Sunday, March 17, 2013

துன்பத்திலிருந்து விடுதலை. ஸ்ரீ பகவான் பதில்

கேள்வி : ஸ்ரீ பகவன். இந்த உலகத்தில் துன்பமில்லாத வாழ்க்கை உள்ள மனிதர்களே இல்லை. அப்படி துன்பமே இல்லாத வாழ்க்கையை பெற நாம் என்ன செய்யவேண்டும் பகவான் ?

ஸ்ரீ பகவான் பதில்? அது மிக மிக சுலபம். இந்த கொள்கைகளை கடைபிடித்தால் போதும்.

துன்பத்தில் இருந்து விடுதலை பெற கடைபிடிக்க வேண்டிய 7 சத்தியங்கள் .


1. அனைததுமே  ஒன்றே ஒன்றிலிருந்து தான் தோன்றியது. அதை கடவுள் என்றோ அல்லது எதோ ஒரு சக்தி என்றோ சொல்லலாம். அதற்கு ஆரம்பமோ முடிவோ கிடையாது.


2. இதை உணர்ந்துவிட்டால், உணர்ந்தவர் நல்லது, கேட்டது, சரி, பிழை என்று வித்தியாசப்படுத்தி பார்க்க தெரியாது.  இவை அனைத்தும் நாம் பார்ப்பதில் தான் இருக்கிறது. இவை அனைத்தும் அந்த ஒன்றிலிருந்து தோன்றியதே.

3. வாழ்க்கை என்பது உங்களை நீங்கள் உணர்வதைத் தவிர வேறொன்றும் இல்லை. உங்களுடைய வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு செயலிலும், பார்க்கின்ற ஒவ்வொருவரிலும் நீங்களே பிரதிபலிக்கின்றீர்கள். நீங்கள் வறுமையில் வாடுகின்றீர்கள் என்றால், உங்களில் ஏதோ பிழை இருக்கின்றது. அதை முதலில் சரிசெய்தாள் தான் நீங்கள் அந்த வறுமையிலிருந்து வெளிவரமுடியும். உங்களுக்குள் ஏதாவது  வெறுப்பு இருந்தால். அது நீங்கள் பார்க்கும் ஒவொருவருக்குளிருந்தும் அது உங்கள் மீது வெளிப்படுத்தப்படும். உங்களுக்குள் கெட்ட  எண்ணங்கள் இருந்தால் நீங்கள் பார்க்கும் ஒவ்வொருவரும் கெட்ட எண்ணம் உள்ளவர்களாக இருப்பார். ஆகையினால் முதலில் உங்களை புரிந்துகொள்ளுங்கள்.

4. உங்களுடைய இந்த வாழ்க்கையில் நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் இறைவனின் அருளாலேயே நடக்கின்றது என்பதை உணருங்கள். நடக்கும் பொது உங்களின் கால் தடக்குப்பட்டால் கூட அதுவும் கடவுளின் அருளாலேயே நடக்கின்றது என்று உணருங்கள். இப்படி அனைத்திலும் கடவுளைப் பார்த்தீர்களேயானால், உங்கள் வாழ்க்கை அற்புதமானதாக மாறிவிடும்.

5. உங்களின் வாழ்க்கையில் ஏற்ப்படும் ஒவ்வொரு அனுபவமும் இறைவன் உங்களுக்கு வைக்கும் ஒவ்வொரு சோதனை என்று உணருங்கல், ஆகவே அது ஒரு கெட்ட அனுபவமாக தெரியாது. அப்படி அது கெட்ட அனுபவமாக நினைத்தால் கடவுள் இரக்கமற்றவர் என்று அமைகின்றது. அப்படி அல்ல. கடவுள் உங்களுக்கு அப்படி ஒரு சோதனையின் மூலம்  அந்த பிரச்சனையை சந்தித்து அதிலிருந்து வெளிவரும் வழியை உங்களுக்கு கற்றுத்தருகின்றார். இதன் மூலமாகவே உங்களுக்கு உறவுகளையும், செல்வத்தையும், நம்பிக்கையும், வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சக்தியையும் கொடுக்கின்றார். இதை நீங்கள் விளங்கிகொண்டால், உங்களின் நம்பிக்கை அதிகமாகும். உங்களின் நம்பிக்கையை சோதிக்கவே, கடவுள் இந்த சோதனைகளை வைக்கின்றார்.

6. இப்படி இது கடவுளால் வைக்கப்படும் சோதனை என்பதை நீங்கள் உணரும்போது, உங்களால் உங்களின் பிரச்சனைகளை மிக ஆழமாக பார்க்க முடியும். அதனால் அதிலிருந்து வெளிவருவதர்க்கோ அல்லது அதை எப்படி கையாள வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். அத்துடன்  அந்த பிரச்சனையின் முடிவு எதுவாக இருக்கும் என்பது உங்களுக்கு முன்கூட்டியே தெரியும். எந்த பிரச்சனைக்கும் முடிவு முன்கூட்டியே தெரிந்தால், நமக்கு பயம் என்பது ஏற்படாது.

7. நீங்கள் இந்த ஆறு சத்தியங்களையும் விளங்கிகொண்டால். உங்களின் உடலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இதன் பலனாக நீங்கள் கருணையுள்ளவராக மட்டும் இல்லாமல் கருணையின் உருவமாகவே மாறிவிடுவீர்கள். இது தொடர்ந்தாள் உங்கள் உறவுகள் வழுவடையும், உங்களுக்கு பயமோ, துக்கமோ இருக்காது. உங்களிடம் ஆனந்தம் மட்டுமே இருக்கும். இதனை உங்களின் அறிவுப்பூர்வமாக ஆராய்ச்சி செய்யாமல், இந்த சத்தியத்தை ஆகக்குறைந்தது 21 நாட்கள் பின்பற்றினால், நீங்கள் பார்க்க இருப்பது பேரானந்தம் மட்டுமே.
எங்களிடம் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், எங்களிடம் இருக்கும் பயத்தையும் துக்கத்தையும் மட்டுமே நாம் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்கின்றோம். ஆகையினால் தான் நம் பூமித்தாய் மடிந்துகொண்டிருக்கின்றாள். நீங்கள் பேரானந்தத்தை அனுபவித்தால், நீங்கள் அப்போதுமட்டும்தான் ஆனந்தத்தை உலகுக்குபரப்பமுடியும்.  

ஸ்ரீ அம்மா பகவானின் திருப்பாத கமலங்களே சரணம்.