Friday, April 22, 2011

சைவத்தின் சரிதம். 7

ஆன்ம விடுதலை 

                 தனித்த ஆன்மா, சிவத்தின் ஒரு பகுதி (அம்சம்) தான். ஆகவே, சிவத்திடமிருந்து புறப்பட்ட அது, சிவசாராம்சத்தில் பங்குகொண்டு, இறுதியில் சிவத்திடமே சென்று சேர்ந்து அமைதியைக் காண்பதே அது தன்னைச் சிவத்திடமிருந்து வேறுபட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறது. அறிவு கொளுத்தப்பட்டதும் அறியாமை நீங்கப்பெற்றுத்தான் சிவத்தைச் சார்ந்தது என்பதை உணர்ந்து வீடு பெற முனைகிறது. அது சிவத்திடம் இருந்து வேறுபட்டதில்லை என்றாலும் சிவத்துடன் ஒத்ததும் அல்ல. இந்த இரண்டுக்கும் உள்ள இந்தத் தொடர்புதான் பேதாபேதம் ( பேதம்+அபேதம்) வேற்றுமையில் ஒற்றுமை எனப்படுவது. ஆன்மாவின் இறுதி நோக்கம் இந்த தொடர்பினை உணர்ந்து கொள்வதுதான். இப்படி உணர்தலே சேர்க்கை (ஐக்கியம்) ஆகும். இந்தச் சேர்க்கையினால் ஆத்மா ஈடிணை இல்லாத இன்பத்தை அடைந்து மகிழ்கிறது. இந்த அனுபவத்தின் இறுதி நிலையே 'லிங்க சாமரஷ்ய' என்பது; அதாவது லிங்கத்துக்கும் (சிவம்) அதன் பகுதியான அங்கத்துக்கும் (ஆன்மா) இடையில் உண்டாகும் அகநிலை முற்றொருமை என்பது.

விடுதலைக்கு வழிகள் 

              வீரசைவ நெறியில் விடுதலைக்கு வழிவகுக்குமிடத்து மூவரைக் குறிப்பிடுகிறது. அவர்கள் குறு, ஜங்கம, லிங்க ஆகியோர். நல்லாற்றுப்படுத்தும் ஆசிரியனே குரு, உய்வு பெற்ற நல்லான்மாக்களே ஜங்கம. முதலிலேயே குறிப்பிட்ட சிவ பரம்பொருளே லிங்க வீடு பேற்றை விழைபவன் இம்மூவரிடத்தும் சரண் புக வேண்டும்; தெய்வ அருளைப்பெற வணங்கி வழிபட வேண்டும்; அத்துடன் தன்னை இவர்களுடன் முற்றோருமைப் படுத்திக் கொள்ளவேணும்.
இந்த முற்றோருமைப் பேற்றை அடையவிரும்புபவன் 'அஷ்டாவறன' என்னும் எட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டும்;
1 . குருவுக்குப் பணிந்து நடத்தல். 
2 . லிங்க வழிபாடு 
3 . ஜங்கமத்திர்க்குப் பணிவு
4 . திருநீறு (விபூதி) பூசுதல்
5 . ருத்திராட்ச மாலை அணிதல் 
6 . குரு அல்லது ஜங்கம ஆகியோர் பாத தீர்த்தம் பருகுதல் (பாதோக)
7 . குரு, ஜங்கம, லிங்க ஆகியோருக்கு உணவிட்டு எஞ்ஞியத்தை உண்ணுதல்                     
      (பிரசாத) 
8 . நமச்சிவாய என்னும் பஞ்சாச்சர மந்திரத்தை உச்சரித்தல். இவற்றின் மூலம்   ஆன்மிக முதிர்ச்சியைப் பெரும் ஆன்மா உய்வடைந்து இறைவனிடம்   
இணைகிறது.

அடுத்து நாம் பார்க்க இருப்பது சைவ சித்தாந்தம்