3 . உங்களால் முடிந்த அளவு அதிகமான குருமார்களை சந்தித்து அவர்களிடம் சக்தி தீக்ட்சை பெறுவது மிகவும் சிறந்ததாகும். இப்படி தீக்சை பெரும் போது மற்ற எந்த முறைகளிலும் கிடைக்கும் சக்தி ஓட்டத்தின் அளவைவிட இது மிகவும் அதிகமாகும். சில குருமார் தங்களின் ஒரு பார்வையில் அல்லது ஒரே ஒரு தொடுதலின் மூலம் முக்தியையே கொடுப்பவர்களும் உண்டு. தற்போது உள்ள குறுகிய காலத்தில் இதுவே மிக சிறந்த வழியாகும்.
இதற்க்கு சில உதாரணங்களை பாகம் 8 இல் காண்போம்.
4 . முன்பே கூறியது போல். ஒரு குரு உபதேசித்த மூலமந்திரத்தை 24 மணி நேரமும் அதன் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும். அப்படி சொல்லி உரு ஏற்றும்போது நீங்கள் ருத்திராட்சை மாலையை கையில் வைத்து, மோதிரவிரலின் நுனியிலிருந்து முதல் கணுவில் மாலையை வைத்துக்கொண்டு பெருவிரலின் நுனியால் மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ ஒவ்வொன்றாக தள்ளிக் கொண்டே மந்திரத்தை சொல்லுவதால், உங்களின் மூலாதார சக்கரம் தூண்டப்பட்டு சக்தி ஓட்டம் அதிகரிக்கும்.
4 இல் 1 .முதலில் மந்திரத்தை சத்தமாக சில காலம் சொல்ல வேண்டும்.
4 இல் 2 . சிறிது காலத்திற்கு பின் மந்திரத்தை உங்களின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி சொல்ல வேண்டும்.
4 இல் 3. சிறிது காலத்திற்கு பின் மந்திரத்தை உங்களின் உதடுகள் அசையும்படி சத்தமில்லாமல் சொல்லவேண்டும்.
4 இல் 1 . சிறிது காலத்திற்கு பின் மந்திரம் உங்களுக்குள் மட்டும் அதாவது மனதிற்குள் மட்டும் சொல்லவேண்டும். இப்படி செய்வதால் நீங்கள் 4வது நிலைக்கு வரும் பொழுது ஒவ்வொரு முறையும் நீங்கள் மந்திரம் சொல்லும் பொழுது உங்களின் உடலில் சக்தி ஓட்டம் அதிகரிப்பதையும் அதனால் மின் காந்த அலை, உங்களின் முதுகெலும்பின் கீழிருந்து உச்சந்தலை வரை செல்வதை உணர்வீர்கள்.
இதன் மூலமும் உங்களின் மின் காந்த சக்தி வலையம் வலிமை அடைகிறது.
5 .சிவசூத்திரத்தில் உள்ள ஒவ்வொரு பயிர்ச்சியையும், ஒரு பயிற்சி 10 நாட்கள் விகிதம் செய்து பார்த்து அந்த அனுபவத்தை அடைந்ததும், அடுத்த 10 நாட்களுக்கு அடுத்த பயிற்சியை செய்து பார்க்கவேண்டும். இப்படி உங்களுக்கு முக்தி கிடைத்து விட்டது என்று நீங்கள் உணரும் வரை, அதாவது நீங்கள் உணரும் வரை, சந்தேகம் இல்லாமல் நீங்கள் உணரும் வரை. செய்து முக்தியை உணர்ந்ததும் ஜீவன் முக்திக்கு முயற்சிக்கவேண்டும். முக்தி உங்களைக்காக்கும், ஆனால் ஜீவன் முக்தியின் மூலம் நீங்கள் மற்றவரைக்காக்க முடியும். இதற்க்கு சில உதாரணங்களை பாகம் 8 இல் காண்போம்.