Wednesday, February 2, 2011

பிரதோஷ விரதம்.4

பிரதோஷ விரதம்.4
விளக்கம் தெரிந்து கொண்டு ஆண்டவனை வழிபட்டால் ஆயிரமாயிரம் பலன்கள் கிட்டும் என்பதே உண்மை.
அதுமட்டுமல்ல, அரணுக்கு மட்டுமே உரித்தானது. பிரதோஷ காலம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பலர், ஹரிக்கும் உகந்தது பிரதோஷ வழிபாரு என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டாமா?
ஏற்றங்கள் பலவும், அளவும் நலமும் அளிக்கக் கூடியதுமான பிரதோஷ விரதத்தினைக்கடைபிடிக்க தனித்தன்மையுடன் சரியான வழியைக்காட்ட போகிறது. வாருங்கள் ஒவ்வொன்றாகப்பார்ப்போம்.
'பிர' என்றால், அளவிட முடியாத, மிக மிக அதிகமான என்று பொருள்.


'தோஷம்' என்பதற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை, தீவினைகள் என்று பொருள்.
'பிரதோஷம்' என்றால் அதீதமான தீவினைகள் தோன்றக்கூடிய நேரம்.


என்ன இது. பிரதோஷ காலம் மிகமிக உயர்வானது. என்றல்லவா நினைத்தோம்! இப்படிச்சொல்கிரீர்களே! என்று உங்களில் பலர் கேட்டது புரிகிறது. அதைத் தெரிந்துகொள்ள நீங்கள், பிரதோஷம் பிறந்த கதையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.



பிரதோஷம் பிறந்த கதை.
தேவர்களும் அசுரர்களும் அடிக்கடி போரிட்டுக்கொண்டிருந்தகாலம் அது! தீவினைகளின் மொத்த உருவமான அசுரர்கள், சளைக்காமல் சண்டை போட்டதால், சமாளிக்க முடியாமல் தவித்தனர் தேவர்கள். குறையாத பலமும் குன்றாத ஆரோக்கியமும் பெறவேண்டுமானால், பரந்தாமன் பள்ளி கொண்டிருக்கும் பாற்கடலைக் கடந்து, வெளிப்படும் அமுதத்தை அருந்த வேண்டும் என்று ஆலோசனை சொன்னார், ஸ்ரீ பிரம்ம
தேவர்.
மிகுதியை பகுதியை 5ல் பார்க்கவும்.







பிரதோஷ விரதம்.


பிரதோஷ விரதம்.
நாமவர் புலம் பெயர்ந்து வந்து வாழும் நாடுகளிலேயே, ஒரு புண்ணிய பூமியாக இருப்பது கனடா திருநாடே. இங்கிருப்போரில் பலரும் அறிந்திராத, ஒரு சிலரே அறிந்திருந்தாலும் அவர்களிலும் வெகுசிலருக்கு மட்டுமே இந்த பிரதோஷ விரதம் பற்றித்தேரிந்துள்ளனர். இந்த குறையை நிறையக்குவதும், இந்த மகத்தான விரதத்தின் மூலம் பதினாறு செல்வமும் பெற்று, பேரின்ப பெருவாழ்வு பெற்று வழிகாட்டுவதே இப்புத்தகத்தின் தலையாய நோக்கமாகும்.
                    மாதத்திற்கு இருமுறை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி தினமே பிரதோஷம் என்ற பெயரில் சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் கொண்டாடப்பருகிறது.

                     இதே நேரத்தில் வைஷ்ணவர்களும் ஸ்ரீ விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இதற்குக்காரணம் இந்த பிரதோஷ நேரத்திலேயே ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதரித்த நேரமாகும். இவர் இந்த உலகில் இருக்கும் நோய்கள் மற்றும் இனி மனிதர்களாலும் மிருகங்களாலும் வரவிருக்கும் அனைத்து நோய்களையும் போக்கவல்ல வைத்தியநாதனாக வந்தவரே ஸ்ரீ தன்வந்திரி பகவான்.

அன்றைய தினம் சிவ வழிபாரும் சிவ தரிசனமும் மிக மிக சிறந்த பலன்களைத்தரும். இப்போது நாம், பிரதோஷ தினத்திற்கு அப்படி என்ன சிறப்பு? 
அன்றைய தினம் சிவ வழிபாட்டை எப்படி செய்தால் என்ன பலன் கிட்டும்?
பிரதொசத்திற்கும் நந்திபகவானுக்கும் என்ன தொடர்பு?
நந்திதேவரை வழிபடவேண்டிய முறை என்ன?
நந்திதேவருக்கு உகந்த நிவேதனம் எது?
பிரதோஷ தினத்தன்று சிவாலயங்களில் பிரத்தியேகமாக பிரதட்சணம் (வழமைக்கு மாறாக சுவாமியை சுற்றி வருவது) வருவது எதனால்?
இப்படியான பலப்பல கேள்விகளுக்கு பதில்களை பாகம் 3ல் பார்ப்போம்