Sunday, March 27, 2011

திருச்சிற்றம்பலம் 6

திருக் கேதீசுரப் பதிகம்
1    
விருதுகுன்றமா மேருவினாணர வாவன லெரியம்பாப்
போருதுமூவெயில் செற்றவன்பற்றிய நின்றுரைப்பதியெந்நாளாம்  
கருதுமூவெயில் கனைகடர்கடிகமழ் பொழிலனிமா தோட்டம்
கருதநின்றகே தீச்சரங்கைதொழக் கடுவினையடையாவை 
பாடல்வீனையர் பல பலசரிதைய ரெருதுகைத்தரு நட்டம்
ஆடல் பேனுவரமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர் 
இடமாவது விருங்கடற்கரையினி லேழிறிகழ் மாதோட்டம் 
கேடிலாதகே தீச்சரந் தொழு தெழக் கெடுமிடர் வினைதானே 
பெண்ணோர் பாகத்தர் பிறை தவழ் சடையின ரறைகழல் சிலம் பார்க்கச்
சுன்னமாதிரித் தாடுவர் பாடுவ ரகந் தொறு மிடுபிச்சை 
ருண்ணலாவதோ ரிச்சையினுழல் பல ருயர் தரு மாதோட்டத் 
தண்ணனண்ணுகே தீச்சரமடைபவர்க் கருவினையடையாவே 
பொடிகொண்மேனியர் புலியதளரையினர் விரிதருகரத் தேந்தும் 
விடிகொண் மூவிலை லேலினர் நூலினர் மறிகடன் மாதோட்டத் 
தடிகளாதறித் திருந்த கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி 
முடிகள் சாய்த்தடி பேணவல்லார் தம் மேன் மெய்த்தெழும் வினைபோமே 
நல்லராற்றவு ஞான நன்குடயர்தம் மடைந்தவர்க் கருளிய 
வல்லார்பார்மிசைவான் பிறப்பிப்பிலர் மலிகடன் மாதோட்டத் 
தேல்லையில்புகழந்தை கேதீச்சர மிராப்பகனினைந்தேத்தி
அல்லலாசறுத் தரனடியினை தொழுமன் பராமடியாரே 
பேழைவார்சடைப் பெருந்திரு மகடனைப் பொருந்தவைத்தொரு பாகம்
மாழையங்கயற் கன்னிபாலருளியர் பொருளினர் குடிவாழ்க்கை 
வாழையம் பொழின் மந்திகள் களிப்புற மருவியமா தோட்டக் 
கேழல்வேண் மருப்பணிந்த நீண்மார்பர்கேதீச்ச்சரம் பிரியாரே 
பண்டுநால்வருக் கரமுரைத்தருளிப்பல் லுலகினிலுயிர் வாழ்க்கை 
கண்டனாதனார் கடலிடங்கை தொழக் காதலித்துறைகோயில்
வண்டுபன்செயு மாமலர்ப் பொழின மஞ்சை நடமிடு மாதோட்டம் 
தொண்டர் நாடொறுந் துதிசெயவருள் செய்கே தீச்சர மதுதானே
தென்னிலங்கையர் குலபதிமலை நலிந்தெடுத் தவன்முடி திண்டோள் 
தன்னலங்கேட வடர்த்தவர்க்கருள் செய்த தலைவனார் கடல்வாயப் 
போன்னிலங்கிய முத்துமாமணிகளும் பொருந்தியமாதொட்டத்
துன்னியன் பொடு மடியவரிறைஞ்சுகே தீச்சரத்துள்ளாறே                                
   9 
வுளானுமப் பொருகடல் வண்ணனும்புவியிழந் தெழுந்தோடி
மேவிநாடிநுன் னடியிணைகான்கிலா வித்தக மேன்னாகும்   
மாவும் கமுங் கதலியுநெருங்குமா தோட்டன்கர் மன்னிதி
தேவிதன்னோடுந்திருந்து கேதீச்சரத்திருந்தவெம்பெருமானே
10 
புத்திராய்ச்சில புனை துகிலுடையவர் புரனுரைச்சமனாதர்
எத்தராகி நின் றுன்பவரியம்பிய வேழைமைகேளேன் மின் 
மத்தயானையை மருகிடவுரி செய்து போர்த்தவர் மாதோட்டத் 
தத்தர்மன்னுபா லாவியினகரையிற்கே தீச்சரமடைமின்னே 
11 
மாடெலாமான முரசெனக்கடலின தொலிசுவர் மாதோட்டத்
தாடலேருடை யண்ணல் கேதீச்சரத் தடிகளை யணிகாழி 
நாடுளார்க்கின்ற ஞானசம்பந்தன் சொனவின்றெழு பாமாலைப் 
பாடலாயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே.   

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்.
ஓம் நமசிவாய நாமஹ

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய 
பஸ்மாங் கராகாய மகேச்வராய
நித்யாய சூத்தாய திகம்பராய
தஸ்மை  நகாராய நமச்சிவாய 

மந்தாகிணீ சலில சந்தன சர்ச்சிதாய 
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேச்வராய 
மந்தார முக்ய பஹூ புஸ்ப சூபூஜிதாய 
தஸ்மை மகார மஹிதாய நமச்சிவாய 

சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த
சூர்யாய தக்சாத்வர நாசகாய 
ஸ்ரீ நீலகண்டாய வருஷத்வஜாய 
தஸ்மை சிகாராய நமச்சிவாய 

வசிஷ்ட கும்போத்பவ கௌதமாதி 
முனீந்திர தேவார்ச்சித்த சேகரைய 
சந்த்ராக்க வைச்வாணர லோசனாய 
தஸ்மை வகாராய நமச்சிவாய 

யக்சஸ்வரூபாய ஜடாதராய பினாக 
ஹஸ்தா சனாதனாய 
திவ்யாய தேவாய திகம்பராய 
தஸ்மை யகாராய நமச்சிவாய 

பிரதோஷ வேளையில் பாட வேண்டிய பரமன் பாடல் 

மங்களம் தந்திடும் பரமனின் திருவடி 
நம்மனம் தன்னில் இருத்தியே துதிப்போம் 
சந்தியா காலத்து பிரதோஷ நாயகன் 
கங்கன பிரியன் சிவநம சிவயன்

கிள்ளை கரமதில் பிடித்திடும் இமையுடன் 
பிள்ளையை ஒருசேர பணிந்திடும் அடியர்க்கு
தில்லையில் நடித்திடும் திருமறை இறையவன் 
இல்லையென் ட்ரோதே திருவருள் தருவான் 

ஆடிடும் பாதம் தேடிடும் கண்கள் 
நாடிடும் மனமோ கூடிடும் இசையில் 
வாடிடும் வாழ்வில் சேர்ந்திடும் வளங்கள் 
பாடிடும் சூடிடும் பரமனை நெஞ்சம் 

ஹரஹர சிவசிவ தாண்டவ சங்கர 
புரஹர நமசிவ குண்டலங்களை 
நரஹர நடனம னோஹர ரஞ்சித
கரஹர திகபர ஆண்டவா வல்லபா

தும்புரு நாரதர் தம்புரு மீட்டி
இன்புற பாடிய தீநிற அண்ணலே 
துன்புறம் வாழ்வில் நிம்மதி தந்திடும் 
அன்புடை கோவே அருள்வாய் சிவனே

தாம்ததிம் தகயென ஆடிடும் நாதா
சாம்பச தாசிவ சத்குரு தேவா
பாம்பினை அணிந்திடும் முக்கண்ணா ஏ 
காந்தம் விரும்பிடும் நாதஸ்வ ரூபா 

நந்தியின் மீதே எழுந்தாய் போற்றி 
சந்தியா நேர இறைவனே போற்றி 
சிந்தியில் நிறைத்தாய் தேவா போற்றி 
எந்தையும் தாயும் ஆனாய் போற்றி 

வளியிடை நிறைந்தாய் பித்தா போற்றி 
வெளியினில் நிறைந்தாய் சித்தனே போற்றி
தெளிந்திட மனத்தினில் நிறைவாய் நிற்பாய் 
களித்து நடித்திடும் ஆண்டவா போற்றி . 

ப்ரதோஷாஷ்டகம்
சத்யம் ப்ரவீமி பரலோகஹிதம் ப்ரவீமி சாரம் ப்ரவீம்யும்பநிஷத்ருதயம் ப்ரவீமி /
சன்சார முன்பணமசார மவாப்ஜந்தோ; சாரோயமீஸ்வரபதாம் புருஷத்ய சேவா// 1 


யே நார்சயந்தி கிரீசம் சமே ப்ரதொஷயே நார்சிதம் சிவமபி ப்ரனமந்தி சானே/
ஏதத்கதாம் - ஸ்ருதிபுடைர்ண பிபந்தி மூடா ஸ்தே ஜன்மஜன்மஷூபவந்தி நாரா தரித்ரதா;// 2 


யேவை பிரதோஷ சமயே ப்ரமேச்வரஷ்ய சிர்வந்த்ய நன்யமான சொன்கிருத சரோஜ பூஜாம்/
நித்யம் ப்ரவ்ருத்த தனதான்ய கலத்ரபுத்ர சௌபாக்ய சம்பதாதிகாச்த இஹைவலோகே// 3 


கைலாச சைல புவனே தரிஜ கஜ்ஜ நித்ரீம் கௌரீம் நிவேஷ்ய கனகாஞ்சித ரத்னபீடே /
த்ருத்யம்விதாது மபிவாஞ்சதி சூவபாருணனே தேவாம்; பிரதோஷ 
சமயேனுபஜந்தி  சர்வே// 4 


வாக்தேவி த்ருதவல்லகீ சதமகோ வேணும் தத்தத் பத்ம ஜாஸ்தாலோன்னித்ரகரோ ரமா பகவதிகேய பிரயோகான்விதா/
விஷ்ணுச்சந்த்ர ம்ருதங்கவாதன படுதேர்வாஸ் சமந்தாத் ஸ்திதாரசே
வந்தே தமனு பிரதோஷ ஸமயே தேவம் ப்ருடாநிபதிதம்// 5 

கந்தர்வஜாக்ஷ பதகோரக ஷித்தஷாத்ய வித்யாதராமாவாரப் சரசாம் கனாஸ்ஸ/
யேன்ய த்ரிலோக நிலயாச்சஹா பூதவர்கா ப்ராப்ய பிரதோஷ சமையே ஹரபாஸ்வர சன்ஸ்தா// 6   

அத: ப்ரதோஷே ஸிவ ஏகஏவ பூஜ்யோத நான்யே ஹரிபத்மஜாத்யா/
தஸ்மின் மகேசே விதிநேஜ்யமானே சர்வே ப்ரசீதந்தி சூராகினாதா// 7  

ஏஷே தி தனியா: பூர்வஜன்மானி ப்ராஹ்மானோத்தம: பிரதிக்ஹைவர்யோ நித்ய ந தானாத்யைஸ் சூகமார்பி:// 8 

அதோ தாரித்ரமாபன்ன: புத்ரச்தே த்விஜபாமினி/
தத்தோஷ பரிஹாரத்த சாணப் யாது சங்கரம்// 9  
*****        


நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர் 


சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி 
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி 
பார்வதியின் சொல்கேட்டு சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி
செங்கரும்பு உணவுமாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மனகலங்கள் அனைத்தையுமே கொடுக்கும் நந்தி 
மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி
அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி 
வருங்காலம் நலமாக வைக்கும் நந்தி 
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி 
பேரருளை மாந்தருக்கும் வழங்கும் நந்தி
வரலாறு படைத்துவரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி
கெட்டகனா அத்தானையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம்காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிவிட விளையும் நந்தி
வேந்தன்நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்கவைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன் கூரிலே சாய்ந்த நந்தி 
செவிசாய்த்து அருள்கொடுக்கும் செல்வ நந்தி 
கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி
குடம்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
போன்போருளை வழங்கிடவே வந்த நந்தி 
புகழ்குவிக்க எம்இல்லம் வருக நந்தி.

நந்திகேஸ்வரர் பாடல்
திருமூலர்.

அப்பனை நந்தியை ஆரா அமுதனை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால் 
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே.

நந்தியருளாலே நாத நாம் பேருபெற்றோம்
நந்தியருளாலே மூலனை நாடி னோம்
நந்தியருளாவது என் செய்யும் நாட்டினில் 
நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே.
******

நந்தியம்பெருமான் தன்னை நாடொறும் வணங்குவோர்க்கு
புந்தியில்ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்!

சிந்தையில் அமைதி தோன்றும்! சிறப்புறு மக்கள் சேர்வர்!
இந்திரபோகம் கிட்டும்! இணையிலா வாழ்வுதானே!
********

தாயுமானவர் பாடல் 

ஆழழி கரையின்றி நிற்கவிலையோ கொடிய 
ஆலமமு தாக விலையோ?
அக்கடலின் மீதுவட வனல்நிற்க வில்லையோ?
அந்தரத் தகில கோடி
தாழாமல் நிலைநிற்க வில்லையோ? மேருவும் 
தனுவாக வளைய வில்லையோ? 
சத்தமே கங்களும் வச்ரதரன் ஆணையின் 
சஞ்சரித் திடவில்லையோ?

வள்ளலார் பாடல் 

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே 
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே 
அன்பெனும் கரத்து அமர் அமுதே 
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே 
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரமசிவமே!

வேண்டுகோள்

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் 
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான்சென்றே 
எந்தை நினது அருள்புகழை இயம்பி இடல் வேண்டும் 
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்தோங்க அருள்ஜோதி செலுத்தியிடல் வேண்டும் 
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் 
தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.


சுபம்.