Wednesday, February 13, 2013

எட்டு குணமுடையவர்

இறைவனிடம் மட்டுமே உள்ள எட்டு குணங்கள்.

1. அபஹதபரப் மத்வம் - தீவினையின்மை 
2. விரத்வம் - நரையின்மை 
3. விஸ்ருக்யுத்வம்  - மரணமின்மை.
4. விஸொகத் வம் - துயரமின்மை 
5. விஸீகத் ஸத்வம் - பசியின்மை 
6. அபிபாஸத் வம் - நீர் வேட்கயின்மை 
7. சத்ய காமத் வம் - உண்மை தவறாமை 
8. சத்யங்கல்பத் வம் - கொண்ட கொள்கை தவறாமை.

பஞ்சபூதத் தளங்கள்

பஞ்சபூதத் தளங்கள் 

1. பிருதிவி (மண்) திருவாரூர், காஞ்சிபுரம்.
2. வாயு (காற்று) திருக்காளத்தி ( காளஹஸ்தீ).
3. தேயு (நெருப்பு) திருவண்ணாமலை 
4. அப்பு (நீர் ) திரு ஆனைக்கா,
5. ஆகாசம் ( ஆகாயம்) தில்லை (சிதம்பரம்)

18 சித்தர்கள்

18 சித்தர்கள் 

1.நந்தீசர், 2.பொதிகை முனி, 3.புலத்தியர், 4.பாம்பாட்டி சித்தர், 5.இடைக்காடர், 6.கோரக்கர், 7.இராமதேவர்,8.சட்டை நாதர், 9.கமலமுனி , 10.புண்ணாக்கீசர், 11.காலங்கிச் சித்தர், 12.போகர், 13.கொங்கணர், 14.கருவூரார், 15.திருமூலர், 16.மச்சமுனி, 17.அழுகண்ணர், 18. புலிப்பாணி 

துளசிச் செடி

துளசிச் செடி 

துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பது ஆரோக்கியத்தைத் தரும். 
மற்ற செடி, மரம், கொடிகள் எல்லாம் பகலில் கார்பன்டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும், இரவில் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன்டை ஆக்சைடை வெளியிடும். நாம் எப்போதும் ஆக்சிஜனை சுவாசித்து கார்பன்டை ஆக்சைடை வெளியிடுகின்றோம். ஆகவே வேறு செடிவகைகளை வீட்டில் வைப்பது அழகாக இருக்கும் ஆனால் ஆரோக்கியமாக இருக்காது. ஆனால் துளசிசெடி மட்டும் பகலும் இரவும் நாம் வெளிவிடுகின்ற கார்பன்டை ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை மட்டுமே எப்பொழுதும் வெளிவிடுகிறது. ஆகவே தான் இந்தியாவில்  அதிகமானவர்களின்  வீடுகளிலும் துளசிச்செடியை வைத்து வணங்குவதை பார்க்கலாம். நீங்களும் துளசி செடியை வளர்த்து ஆரோக்க்யமாக வாழ வாழ்த்துகின்றேன்.