தெய்வத்தை எங்கே காண்கின்றனர்.
யாகம் செய்ய ஆசைபடுபவர்கள், தெய்வத்தை அக்னியில் காண்கின்றனர். தபம் செய்பவர்கள் இதயத்திலும், உருவவழிபாடு செய்பவர்கள் விக்கிரகத்தில் தரிசிக்கின்றனர். ஆனால் ஞானிகளோ தெய்வத்தை எங்கும் தரிசிக்கின்றனர்.
இந்த உலகத்தில் சிலர் கடவுள் இல்லை என்றும், சிலர் கடவுளை இருக்கிறார் என்றும், பலர் எங்களுக்குமேல் ஒரு மிகப்பெரிய சக்தி ஒன்று இருக்கிறது என்றும் சொல்கின்றனர். ஆனால் அடியேனுக்கு கடவுளை காணும், மற்றும் உணரும், கொடுப்பனவு இருந்ததால். கடவுளை உணர்ந்தும் கண்டும் மகிழ்கிறேன். இதை தாங்களும் கண்டு, உணர்ந்து மகிழவேண்டும் என்ற அவாவில், இந்த முயற்சியை அந்த ஆதி பரம்பொருளின் பாதம் பணிந்து தொடங்குகிறேன். கடவுளைக் காண வாருங்கள்: இதற்குதேவை பொறுமை, விடாமுயற்சி, விழிப் புனற்சியுடன் எம்மை பின் தொடருங்கள்.
No comments:
Post a Comment