2 ஆம் நாள் செய்தி:
சைவத்தை பரப்பிய 63 நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர், இந்த திருமூல நாயனார். இவர் ஏறத்தாழ 2800 ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவில் இருந்து தமிழகத்தில் உள்ள சித்தூருக்கு வந்தவர். இவர் சிவபெருமானின் விருப்பத்திற்க்கேற்ப, சைவ ஆகம விதிகளை தமிழில் எழுதினார், அதுவே திருமந்திரம் ஆகும். இனி நாம் திருமந்திரத்தில் திருமூலர் கூறும் மூச்சுப்பயிற்சியை காண்போம்.
பிணி, திரை, மூப்பு இல்லாத் வாழ்க்கை வேண்டும் என்பதே மனிதனின் ஆசை. இதற்கான வழிமுறைகளை திருமந்திரத்தில் அட்டாங்க யோகம் என்ற தலைப்பில் அருளியுள்ளார்.
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுப்பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான்என்று
உடம்பினை யான்இருந்து ஒம்புக்கின்றேனே.
(திருமந்திரம் 725 )
அட்டாங்கயோகம் என்றால் என்ன?
அட்டாங்கயோகம் என்பது.
1 இமயம் - கொல்லாமை, பொய்கூறாமை, களவாமை, ஆராய்ந்தறிதல், நல்லான், அடக்கம் உடையான், நடுநிலை தவறாமை, பகுந்துண்ணுதல்.
2 நியமம் - பரிசுத்தமான மனம், கருணை காட்டும் உள்ளம், குறைவான உணவு உண்ணுதல், பொறுமை, நேர்மை, உண்மையே பேசுதல், நடுநிலை தவறாமை, மற்றும் காமம், களவு, கொலை செய்யாமை.
3 ஆதனம் - இருக்காய்
4 பிராணாயாமம் - மூச்சுப்பயிற்சி.
5 பிரத்தியாகாரம் - புலன்களை அகத்தே ஒடுக்குதல்.
6 தாரணை - மனதை ஒரு நிலைப்படுத்துதல்.
7 தியானம் - யோகநிலை.
8 சமாதி - உணர்வும் நினைவும் அற்ற நிலை (தன் நிலை அற்ற நிலை).
அடுத்து திருமூலர் கூறுவது பிராணாயாமம் அதாவது மூச்சுப்பயிற்சி.
மூச்சுப்பயிற்சியை நாம் 3 ஆம் நாள் செய்தியில் காண்போம்.