பிராணாயாமம் என்றால், பிராணனை பற்றிய அறிவு மற்றும் அதை நமது வயப்படி அடக்குதல் என்று பொருள்.
பிராணாயாமம் செய்வதால் என்ன பயன்?
நாம் வாழும் இந்த மனித உலகம், மற்றும் அண்ட வெளியெங்கும், பிராணன் எனும் எல்லையற்ற சக்தியால் நிரம்பியுள்ளது.
அந்த பிராணன் தான், நம்மை, நமது உடம்பை, நமது உயிரை இயக்குகிறது. உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை உயிர்மூச்சு என்கிறோம்.
ஆக, நாம், நமது மூச்சை (இடது நாசி, வலது நாசி) இறைவன் அருளோடு, கட்டுப்பருத்தி அடக்குவதன் மூலம், பிராணனை வசப்படுத்த முடியும்.
ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்இல்லை
கூறிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
(திருமந்திரம் 565 )
பறவையைவிட, வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராணனாகிய குதிரையை நம் வசப்படுத்திக் கொண்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலையை உணரமுடியும், சுறுசுறுப்பும், துள்ளலும் தானே ஏற்படும்.
புள் எனும் ஒரு வகை பறவை, குஞ்சுபோரித்தவுடனேயே, வேகமாக பறக்கும் தன்மையுடையது, அதுபோலதான் நமது மூச்சும்.
புள்ளிரும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடையார்க்கே.
(திருமந்திரம் 566 )
பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?
இதை நாம் நாள் 4கில் காண்போம்.