Monday, January 17, 2011

பிரதோஷ விரதம்

பிரதோஷ விரத மகிமை:
பிரதோஷ விரத மகிமை 
          எம் ஞான குருவாகிய அந்த யானை முகத்தான், விக்கினங்கள் அகற்றும் விநாயக பெருமானின் திருப்பாத கமலத்தில் அடியேனின் சிரம் பதித்து வணங்கி இந்த அருத்த்தொகுப்பைத் துவங்குகிறோம்.

முதலில் நாம் வாழும்காலத்தில் வாழ்ந்த சிவஞானப்பழமாம், சிவசக்தி சொரூபம் கொண்ட, கருணைக்கடலாம், எல்லோராலும் மஹா பெரியவர் என்று பயபக்தியுடன் அழைக்கப்படும், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தம் திருவாயால் மலர்ந்தருளிய பிரதோஷ தத்துவம் பற்றி பார்ப்போம்.

 



 
           காஞ்சி மஹா பெரியவர் அருளிய பிரதோஷ தத்துவம்.
பிரதோஷ காலம், சூர்யஷ்த்தமனத்தோடு ஆரம்பிக்கிறது. பிரதொஷகாலம் பரமேஸ்வரனை தியானம் செய்வதற்குத் தகுந்த காலமாகும். ஈஸ்வரன், உயிர்களை தன்வசப்படுத்திக் கொள்ளும் காலம், இது மிகவும் விசேஷமாகும்.


இந்த காலத்தில் உலகம் ஒடுங்குகிறது, மனசும் ஈஸ்வரனிடம் ஒடுங்க அதுவே நல்லநேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம். சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம். வில்லைவிட்டு அம்பு சென்றுவிட்டாலும், மந்திர உச்சாடன பலத்தால் அந்த அம்பை உபச்ம்ஹாரம் செய்வது போல், ஈஸ்வரன் தான் விட்ட சக்தியை எல்லாம் தன் வசப்படுத்திக் கொகிறான்.

பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக்கொல்வதால் வேறொரு உயிரும் இல்லாத நேரமாக அது அமையும். உதயத்தில் சிருஷ்டியும், பிரதோஷகாலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. ராத்திரி ஆரம்பத்தைத்தான் பிரதோஷகாலம் என்கிறோம். அதனால் தான் இரவு நித்யப்ரலய காலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவொருநாளும் நித்ய சிருஷ்டியும் நித்ய பிரளயமும் நடக்கின்றன.

அந்தக் காலம் தான், சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்கு தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்ய பிரளய நேரத்தில் நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம், அதில் லயித்து விடுகிறது. அப்போது சஞ்சாரம் செய்யும் பூதப்பிசாசுகள் கூட அந்த நர்த்தனத்தில் லயித்து, யாருக்கும் உபத்திரவத்தைக் கொடுக்கமாட்டா. அது கண்கட்டு வித்தை போல் நடக்கிறது. கூத்தாடி யாருடைய கண்களையும் கட்டுவதில்லை. ஆனால் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நம் மனசையும் கண்களையும் வேறொன்றில் ஆகர்ஷித்து விட்டு, தான் செய்வதைச் செய்துவிடுகிறான்.

உஷாக்காலத்தில் ஹரி ஸ்மரனையும், சாயங்காலத்தில் சிவநாம ஸ்மரனையும் உகந்தாவை. நடராஜ மூர்த்தியின் நாமாவை உச்சாடனம் செய்வதற்கு  பிரதோஷ் வேலைதான் சிறந்தது.

இப்படி சிவனை வழிபடுவதற்குத்தான் கோவில்களைக் கட்டினார்கள். சிவ பஜனை செய்வதற்கு எல்லோருக்கும் அவரவர் வீட்டில் வசதி இருக்காது. அதற்காகத்தான்  பெரும் சிவன் கோயில்களைக் கட்டினார்கள். பிரதோஷ வேளைகளில், பரவேச்வரன் உலக சக்தி முழுவதையும் தன்வசம் ஒடுக்கிக் கொண்டு, நர்த்தனம் செய்யும் வேளையில், நாம் ஈஸ்வரனையே வழிபட்டுக் கொண்டு இருக்கவேண்டும். 
---------------------------------------------------------------------------------------- 

 தொடரும். ..

பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?

பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?
ஆசனம்
நீண்ட நேரம் அமர்ந்து பிராணாயாமம் செய்ய சிறந்த இருக்கை முறை (ஆசனம்) மிகவும் முக்கியம். ஆசனம் மொத்தம் 126 நிலைகள் உள்ளன. அவற்றில் 8 சுகாசனம் எனப்பெயர்படும். அவை பத்மம், பத்திரம், கோமுகம், கேசரி, சௌத்திரம், வீரம், சுகாதனம், சுவத்திகம் என்பவை.
------------------------------------------------------------------------------------------------------
பங்கயம் ஆதி பரந்தபல் ஆசனம் 
அங்கு உளவாம்  இரு நாளும் அவற்றினுள் 
சொங்கு இல்லை யாகச் சுவத்திகம் எனமிகத் 
தங்க இருப்பத் தலைவரும் ஆமே.
 (திருமந்திரம் 558 )
-----------------------------------------------------------------------------------------
பிராணாயாமம் 
 16 மாத்திரைகள் அளவு இடது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, 64 மாத்திரைகள் அளவு உள்ளடக்கி, 32 
மாத்திரைகள்  அளவு வலது நாசி வழியாக வெளிவிட 
வேண்டும். 
----------------------------------------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல்  கும்பகம் அறுபத்து நாலதில்
உறுத்தல் முப்பத் திறந்ததில் ரேசகம் 
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே 
(திருமந்திரம் 568 )
---------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் - உள்ளிழுத்தல் - எரெட்டு = 16 மாத்திரைகள்
ஆறுதல் கும்பகம் - அடக்குதல் -64 மாத்திரைகள் 
ஊறுதல்  இரேசகம் - வெளிவிடுதல் - 32  மாத்திரைகள் 
மாறுதல் - இடது நாசி, வலது நாசி என மாறுதல்.
-------------------------------------------------------------------------------------------------

பிறகு வலது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, இடது நாசி வழியாக 
வெளிவிட வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த 16:64:32 என்ற கணக்கில் பயிற்சி 
செய்வது இயலாத காரியமாகலாம். எனவே, 4:16:8  
என்ற கால அளவில் துவங்கி, படிப்படியாக நேரத்தை 
அதிகரிக்கலாம்.

மேல்  எனப்படும் தலை, கண், காதுகளும் கீழ் எனப்படும் 
 கால், பெருவிரல் முதலியவைகளும், நடு எனப்படும் 
 நெஞ்சகம், கொப்பூழ் முதலியவைகளும் நிறையுமாறு 
 மூச்சை உள்ளிழுத்தல் வேண்டும். அவ்வாறு உளிழுத்த 
மூச்சை  உள்ளே தங்கச் செய்து அளவோடு வெளியிட 
வேண்டும். அவ்வாறு செய்ய ஆலாலம் உண்டான் - சிவன்
அருள்பெறலாமே.
---------------------------------------------------------------------------------------------------
மேல்கேழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப் 
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து 
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே 
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
(திருமந்திரம் 572 ) 
------------------------------------------------------------------------------------
பிராணாயாமம் செய்ய ஏற்ற நேரம் எது?
என்பதை நாம் நாள் 5 இல் காண்போம்.