Monday, April 4, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 3

ஆன்ம விடுதலை 

முழுமுதற் பொருளான சிவத்துடன் முழுவதுமாக கரைந்து இருப்பதே  தனித்த ஆன்மா, இருந்தபோதிலும் தன்னுடைய இயல்பினை  (சொரூபத்தை) மறந்து சம்சாரத்தில் கிடந்தது உழல்கிறது. அந்த ஆன்மாவினை அதன் உண்மை நிலைக்குக் கொண்டு வருவதுதான் பிரத்யபிஜ்ஞா நெறியின் நோக்கமாகும். இதற்குரிய வழி, அதுதான் பரம்பொருளுடன் ஐகியம்மண நிலையில் இருப்பதை உணர்த்துவது தான். இதனை ஓர் எகிக்ஹ்கக்க்ட்டின் மூலம் உணர்த்தலாம்.
     வீரன் ஒருவனுடைய நற்குணங்களைக் கேள்விப்பட்ட ஒரு இளம் பெண், அவனைக் காணாமலேயே காதல் கொள்கிறாள். அவனைப் பார்க்க வேண்டும் என ஏங்குகிறாள். ஆகவே தனது விருப்பத்தை கடிதம் மூலம் எடுத்து உஅரைக்கிறாள். அவனும் வந்தான், அவனுடைய குணங்களை மட்டும் அறிந்திருந்த அவள், அவனை இதற்கு முன்னர் கண்டிராததால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. பின் தன தோழியர் எடுத்து சொன்னதும் அவனைப் புரிந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தாள். அதைப்போல, இந்தத் தனித்த ஆன்ம அந்த பேரான்மாவான பரம்பொருளுடன் ஒன்றிணைந்த ஒன்றே என்னும் உண்மையினை உணர்ந்துகொள்ளும் வரைக்கும் முழுமையான நிறைவு அடையமுடிவதில்லை. மகேஸ்வரனுடைய முழு நலன்களும் எல்லாம் வல்ல தன்மையும், அதை முழுமையாக அறிந்து உணரும் தன்மையும் போன்ற பல குணங்களும் எம்மிடமும் உள்ளது என்பதை சரியான குருவின் மூலம் உபதேசம் செய்யப்பட்டதும், நாம் ஆகிய தனித்த ஆன்மா தன்னை அடியாளம் கண்டு கொண்டு தன் இயல்பான முழு நலத்தையும் அடைகிறது.   

வீடு பேரு 


இத்தாகைய நிலையடைந்து ஆன்மா ஆதிநிலையான முழுமைக்கும் தூய உணர்தலுக்கும் திரும்புவதுதான் மோட்சம் (முக்தி, துரியா, ஸ்வர்க்கம்)என்கிறது காஷ்மீர சைவம். 'இப்படிப் பண்புகளைப் பற்றிய கற்பனை மறைந்ததும் (கட்டறுத்த ஆன்மாவான) அவன் மாயையின் திரிபுக் காட்சிகளை ( உண்மை என நினைத்து அவன் இவ்வளவுகாலம் செய்து வந்த அனைத்தும் போலியானவை என்று உணர்ந்ததும்) வென்றவனாகின்றான். அவன் பிரம்மத்தோடு நீருடன் நீரும், பாலுடன் பாலும் கலப்பது போல் ஒன்றாகிறான். சிவம் என்னும் முழுமுதற் பொருளுடன் இணைந்த அவனைத் துயரமும் மருட்சியும் ஆட்பருத்தமுடியாது ஏனெனில் அவனும் பிரம்மமாய் இருந்து இந்தப் பிரபஞ்சத்தையே அன்றோ பார்த்துக் கொண்டிருக்கிறான்? என்கிறார் அபிநவகுப்தர். 

ஆன்ம விடுதலைக்குத் தடைகள்

காஷ்மீர சைவத்தில் தனித்த ஆன்மா பரம் பொருட் பேரான்மாவுக்கு ஒத்த நிலையுடையது. ஆனால் மலங்களின் ஆளுமையால் ஆன்மாவால் இதை உணரமுடிவதில்லை. இம்மலங்கள் மூவகைப்படும். ஆன்மா அறியாமையினால் தன்னுடைய பொது இயல்பினை மறந்து, தன்னை மிககுரையுள்ளதாகக் கருதி, தனதல்லாத எல்லபோருட்களையும் தனதாய் நினைத்து ஒரு வரம்புக்குட்பட்டுத் தன்னைத்தானே சிறுமைபடுத்திக் கொள்வது ஆணவ மலம். ஆன்மாவின் உடலில் தோன்றும் மற்றக்கலங்கங்கள் பொருட்களை உருவாக்கும் வல்லமை படைத்த மாயாவினால் தோன்றும் மாயா மலம். நம் உள் உறுப்புகள் அல்லது இதயம் போன்றவற்றால் நிகழும் செயல்களால் ஏற்படும் மலம், கன்மம் ஆகும். சிவனின் நாத என்னும் பெண்மைக்கூறான முதன்மைச் சக்தியால் தொழிற்படுத்தப்படும் பொது பேச்சு நிகழ்கிறது. பேச்சில்லை என்றால் கருத்துக்கள் இல்லை. உலக வாழ்க்கை, உலக வாழ்க்கை இல்லை, மலங்களின்  தோற்றம் பேச்சிலேயே தொடங்குகிறது. இந்த நாத சக்திக்குப் பெண்ணுருவம் தந்து அம்பாள், அம்பா, ஜ்யேஷ்டா, ரௌத்ரி, வாமா, எனப்படுகிறாள். இறைவனை ஆழ்ந்து சிந்திப்பதன் பயனாகப் பரம்பொருளின் பார்வை நம்மில் படுகிறது . அப்படி படவே மலங்கள் களையப் பெற்று  வரம்புக்குட்படும் தன்மையும் நம்மை விட்டு நீக்கப்படுகிறது. இத்தகைய நிலைமை நிலைத்து இருக்கும் போது தனித்த ஆன்மா சுதந்திரனாகி பரம்பொருட் பெரான்மாவாகிறது. இந்தப் பரம்பொருட் பார்வை பைரவ எனப்படுகிறது. இப்பார்வை அவருடையதாகவும் அவரால் உண்டாக்கப்படுவதாலும் இப் பெயர் பெறுகிறது. 

அடுத்து நாம் காண இருப்பது  வீர சைவம்.