Sunday, March 17, 2013

துன்பத்திலிருந்து விடுதலை. ஸ்ரீ பகவான் பதில்

கேள்வி : ஸ்ரீ பகவன். இந்த உலகத்தில் துன்பமில்லாத வாழ்க்கை உள்ள மனிதர்களே இல்லை. அப்படி துன்பமே இல்லாத வாழ்க்கையை பெற நாம் என்ன செய்யவேண்டும் பகவான் ?

ஸ்ரீ பகவான் பதில்? அது மிக மிக சுலபம். இந்த கொள்கைகளை கடைபிடித்தால் போதும்.

துன்பத்தில் இருந்து விடுதலை பெற கடைபிடிக்க வேண்டிய 7 சத்தியங்கள் .


1. அனைததுமே  ஒன்றே ஒன்றிலிருந்து தான் தோன்றியது. அதை கடவுள் என்றோ அல்லது எதோ ஒரு சக்தி என்றோ சொல்லலாம். அதற்கு ஆரம்பமோ முடிவோ கிடையாது.


2. இதை உணர்ந்துவிட்டால், உணர்ந்தவர் நல்லது, கேட்டது, சரி, பிழை என்று வித்தியாசப்படுத்தி பார்க்க தெரியாது.  இவை அனைத்தும் நாம் பார்ப்பதில் தான் இருக்கிறது. இவை அனைத்தும் அந்த ஒன்றிலிருந்து தோன்றியதே.

3. வாழ்க்கை என்பது உங்களை நீங்கள் உணர்வதைத் தவிர வேறொன்றும் இல்லை. உங்களுடைய வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு செயலிலும், பார்க்கின்ற ஒவ்வொருவரிலும் நீங்களே பிரதிபலிக்கின்றீர்கள். நீங்கள் வறுமையில் வாடுகின்றீர்கள் என்றால், உங்களில் ஏதோ பிழை இருக்கின்றது. அதை முதலில் சரிசெய்தாள் தான் நீங்கள் அந்த வறுமையிலிருந்து வெளிவரமுடியும். உங்களுக்குள் ஏதாவது  வெறுப்பு இருந்தால். அது நீங்கள் பார்க்கும் ஒவொருவருக்குளிருந்தும் அது உங்கள் மீது வெளிப்படுத்தப்படும். உங்களுக்குள் கெட்ட  எண்ணங்கள் இருந்தால் நீங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் கெட்ட எண்ணம் உள்ளவர்களாக இருப்பார். ஆகையினால் முதலில் உங்களை புரிந்துகொள்ளுங்கள்.

4. உங்களுடைய இந்த வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் இறைவனின் அருளாலேயே நடக்கின்றது என்பதை உணருங்கள். நடக்கும் பொது உங்களின் கால் தடக்குப்பட்டால் கூட அதுவும் கடவுளின் அருளாலேயே நடக்கின்றது என்று உணருங்கள். இப்படி அனைத்திலும் கடவுளைப் பார்த்தீர்களேயானால், உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக மாறிவிடும்.

5. உங்களின் வாழ்க்கையில் ஏற்ப்படும் ஒவ்வொரு அனுபவமும் இறைவன் உங்களுக்கு வைக்கும் ஒவ்வொரு சோதனை என்று உணருங்கல், ஆகவே அது ஒரு கெட்ட அனுபவமாக தெரியாது. அப்படி அது கெட்ட அனுபவமாக நினைத்தால் கடவுள் இரக்கமற்றவர் என்று அமைகின்றது. அப்படி அல்ல. கடவுள் உங்களுக்கு அப்படி ஒரு சோதனையின் மூலம்  அந்த பிரச்சனையை சந்தித்து அதிலிருந்து வெளிவரும் வழியை உங்களுக்கு கற்றுத்தருகின்றார். இதன் மூலமாகவே உங்களுக்கு உறவுகளையும், செல்வத்தையும், நம்பிக்கையும், வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தியையும் கொடுக்கின்றார். இதை நீங்கள் விளங்கிகொண்டால், உங்களின் நம்பிக்கை அதிகமாகும். உங்களின் நம்பிக்கையை சோதிக்கவே, கடவுள் இந்த சோதனைகளை வைக்கின்றார்.

6. இப்படி இது கடவுளால் வைக்கப்படும் சோதனை என்பதை நீங்கள் உணரும்போது, உங்களால் உங்களின் பிரச்சனைகளை மிக ஆழமாக பார்க்க முடியும். அதனால் அதிலிருந்து வெளிவருவதர்க்கோ அல்லது அதை எப்படி கையாள வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். அத்துடன்  அந்த பிரச்சனையின் முடிவு எதுவாக இருக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியும். எந்த பிரச்சனைக்கும் முடிவு முன்கூட்டியே தெரிந்தால், நமக்கு பயம் என்பது ஏற்படாது.

7. நீங்கள் இந்த ஆறு சத்தியங்களையும் விளங்கிகொண்டால். உங்களின் உடலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இதன் பலனாக நீங்கள் கருணையுள்ளவராக மட்டும் இல்லாமல் கருணையின் உருவமாகவே மாறிவிடுவீர்கள். இது தொடர்ந்தாள் உங்கள் உறவுகள் வழுவடையும், உங்களுக்கு பயமோ, துக்கமோ இருக்காது. உங்களிடம் ஆனந்தம் மட்டுமே இருக்கும். இதனை உங்களின் அறிவுப்பூர்வமாக ஆராய்ச்சி செய்யாமல், இந்த சத்தியத்தை ஆகக்குறைந்தது 21 நாட்கள் பின்பற்றினால், நீங்கள் பார்க்க இருப்பது பேரானந்தம் மட்டுமே.
எங்களிடம் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், எங்களிடம் இருக்கும் பயத்தையும் துக்கத்தையும் மட்டுமே நாம் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கின்றோம். ஆகையினால் தான் நம் பூமித்தாய் மடிந்துகொண்டிருக்கின்றாள். நீங்கள் பேரானந்தத்தை அனுபவித்தால், நீங்கள் அப்போதுமட்டும்தான் ஆனந்தத்தை உலகுக்குபரப்பமுடியும்.  

ஸ்ரீ அம்மா பகவானின் திருப்பாத கமலங்களே சரணம்.

Monday, March 4, 2013

ஸ்ரீ பகவானின் மகாவாக்கியம் Part 1

முக்தி அடைந்த ஒருவரைப் பற்றி ஸ்ரீ பகவானின் மகாவாக்கியம்.

முக்தியடைந்தவர் சும்மா இருப்பார். ஒன்றும் செய்யாமல் இருப்பார். 
இதை நீங்கள் பயிற்சி செய்யக்கூடாது.

காரணம் 

முக்தியடைந்தவர் நிலை காலியாக இருக்கும். ஆகவே அவர்கள் அதற்கு தகுதியுடையவராக இருக்கின்றார்,  மனம் காலியாக இல்லாத ஒருவர் காலியாக்க முயற்சி செய்வது இயலாத செயல்.

முக்தியடைந்தவர் அனைத்தும் இருந்தும் அவற்றில் பற்று இல்லாமல் இருப்பார்.இதை ஒருவர் தன முயற்சியால் அனைத்தையும் விட்டு விலத்தி இருக்க முயற்சி செய்வது பற்றற்ற நிலை அல்ல.

முக்தியடைந்தவர் உலகத்தை தாமாகவே நினைப்பார். பார்ப்பார். அனைத்திலும் அன்புடனும் கவனத்துடனும் இருப்பார். அவருக்கு இந்த உலகத்தில் இருப்பது அனைத்தும் சரியாவே இருப்பதாக தோன்றும். இருப்பதை அப்படியே ஏற்பார்கள். மாற்றமுயற்சி செய்யமாட்டார்கள்.

முக்தியடைந்தவர் தான் எதையும் செய்ய முயற்சி செய்யமாட்டார்கள் ஆனால் அனைத்தும் தாமாகவே நடக்கும். எது நடக்கிறதோ அதை அப்படியே நடக்கவிடுவார்கள். வருவது வரட்டும் போவது போகட்டும் என்பதுபோல். அதாவது அனைத்தும் அவர்கள் வாழ்கையில் மேகம் போல் வந்து போகும். அனைத்தையும் எந்த முயற்சியும் இல்லாமல் பார்த்துகொண்டு இருப்பார்.

முக்தியடைந்தவர் எப்பொழுதும் எதற்கும் தயாராக இருப்பார். ஆகவே அனைத்தும் சரியாகவே நடக்கும்.

முக்தியடைந்த ஒருவர் பிரபஞ்சம் தோன்றும் முன் எது இருந்ததோ, எபோழுதும் எது தொடர்ந்து இருக்குமோ, எது பிறப்பு, இறப்பு, தொடக்கம் ,
முடிவு இல்லாததாக உள்ளதோ அதுவாகவே இருப்பார்.

முக்தியடைந்தவர் அனைத்தும் தானாகவே சரியாக நடக்கும் வரை எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பார். அது அவ்வாறே சரியாக நடக்கும்.
இவர்கள் அனைத்து கண்ணோட்டத்திற்கும், சட்டதிட்டங்களுக்கும் அப்பார்ப்பட்டவர்கள். எது இருக்கிறதோ அதுவாகவே ஏற்பார்.

முக்தியடைந்தவர் பயணம் அவர்கள் பயணிக்காமலேயே பயனமாவர்.

முக்தியடைந்தவர் அனைத்து சூழ்நிலைகளுக்கும் தயாராக இருப்பார் ஆகவே அனைத்தும் அவர்களுக்கு சாதகமாகவே நடக்கிறது..


முக்தியடைந்தவர் காலியாகவே இருப்பதால் உலகத்தில் எதுநடந்தாலும் அதை அப்படியே ஏற்கக்கூடியதாக உள்ளது.

முக்தியடைந்தவர் உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்கின்றார்கள், ஆகவே தாமே உலகமாக உணர்கின்றனர்.

முக்தியடைந்தவர்களுக்கு தான் செய்வதான எண்ணமே இல்லை, அதோடு தன்னால் தான் அனைத்தும் நடக்கிறது என்ற எண்ணமும் இல்லை. அவர்கள் வெறும இயற்கையோடு ஒத்து வாழ்கின்றனர்.


முக்தியடைந்தவர்கள் உலகத்தை மாற்ற முயற்சி செய்வதில்லை, அவர்களுக்கு உலகம் மிக சரியாகவும் மிக புனிதமானதாகவும் இருக்கிறது.

முக்தியடைந்தவர் இருப்பதை அப்படியே ஏற்பார், எதையும் சரி செய்யவோ, மாற்றியமைக்கவோ முயற்சிக்கமாட்டார்கள். யாருக்கும் எந்தவிடயத்தையும் விளங்கவைக்க வாதிடமாட்டார்கள். 
இவர்களுக்கு எது நடக்கவேண்டுமோ அது கட்டாயம் நடந்தே தீரும் என்றும், எது நடக்காதோ அது கட்டாயம் நடவாது என்று வடிவாகத்தெரியும் . இந்த பிரபஞ்சம் எப்பொழுதும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை  என்பதை உணர்ந்துள்ளனர்.


முக்தியடைந்தவர் எந்த திட்டமும் குறிக்கோளும் இல்லாமல் இருப்பார். 
இவர்கள் தன நிலையை, தன்னை உணர்ந்துள்ளனர், ஆகவே இந்த 
உலகமும் இவர்களை முழுமையாக ஏற்கின்றது.
இவர்கள் தன்னை அறிந்திருப்பதே ஞானம். இவர்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லாமலிருப்பதே இவர்களின் முழு பலம். இவர்கள் மரணத்தை தழுவிய நிலையிலேயே இருப்பதால், இவர்களுக்கு மரணம் என்பதோ, மரணபயம் என்பதோ கிடையாது.

 முக்தியடைந்தவர்களுக்கு கற்றுக்கொள்வதற்கு என்று ஒன்றும் இல்லை என்பது நன்கு தெரியும், செய்யவேண்டியது ஒன்றுதான்  எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பதே.

முக்தியடைந்தவர் சாதித்தது என்று ஒன்றும் இல்லை, சாதிக்கவேண்டியது என்று ஒன்றும் இல்லை.

முக்தியடைந்தவர் விளங்கிக்கொண்டது என்று ஒன்றும் இல்லை. அவர் விளங்கிக்கொள்ளவேண்டியது என்று ஒன்றும் இல்லை.

முக்தியடைந்தவருக்கு ஒன்றும் தெரியாது, தெரிந்துகொள்ளவேண்டியது என்று ஒன்றும் கிடையாது.

முக்தியடைந்தவர் எதையும் தடுப்பதோ, கண்டுகொள்ளாமல் விடுவதோ அல்லது, எதிர்ப்பதோ மதிப்பிட்டுப்பார்ப்பதோ, கிடையாது,  அனைத்தையும் அப்படியே சாட்சியாக பார்த்துக்கொண்டு இருப்பார்.

முக்தியடைந்தவர் எதுவும் செய்யமாட்டார், ஆனால் இவர்களைசுற்றி அனைத்தும் சரியாகவும் முழுமையாகவும் நடந்து கொண்டே இருக்கும்.
  
எண்ணங்கள் என்பது நுட்பமான,ஒன்றுடனொன்று தொடர்பில்லாத , உறுதியில்லாதது.இது  எண்ணத்தின் உரிமையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப வெளிப்படுகின்றது. இவை மனதில் பிரச்சனைகளையும் குழப்பங்களையும் மதிப்பீடுகளையும் உண்டாக்குகின்றன. இதனால் நாம் மகிழ்ச்சியடைவதர்க்கான விழிப்புணர்வு இல்லாமல் செய்துவிடுகின்றது.
ஆகவே  முக்தியடையாதவர்கள் இந்த மனதை எப்படி வழிநடத்துவது, எப்படி கையாண்டு, என்னங்களிலிருந்து எப்படி விடுபட்டு வெளிவருவது என்பதை பயின்று, எண்ணங்களிலிருந்து விடுபடவேண்டும்.
முக்தியடைந்தவர்கள் எதையும் மதிப்பிட்டு பார்க்காத நிலையில் இருப்பதால் அவர்கள் முக்திநிலையை அடைந்தனர்.

அம்மா பகவான் சரணம்.