Sunday, April 24, 2011

சைவத்தின் சரிதம். 8

4 . சைவ சித்தாந்தம்  


அடிப்படை நூல்கள்
           சைவ சித்தாந்தம் தமிழ் நாட்டில் வழங்கும் மெய்ப்பொருட் கொள்கையாகும்.
இதற்கு அடிப் படையை அமைத்துத் தருவன வேதங்களும் திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் ஆகும். இவற்றுள்ளும் பின்னர்க்கூறிய இரண்டுமே மிகவும் இன்றியமையாதவை. சைவ நாயன்மார்கள் அருளியவை பன்னிருதிருமுறைகள் எனப்படும்.
திருஞான சம்பந்தர் 1 - 3 திருமுறைகள். 
திரு நாவுக்கரசர் 4 - 6 திருமுறைகள்.    
சுந்தரமூர்த்தி நாயனார் 7 ஆம் திருமுறையும்,
 தேவாரங்கள், மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் - திருக்கோவையார் 8    திருமுறை. ஆகியவை முதல் எட்டுத் திருமுறைகள் ஆகும்.
இந்நால்வரும் சமயக்குரவர் எனப்படுவர். 
திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்வர் இயற்றிய திருவிசைப்பா - திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை;
திருமூலரின் திருமந்திரம் 10 ஆம் திருமுறை.
திரு ஆலவாயுடையார் (சிவபெருமான்) தொடங்கி நம்பி ஆண்டார் நம்பிகள் வரை உள்ள பன்னிருவர் செய்த 40 பிரபந்தங்கள் 12 ஆம் திருமுறை.
நம்பியாண்டார் நம்பிகளே இராசராச  சோழன் காலத்தில் திருமுறைகளாகத் தொகுத்தவர் (கி.பி.1000 - 1040 ). இதன் பின்னர் தோன்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் 12 ஆம் திருமுறை.

         சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். அவை: 
1 . திரு உந்தியார் - ஆசிரியர் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் (கி பி 1148 )
2 . திருக்களிற்று பாடியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் கி பி 1178 
3 . சிவஞான போதம் - திருவெண்ணெய் நல்லூர் மெய்க்கண்ட தேவநாயனார்.
4 . சிவஞான சித்தியார்.
5 . இருப்பா இருபஅஃது இவ்விரண்டையும் இயற்றியவர் மெய்கண்ட தேவரின்     
     சீடர் அருள் நந்தி சிவாசாரியார் (கி.பி. 1253 )
6 . உண்மை விளக்கம்- திருவதிகை மனவாசகம் கடந்தார். இனி வரும் எட்டு 
     நூல்களையும் இயற்றியவர் தில்லை வாழ் அந்தணர் மரபைச் சேர்ந்த 
     கொற்றவன் குடி உமாபதி சிவம் (கி.பி.1300 - 1325 ) இவை சித்தாந்த அஷ்டகம் 
    எனப் பெயர் பெரும்.
7 . சிவபிரகாசம்
8 . திரு அருட்பயன் 
9 . வினா வெண்பா 
10 .போற்றிப் பக்ரோடை
11 .கொடிக்கவி
12 .நெஞ்சு விடு தூது 
13 .உண்மைநெறி விளக்கம்
14 .சங்கற்ப நிராகரணம்.

        சைவ சித்தாந்தக் கொள்கையை முறைப்படி வகுத்துத் தத்துவமாக்கிய முதல் முயற்சியாளர் மெய்கண்டாரே ஆவார். இவரே திருக்கயிலாய பரம்பரையில் வந்த சந்தான குரவர்கள் நால்வருள் முதல்வர். அதனாலேயே இந்த நூல்கள் மெய்க்கண்ட சாத்திரங்கள் எனப்படுகின்றன. மெய்க்கண்டார், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகிய நால்வரும் சந்தான குறவர் எனப்படுவர். இவர் இயற்றிய சிவஞான போதமே இச்சாத்திர நூல்களுள் தலைமை சான்றதாய் விளங்குகிறது. காரணம் இதுவே சிவாகம அறிவும் திருமுறை ஞானமும் ஒன்றை ஒன்று-சிவம், அதன் உண்மை இயல்பை உணரும் அறிவு - ஞானம் அவ்வறிவினால் தெளிவடைந்து பெரும்பயன்- போதம். இதற்கு ஆகமாந்தம் என்றொரு பெயரும் உண்டு. இச்சிவஞான போதத்தைச் சிறப்பித்துக் கூறும் பாடல் ஒன்று.

வேதம் பசு; அதன்பால் மெய் ஆகமம்; நால்வர்
ஓதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதம்மிகு
நெய்யின் உருசுவையால் நீள்வெண்ணெய் 
மெய்கண்டான் 
செய்த தமிழ் நூலின் திறம்.

     இதன் பொருள்: வேதம் பசு; அதன் உண்மையான பால் ஆகமம்;
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பாடிய நற்றமிழ் 
அப்பாளிநின்றும் எழுந்த நெய்; அந்த நெய்யின் சுவைதான் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் இயற்றிய இந்தச் சிவஞான போதம் என்னும் செந்தமிழ் நூல். இந்நூல் வடமொழியில் உள்ள ரௌரவாகமத்தின் 73 -ஆம் பகுதியான பாபவிமோசனப் படலத்தின் 12 ஆம் அத்தியாயத்தின் மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு சிலரின் கருத்து.

அடுத்து நாம் சித்தாந்த மெய்ப்பொருள்கள்        

Friday, April 22, 2011

சைவத்தின் சரிதம். 7

ஆன்ம விடுதலை 

                 தனித்த ஆன்மா, சிவத்தின் ஒரு பகுதி (அம்சம்) தான். ஆகவே, சிவத்திடமிருந்து புறப்பட்ட அது, சிவசாராம்சத்தில் பங்குகொண்டு, இறுதியில் சிவத்திடமே சென்று சேர்ந்து அமைதியைக் காண்பதே அது தன்னைச் சிவத்திடமிருந்து வேறுபட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறது. அறிவு கொளுத்தப்பட்டதும் அறியாமை நீங்கப்பெற்றுத்தான் சிவத்தைச் சார்ந்தது என்பதை உணர்ந்து வீடு பெற முனைகிறது. அது சிவத்திடம் இருந்து வேறுபட்டதில்லை என்றாலும் சிவத்துடன் ஒத்ததும் அல்ல. இந்த இரண்டுக்கும் உள்ள இந்தத் தொடர்புதான் பேதாபேதம் ( பேதம்+அபேதம்) வேற்றுமையில் ஒற்றுமை எனப்படுவது. ஆன்மாவின் இறுதி நோக்கம் இந்த தொடர்பினை உணர்ந்து கொள்வதுதான். இப்படி உணர்தலே சேர்க்கை (ஐக்கியம்) ஆகும். இந்தச் சேர்க்கையினால் ஆத்மா ஈடிணை இல்லாத இன்பத்தை அடைந்து மகிழ்கிறது. இந்த அனுபவத்தின் இறுதி நிலையே 'லிங்க சாமரஷ்ய' என்பது; அதாவது லிங்கத்துக்கும் (சிவம்) அதன் பகுதியான அங்கத்துக்கும் (ஆன்மா) இடையில் உண்டாகும் அகநிலை முற்றொருமை என்பது.

விடுதலைக்கு வழிகள் 

              வீரசைவ நெறியில் விடுதலைக்கு வழிவகுக்குமிடத்து மூவரைக் குறிப்பிடுகிறது. அவர்கள் குறு, ஜங்கம, லிங்க ஆகியோர். நல்லாற்றுப்படுத்தும் ஆசிரியனே குரு, உய்வு பெற்ற நல்லான்மாக்களே ஜங்கம. முதலிலேயே குறிப்பிட்ட சிவ பரம்பொருளே லிங்க வீடு பேற்றை விழைபவன் இம்மூவரிடத்தும் சரண் புக வேண்டும்; தெய்வ அருளைப்பெற வணங்கி வழிபட வேண்டும்; அத்துடன் தன்னை இவர்களுடன் முற்றோருமைப் படுத்திக் கொள்ளவேணும்.
இந்த முற்றோருமைப் பேற்றை அடையவிரும்புபவன் 'அஷ்டாவறன' என்னும் எட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டும்;
1 . குருவுக்குப் பணிந்து நடத்தல். 
2 . லிங்க வழிபாடு 
3 . ஜங்கமத்திர்க்குப் பணிவு
4 . திருநீறு (விபூதி) பூசுதல்
5 . ருத்திராட்ச மாலை அணிதல் 
6 . குரு அல்லது ஜங்கம ஆகியோர் பாத தீர்த்தம் பருகுதல் (பாதோக)
7 . குரு, ஜங்கம, லிங்க ஆகியோருக்கு உணவிட்டு எஞ்ஞியத்தை உண்ணுதல்                     
      (பிரசாத) 
8 . நமச்சிவாய என்னும் பஞ்சாச்சர மந்திரத்தை உச்சரித்தல். இவற்றின் மூலம்   ஆன்மிக முதிர்ச்சியைப் பெரும் ஆன்மா உய்வடைந்து இறைவனிடம்   
இணைகிறது.

அடுத்து நாம் பார்க்க இருப்பது சைவ சித்தாந்தம்
          

Thursday, April 21, 2011

சைவத்தின் சரிதம். 6

'அங்க ஸ்தல'
              
      தனித்த ஆன்மாக்களுக்கே உரிய பண்பு 'பக்தி' ஆகும். அது கடவுளை நோக்கியது இந்த நோக்கத்தின் வளர்ச்சியில் மூன்று படிகள் உண்டு. இதற்குத் தகுந்தபடி 'அங்க ஸ்தல' என்பதில், அதாவது தனித்த ஆன்மாக்களைப் பற்றியதில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவற்றுள் மிக உயர்ந்த பிரிவு யோகாங்க, அடுத்தது போகாங்க, மற்றயது தியாகாங்க. முதலாவது, ஒருவன் சிவத்துடன் ஒன்றுவதன் மூலம் பேரின்பம் பெறுதல்; இரண்டாவது அவன் சிவத்துடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைதல்; மூன்றாவது இந்த உலகம் தற்காலிகமானது அல்லது மாயையானது என்று விட்டு விடுதலை ஆதல். இதையே இன்னொரு விதமாகவும் சொல்லலாம்;
       முதலாவது காரணத்தில் உறுதிப்பாடும் ஆழ்ந்த உறக்க நிலையும் போன்றது; 
இரண்டாவது; நுன்னுடலும் உறக்கத்தில் கனவும் போன்றது;
மூன்றாவது; மொத்த உடலும் உறக்கம் நீங்கி எழுகின்ற நிலையும் போன்றது.
இங்குச் சொன்ன மூன்று அங்கங்களும் ஒவ்வொன்றும் மேலும் இருவகைப் பட்டிருக்கும்.யோகாங்க என்பது ஐக்கிய, சரண என இரண்டாகும்.
1 . இவ்வுலகம் முழுவதும் உண்மை இல்லை என உணர்ந்த ஒருவன் சிவத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்வது, ஐக்கிய என்னும் சமரசா பக்தி. இதில் கடவுளும் ஆன்மாவும் பேரின்ப அனுபவத்தில் ஒன்றி விடுகின்றனர்.
2 . சரண பக்தியில் ஒருவன் லிங்கம் அல்லது கடவுளையும், ஒருவனே துய்க்கும் தனி அனுபவம் இது. யோகாங்க என்பது பிராணலிங்கின், பிரசாதின் என இருவகைப்படும்.
3 . வாழ்க்கையின் மீதுள்ள பற்றினை விடுவித்து, அகங்ககாரத்தைத் துறந்து, மனம் முழுவதையும் லிங்க அல்லது கடவுள் மேல் செலுத்துதல் பிராணலிங்கின்.
4 .பிரசாதின் என்பது ஒருவன் தான் அனுபவிக்கும் அனைத்துப் பொருள்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து அமைதியை (பிரசாத) நாடுவதால் கைவரப்பெறுதல் ஆகும். இறுதியான தியாகங்க என்பது மகேஸ்வர, பக்த என இரு பிரிவினதாகும். 
5 . ஒருவன் கடவுள் இருக்கிறார் என்று ஆழ்ந்த நம்பிக்கையும் உறுதியும் கொண்டு, அக்கடவுளான லிங்கத்துடன் ஒன்ற வேண்டும் என்னும் பிடிப்புடன் உண்மை, நல்லொழுக்கம், தூய விரதம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து வாழ்தல் மகேஸ்வர ஆகும். 
6 . பக்தன் ஆனவன் ஈர்க்கும் எல்லாப் பொருட்கள் மீதும் தன் மனத்தைச் செலுத்தாமல் பக்தியுடன் பூசனை புரிந்து உலக மக்களினின்றும் வேறுபட்ட வாழ்க்கை வாழ்வதே பக்த எனப்படுவது.

அடுத்து நாம் காண இருப்பது ஆன்ம விடுதலை.        

Wednesday, April 20, 2011

சைவத்தின் சரிதம். 5 கடவுட் கொள்கை

கடவுட் கொள்கை 

               சத் (உண்மை) சித் (அறிவு) ஆனந்த (மகிழ்ச்சி) என்னும் மூன்று பண்புகளையும் சேர்த்துள்ள மிக உயர்ந்த பிரம்மம் தான், சிவதத்துவம். வீரசைவம், இதனை 'ஸ்தல' என்று குறிப்பிடுகிறது. இதற்கு இடம்,  நிலை, இருப்பிடம் என்றும் பொருள்கள் உண்டு. எல்லாப் பொருள்களுக்கும் இருப்பிடமாய் இருப்பது பரசிவம். அவருக்குள் இவ்வுலகம் இருக்கிறது(ஸ்த):  இறுதியில் அவரையே சென்று அடைகிறது (ல). அவர் தனது விருப்பத்தின் பேரிலேயே லிங்கமாகவும் அங்கமாகவும் பிரிந்திருக்கிறார். அவரது சக்தியும் கலா (பகுதி) என்றும் பக்தி (அன்பு) என்றும் இரு பிரிவாய் இருக்கிறது. 'கலா' சிவத்தை நாடுகிறது. 'பக்தி' தனித்த ஆன்மாவைச்சேருகிறது. சிவத்தினின்றும் உலகத்தை வெளிப்படுத்தும் பணியைக் 'கலா' செய்கிறது. சிவத்திடம் ஆன்மாவைச் சேர்த்திடப் 'பக்தி' துணை நிற்கிறது.

               'லிங்க ஸ்தல' ஆறு வடிவங்களில் வெளிப்படுகிறது. இவை 'ஷட் ஸ்தல (ஷட்-ஆறு) எனப்படும். இவ்வாறே 'அங்க ஸ்தல' என்பதும் ஆறு வடிவங்களைப் பெறும். ஒவ்வொரு வடிவ வெளிப்பாடும் நன்மையில் தொடங்கி மொத்த நிலையை அடைகிறது. ஒவ்வொரு லிங்க வெளிப்பட்டின்போது அதற்குப் பொருந்திய அங்க வெளிப்பாடும் தோன்றும். இதனால் இவ்விரண்டும் எல்லா நிலைகளிலும் பிரிந்திராத் தன்மை கொண்டுள்ளன என்னும் உண்மை புலப்படுகிறது. இந்த உண்மையின் மூலம் உணர்த்தபடுவது என்ன வெனில் இதன் இறுதி இலக்கு அங்கமும் லிங்கமும் ஒன்றாக சேர்வதே அதாவது ஒன்றுவது என்பதே.

'லிங்க ஸ்தல'

                 லிங்க என்பது சிவமே தவிர அவரை எந்த விதத்திலும் குறைக்கும் அடையாளம் அல்ல. லிங்க ஸ்தல - பாவலிங்க, பிராணலிங்க, இஷ்டலிங்க என மூன்று வகைப்படும். 1 .பாவ லிங்க என்பது பகுதிகள் (கலா) இல்லாதது.
நம்பிக்கையால் மட்டுமே உணரப்படுவது. சத் (உண்மை)  ஆனா அது இடத்தாலும்  காலத்தாலும் கட்டுபடாதது: உயர்ந்ததை விட மிகவும் உயர்ந்தது. 2 .பிராண லிங்க என்பது மனத்தாலேயே உணரக்கூடியது. பகுதிகள் உடையது.   3 .இஷ்ட லிங்க என்பது பகுதிகள் கொண்டது, ஆனால் கண்ணால் காணக் கூடியது. விரும்பிய பொருளை தரவல்லது, துயர்களை கலயவள்ளது; இது விரும்பி வணங்கப்படுவதால் இப்பெயரைப் பெறுகிறது. 'பிராணலிங்க' பேரான்மாவின் உணர்வு (சித்) என்றால் 'இஷ்டலிங்க ' மகிழ்ச்சி,இன்பம் ஆகும். முதலாவது மிகஉயர்ந்த தத்துவம். இரண்டாவது நுண்ணிய உருவம், மூன்றாவது மொத்த உருவம். இந்த மூவகை லிங்கங்களும் ஆன்மா, வாழ்க்கை, மொத்தம் என்னும் வடிவங்கள் கொண்டு, பயன் (பிரயோகம்), மந்திரங்கள், செயல் (கிரியை) ஆகியவற்றால் முறையே விவரிக்கப் படுகின்றன; கலா, நாத, விந்து என்னும் வடிவங்களைப் பெறுகின்றன. இந்த மூன்று லிங்கங்களும் மீண்டும் மூவகைபடுகின்றன. முதலாவது மகாலிங்க, பிர சாதலிங்க எனவும், இரண்டாவது சரலிங்க, சிவலிங்க எனவும், மூன்றாவது குருலிங்க, ஆசாரலிங்க எனவும் ஆகும்.


               இந்த ஆறும் ஆறு வகைச் சக்தியினால் இயக்கப்பட்டு ஆறு வடிவங்களைப் பெறுகின்றன.
 1 .சித்தின் ஆற்றலால் சிவா தத்துவம் இயக்கப்படும் போது மஹா லிங்க வடிவம் பெறுகிறது. இதன் சிறப்புத் தன்மைகள் பிறப்பு, இருப்பு, இன்மை, மலம் (களங்கம்) இன்மை, திரிபு இல்லாமை, ஆழமுடைமை, நம்பிக்கையாலும் அன்பாலும் உணரக் கூடிய தன்மை, கருத்தியலான்மை (சைதன்ய ரூப).
 2 . சிவா தத்துவம் மிக உயர்ந்த ஆற்றலான பராசக்தியுடன் கலக்கும் போது சதாக்யம் என்னும் தத்துவம் வெளிப்படுகிறது. இது தான் ஒளிமயமானது, நித்தியமானது. பிரிக்க முடியாதது, புலன்களால் உணர முடியாதது, அறிவினால் உணரக்கூடியது, அழிவிலாதது. வளரும் குணம்கொண்ட ஆதி நிலையான இதுவே பிரசாதலிங்க.
 3 .மூலாதார ஆற்றலால் (ஆதி சக்தி) சிவ தத்துவம் இயக்கப்படும் பொழுது சரலிங்கம் உருப்பெறுகிறது. இது வரம்பிலாதது, உலகெங்கினும் பரவி இருப்பது. முழுதும் ஒளிமயமானது. புருஷ எனப்படும் இது பிரதான அல்லது பிரக்ருதியினும் மேம்பட்டு, உயர்ந்து. உள்ளத்தினால் மட்டும் உணரக்கூடியது.
 4 .இச்சா சக்தியினால் இயக்கமுறும் சிவதத்துவம் சிவலிங்கமாக வடிவம் பெறுகிறது. அகங்கார உணர்வு, அறிவு, ஆற்றல் ஆகியன கொண்டு தெய்வீக ஒளியும் அமைதியும் தவழுகின்ற ஒற்றை முகத்துடன் விளங்கும் இது வரம்புக்குட்பட்ட தத்துவமாகும். 
5 .அறிவு, ஆற்றல் (ஞான சக்தி) கொண்டு இயக்கப்படும் சிவதத்துவம் குருலிங்க வடிவம் ஏற்கிறது. அறிவு புகட்டும் கலை, அறிவியலுக்குத் தலைமை தாங்கி, முழு, ஒளியுடன், எல்லையற்ற மகிழ்ச்சிக் கடலில் திளைத்து மனித புத்தியில் உறைகிறது. 
6 .செயல் ஆற்றலின் (கிரியா சக்தி) ஆளுமைக்கு ஆட்படும் சிவ தத்துவம் ஆசார  லிங்க வடிவம் பெறுகிறது. இது தன்னுடைய செயற்பாட்டினால் எல்லாப் பொருள்களையும் தாங்கும் அடிநிலையாக இருக்கிறது. உள்ளத்தால் உணரப்படும், இதை துறக்க வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது.

மூல முழுமுதற் பொருள் தனக்கே உள்ள ஆற்றலினால் கடவுள் எனவும் ஆன்மா எனவும் பகுக்கப்பட்டு ஆறு வடிவங்களைப் பெறுகிறது என்பது, பரம்பொருளைப் பலவகையிலும் பார்க்கலாம். என்று கூறுவதாகும். முதல் வடிவம் வரம்பிலாப் பொருள், சுதந்திரத்துடன் இயங்குவது, இரண்டாவது மிக உயர்ந்த ஆற்றலினால் வளர்ந்து உருக்கொள்வது. மூன்றாவது இந்தச் சட உலகினின்றும் கடவுள் வேறானவர் என்று காட்டுவது, நான்காவது உடல் உருவம் கொண்டது. இந்த உடல் பொருள்களால் ஆனது அன்று; வைணவர்கள் கருதும் நாராயண, இராம, கிருஷ்ணர் போன்று தெய்வீக உடல் உரு உடையது. ஐந்தாவது மனித குலத்திற்கு அறிவு கொளுத்துவது. ஆறாவது தனித்த ஆன்மாவின் செயல்களை வீடு பெரும் வரை வழி நடத்த உதவுவது. இந்த வடிவில் சிவன் இரட்சகர் ஆகிறார்.
                                                                 'அங்க ஸ்தல'       
இனி அடுத்த தொடரில் 'அங்க ஸ்தல' பற்றி பார்ப்போம்.                                                                               
                                                                                                                                                                                  

Tuesday, April 5, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 4

வீர சைவம்  

இது தன்னுடைய தோற்றத்தை மிகப் பழங்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. ஆயினும் இது மிகவும் புகழ் பெற்றது. கி.பி.12   ஆம்  நூற்றாண்டில்தான். இதற்கு காரணமாக இருந்தவர் அப்போது கன்னட நாட்டில் வாழ்ந்த பசவா என்பவரே. இவரே இதனை நிறுவினார் என்னும் கருத்துக்கள் உள்ளது. ஆனால் இவரது வரலாற்றைக் கூறும் பசவபுரானத்தில் இவருக்கு முன்னரே விஷ்வேச்வரராத்ய, பண்டிதாராத்ய,  ஏகோராம  போன்றவர்கள் இருந்து சிவசக்தியை நிலை நாடியுள்ளதாகச் சான்றுகள் உள்ளன.

             பசவர் பிஜ்ஜ்ள (கி.பி.1157 - 1167 ) என்னும் அரசனிடம் அமைச்சராய் இருந்தவர். இவருடைய சகோதரியை அரசன் மணந்து கொண்டான். இவர் அரசச் செல்வத்துக்கு அதிகாரியாய் இருந்தபோது, வீர சைவ நெறியைப் பின்பற்றியவர்களுக்கு செல்வதை வாரி இறைத்தனர். இதை அறிந்த அரசன் இவர்மீது வெறுப்புக் கொண்டு இவரைத் தொலைத்திடத் திட்டமிட்டான். பசவர் அங்கிருந்தும் வெளியேறி விடவே அவரிப் பிடித்துவரப் பலரையும் ஏவினான். அவர் அவர்களை வென்று விரட்டி அடித்தார். ஆனால் அரசன் படை ஒன்றினை அனுப்பினான். பசவர் பலரையும் திரட்டித் தம்மை எதிர்கொண்ட படையினரை வென்றார். பின்னர் இருவருக்கும் ஒருவாறு உடன்படிக்கை ஏற்பட்டது. ஆயினும் உட்பகை மட்டும் இருந்து கொண்டே இருந்தது. இறுதியில் அரசன் கொல்லப்பட்டான். அதில் பசவருக்கும் பங்குண்டு என்பர். இந்த வரலாற்றிலிருந்து பசவர் கைதேர்ந்த அரசியல்வாதியாக இருந்தார் என்பதும், வீரசைவர்களுக்கு நிதி உதவி செய்து ஆதரித்தார் என்பதும் புலனாகின்றன. ஆகவே, வீர சைவம் கன்னட நாட்டில் பரவுவதற்குப் பசவர் தூண்டுகோலாய் இருந்தார் என்பதும் உண்மை. இவருக்குப் பின்னரே இது ஆந்திரத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பரவியது.

அடிப்படை நூல்கள் 

             இதற்கு வேதங்கள், சைவ ஆகமங்கள், புராணங்கள், ஆகியவற்றுடன் புராதனர்கள் எனக் கருதப்படும் தமிழ் நாயன்மார்கள் பாடிய பாடல்களும், கன்னட அநுபூதிமான்கள் மொழிந்த அருளுரைகளும் (வதனங்கள் ) அடிப்படையான பிரமாண நூல்களாகும். இது லிங்காயதம் என்றும் வழங்கப்படுகிறது. காரணம் இதனைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தமது உடலில் லிங்க உருவை அணிந்து கொண்டிருப்பதுதான். இதற்குச் சக்தி விசிஷ்டாத்வைதம் என்னும் பெயருண்டு. கடவுளின் அத்வைத நிலை அவருடைய 'சக்தி'யினால் 'விசேஷிக்'கப்படுவதால் இப்பெயர். இச்சமயத்தின்படி, கடவுளும் ஆன்மாவும் இந்தச் சக்தியின் மாற்றமுடியாத ஆற்றலினால் பிரிக்க முடியாதவாறு பினைப்புண்டிருக்கின்றனர். கடவுள் என்னும் முழுமையின் சிறிய பகுதிதான் தனித்த ஆன்மா, கடவுள் ஆன்மா என்றால் உடல் தான் தனித்த ஆன்மா.


உலகப் படைப்பு 

           பரமசிவம் எனப்படும் கடவுளே இவ்வுலகத்தின் இறுதி நிலைக் காரணர். ஆயினும் இவ்வுலகப் படைப் பாக்கத்தில் அவர் எந்த மாற்றத்தையோ, குறையையோ அடைவதில்லை. இதற்குக் காரணம் இந்த உலகபடைப்பானது அவரிடம் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சிறப்பு பகுதியான(கூறுஆன) மஹா சக்தியினாலேயே நடைபெறுவதுதான். சக்தி, மூலப் பிரகிருதி அல்லது மாயை என்பதுதான் பிரபஞ்சமாக உருப்பெறுகிறது. இந்த மாயை என்பது இயற்கையாகவே முழுமுதற்பொருளான பிரம்மத்துக்கு உரியதாயும், அதனுள்ளேயே வாழ்வதாயும் இருப்பது. அதாவது சிவத்துக்கு உரியதாயும் சிவத்துள்ளே வாழ்வதாயும் உள்ளது. உதாரணமாக நாம் ஒரு பாத்திரத்தை கடலில் போட்டுவிட்டு பார்க்கும் பொழுது அந்த பாத்திரத்தில் இருக்கும் நீர் கடல் நீரில் இருந்து பிரிந்து தனித்திருப்பது போல் தோன்றும் ஆனால் உண்மையில் அந்த நீர் கடலுக்கு உரியாதாயும் கடலுக்குள்ளேயே இருப்பதுவுமே உண்மை.

அடுத்து நாம் பார்க்க விருப்பது கடவுட் கொள்கை 

Monday, April 4, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 3

ஆன்ம விடுதலை 

முழுமுதற் பொருளான சிவத்துடன் முழுவதுமாக கரைந்து இருப்பதே  தனித்த ஆன்மா, இருந்தபோதிலும் தன்னுடைய இயல்பினை  (சொரூபத்தை) மறந்து சம்சாரத்தில் கிடந்தது உழல்கிறது. அந்த ஆன்மாவினை அதன் உண்மை நிலைக்குக் கொண்டு வருவதுதான் பிரத்யபிஜ்ஞா நெறியின் நோக்கமாகும். இதற்குரிய வழி, அதுதான் பரம்பொருளுடன் ஐகியம்மண நிலையில் இருப்பதை உணர்த்துவது தான். இதனை ஓர் எகிக்ஹ்கக்க்ட்டின் மூலம் உணர்த்தலாம்.
     வீரன் ஒருவனுடைய நற்குணங்களைக் கேள்விப்பட்ட ஒரு இளம் பெண், அவனைக் காணாமலேயே காதல் கொள்கிறாள். அவனைப் பார்க்க வேண்டும் என ஏங்குகிறாள். ஆகவே தனது விருப்பத்தை கடிதம் மூலம் எடுத்து உஅரைக்கிறாள். அவனும் வந்தான், அவனுடைய குணங்களை மட்டும் அறிந்திருந்த அவள், அவனை இதற்கு முன்னர் கண்டிராததால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. பின் தன தோழியர் எடுத்து சொன்னதும் அவனைப் புரிந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தாள். அதைப்போல, இந்தத் தனித்த ஆன்ம அந்த பேரான்மாவான பரம்பொருளுடன் ஒன்றிணைந்த ஒன்றே என்னும் உண்மையினை உணர்ந்துகொள்ளும் வரைக்கும் முழுமையான நிறைவு அடையமுடிவதில்லை. மகேஸ்வரனுடைய முழு நலன்களும் எல்லாம் வல்ல தன்மையும், அதை முழுமையாக அறிந்து உணரும் தன்மையும் போன்ற பல குணங்களும் எம்மிடமும் உள்ளது என்பதை சரியான குருவின் மூலம் உபதேசம் செய்யப்பட்டதும், நாம் ஆகிய தனித்த ஆன்மா தன்னை அடியாளம் கண்டு கொண்டு தன் இயல்பான முழு நலத்தையும் அடைகிறது.   

வீடு பேரு 


இத்தாகைய நிலையடைந்து ஆன்மா ஆதிநிலையான முழுமைக்கும் தூய உணர்தலுக்கும் திரும்புவதுதான் மோட்சம் (முக்தி, துரியா, ஸ்வர்க்கம்)என்கிறது காஷ்மீர சைவம். 'இப்படிப் பண்புகளைப் பற்றிய கற்பனை மறைந்ததும் (கட்டறுத்த ஆன்மாவான) அவன் மாயையின் திரிபுக் காட்சிகளை ( உண்மை என நினைத்து அவன் இவ்வளவுகாலம் செய்து வந்த அனைத்தும் போலியானவை என்று உணர்ந்ததும்) வென்றவனாகின்றான். அவன் பிரம்மத்தோடு நீருடன் நீரும், பாலுடன் பாலும் கலப்பது போல் ஒன்றாகிறான். சிவம் என்னும் முழுமுதற் பொருளுடன் இணைந்த அவனைத் துயரமும் மருட்சியும் ஆட்பருத்தமுடியாது ஏனெனில் அவனும் பிரம்மமாய் இருந்து இந்தப் பிரபஞ்சத்தையே அன்றோ பார்த்துக் கொண்டிருக்கிறான்? என்கிறார் அபிநவகுப்தர். 

ஆன்ம விடுதலைக்குத் தடைகள்

காஷ்மீர சைவத்தில் தனித்த ஆன்மா பரம் பொருட் பேரான்மாவுக்கு ஒத்த நிலையுடையது. ஆனால் மலங்களின் ஆளுமையால் ஆன்மாவால் இதை உணரமுடிவதில்லை. இம்மலங்கள் மூவகைப்படும். ஆன்மா அறியாமையினால் தன்னுடைய பொது இயல்பினை மறந்து, தன்னை மிககுரையுள்ளதாகக் கருதி, தனதல்லாத எல்லபோருட்களையும் தனதாய் நினைத்து ஒரு வரம்புக்குட்பட்டுத் தன்னைத்தானே சிறுமைபடுத்திக் கொள்வது ஆணவ மலம். ஆன்மாவின் உடலில் தோன்றும் மற்றக்கலங்கங்கள் பொருட்களை உருவாக்கும் வல்லமை படைத்த மாயாவினால் தோன்றும் மாயா மலம். நம் உள் உறுப்புகள் அல்லது இதயம் போன்றவற்றால் நிகழும் செயல்களால் ஏற்படும் மலம், கன்மம் ஆகும். சிவனின் நாத என்னும் பெண்மைக்கூறான முதன்மைச் சக்தியால் தொழிற்படுத்தப்படும் பொது பேச்சு நிகழ்கிறது. பேச்சில்லை என்றால் கருத்துக்கள் இல்லை. உலக வாழ்க்கை, உலக வாழ்க்கை இல்லை, மலங்களின்  தோற்றம் பேச்சிலேயே தொடங்குகிறது. இந்த நாத சக்திக்குப் பெண்ணுருவம் தந்து அம்பாள், அம்பா, ஜ்யேஷ்டா, ரௌத்ரி, வாமா, எனப்படுகிறாள். இறைவனை ஆழ்ந்து சிந்திப்பதன் பயனாகப் பரம்பொருளின் பார்வை நம்மில் படுகிறது . அப்படி படவே மலங்கள் களையப் பெற்று  வரம்புக்குட்படும் தன்மையும் நம்மை விட்டு நீக்கப்படுகிறது. இத்தகைய நிலைமை நிலைத்து இருக்கும் போது தனித்த ஆன்மா சுதந்திரனாகி பரம்பொருட் பெரான்மாவாகிறது. இந்தப் பரம்பொருட் பார்வை பைரவ எனப்படுகிறது. இப்பார்வை அவருடையதாகவும் அவரால் உண்டாக்கப்படுவதாலும் இப் பெயர் பெறுகிறது. 

அடுத்து நாம் காண இருப்பது  வீர சைவம்.