றன. முதலாவது மகாலிங்க, பிர சாதலிங்க எனவும், இரண்டாவது சரலிங்க, சிவலிங்க எனவும், மூன்றாவது குருலிங்க, ஆசாரலிங்க எனவும் ஆகும்.
இந்த ஆறும் ஆறு வகைச் சக்தியினால் இயக்கப்பட்டு ஆறு வடிவங்களைப் பெறுகின்றன.
1 .சித்தின் ஆற்றலால் சிவா தத்துவம் இயக்கப்படும் போது மஹா லிங்க வடிவம் பெறுகிறது. இதன் சிறப்புத் தன்மைகள் பிறப்பு, இருப்பு, இன்மை, மலம் (களங்கம்) இன்மை, திரிபு இல்லாமை, ஆழமுடைமை, நம்பிக்கையாலும் அன்பாலும் உணரக் கூடிய தன்மை, கருத்தியலான்மை (சைதன்ய ரூப).
2 . சிவா தத்துவம் மிக உயர்ந்த ஆற்றலான பராசக்தியுடன் கலக்கும் போது சதாக்யம் என்னும் தத்துவம் வெளிப்படுகிறது. இது தான் ஒளிமயமானது, நித்தியமானது. பிரிக்க முடியாதது, புலன்களால் உணர முடியாதது, அறிவினால் உணரக்கூடியது, அழிவிலாதது. வளரும் குணம்கொண்ட ஆதி நிலையான இதுவே பிரசாதலிங்க.
3 .மூலாதார ஆற்றலால் (ஆதி சக்தி) சிவ தத்துவம் இயக்கப்படும் பொழுது சரலிங்கம் உருப்பெறுகிறது. இது வரம்பிலாதது, உலகெங்கினும் பரவி இருப்பது. முழுதும் ஒளிமயமானது. புருஷ எனப்படும் இது பிரதான அல்லது பிரக்ருதியினும் மேம்பட்டு, உயர்ந்து. உள்ளத்தினால் மட்டும் உணரக்கூடியது.

4 .இச்சா சக்தியினால் இயக்கமுறும் சிவதத்துவம் சிவலிங்கமாக வடிவம் பெறுகிறது. அகங்கார உணர்வு, அறிவு, ஆற்றல் ஆகியன கொண்டு தெய்வீக ஒளியும் அமைதியும் தவழுகின்ற ஒற்றை முகத்துடன் விளங்கும் இது வரம்புக்குட்பட்ட தத்துவமாகும்.
5 .அறிவு, ஆற்றல் (ஞான சக்தி) கொண்டு இயக்கப்படும் சிவதத்துவம் குருலிங்க வடிவம் ஏற்கிறது. அறிவு புகட்டும் கலை, அறிவியலுக்குத் தலைமை தாங்கி, முழு, ஒளியுடன், எல்லையற்ற மகிழ்ச்சிக் கடலில் திளைத்து மனித புத்தியில் உறைகிறது.
6 .செயல் ஆற்றலின் (கிரியா சக்தி) ஆளுமைக்கு ஆட்படும் சிவ தத்துவம் ஆசார லிங்க வடிவம் பெறுகிறது. இது தன்னுடைய செயற்பாட்டினால் எல்லாப் பொருள்களையும் தாங்கும் அடிநிலையாக இருக்கிறது. உள்ளத்தால் உணரப்படும், இதை துறக்க வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது.
மூல முழுமுதற் பொருள் தனக்கே உள்ள ஆற்றலினால் கடவுள் எனவும் ஆன்மா எனவும் பகுக்கப்பட்டு ஆறு வடிவங்களைப் பெறுகிறது என்பது, பரம்பொருளைப் பலவகையிலும் பார்க்கலாம். என்று கூறுவதாகும். முதல் வடிவம் வரம்பிலாப் பொருள், சுதந்திரத்துடன் இயங்குவது, இரண்டாவது மிக உயர்ந்த ஆற்றலினால் வளர்ந்து உருக்கொள்வது. மூன்றாவது இந்தச் சட உலகினின்றும் கடவுள் வேறானவர் என்று காட்டுவது, நான்காவது உடல் உருவம் கொண்டது. இந்த உடல் பொருள்களால் ஆனது அன்று; வைணவர்கள் கருதும் நாராயண, இராம, கிருஷ்ணர் போன்று தெய்வீக உடல் உரு உடையது. ஐந்தாவது மனித குலத்திற்கு அறிவு கொளுத்துவது. ஆறாவது தனித்த ஆன்மாவின் செயல்களை வீடு பெரும் வரை வழி நடத்த உதவுவது. இந்த வடிவில் சிவன் இரட்சகர் ஆகிறார்.
'அங்க ஸ்தல'
இனி அடுத்த தொடரில் 'அங்க ஸ்தல' பற்றி பார்ப்போம்.