பிரதோஷ விரதம்.
நாமவர் புலம் பெயர்ந்து வந்து வாழும் நாடுகளிலேயே, ஒரு புண்ணிய பூமியாக இருப்பது கனடா திருநாடே. இங்கிருப்போரில் பலரும் அறிந்திராத, ஒரு சிலரே அறிந்திருந்தாலும் அவர்களிலும் வெகுசிலருக்கு மட்டுமே இந்த பிரதோஷ விரதம் பற்றித்தேரிந்துள்ளனர். இந்த குறையை நிறையக்குவதும், இந்த மகத்தான விரதத்தின் மூலம் பதினாறு செல்வமும் பெற்று, பேரின்ப பெருவாழ்வு பெற்று வழிகாட்டுவதே இப்புத்தகத்தின் தலையாய நோக்கமாகும். மாதத்திற்கு இருமுறை வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி தினமே பிரதோஷம் என்ற பெயரில் சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகளுடன் கொண்டாடப்பருகிறது.
இதே நேரத்தில் வைஷ்ணவர்களும் ஸ்ரீ விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இதற்குக்காரணம் இந்த பிரதோஷ நேரத்திலேயே ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ தன்வந்திரி பகவான் அவதரித்த நேரமாகும். இவர் இந்த உலகில் இருக்கும் நோய்கள் மற்றும் இனி மனிதர்களாலும் மிருகங்களாலும் வரவிருக்கும் அனைத்து நோய்களையும் போக்கவல்ல வைத்தியநாதனாக வந்தவரே ஸ்ரீ தன்வந்திரி பகவான்.
அன்றைய தினம் சிவ வழிபாரும் சிவ தரிசனமும் மிக மிக சிறந்த பலன்களைத்தரும். இப்போது நாம், பிரதோஷ தினத்திற்கு அப்படி என்ன சிறப்பு?
அன்றைய தினம் சிவ வழிபாட்டை எப்படி செய்தால் என்ன பலன் கிட்டும்?
பிரதொசத்திற்கும் நந்திபகவானுக்கும் என்ன தொடர்பு?
நந்திதேவரை வழிபடவேண்டிய முறை என்ன?
நந்திதேவருக்கு உகந்த நிவேதனம் எது?
பிரதோஷ தினத்தன்று சிவாலயங்களில் பிரத்தியேகமாக பிரதட்சணம் (வழமைக்கு மாறாக சுவாமியை சுற்றி வருவது) வருவது எதனால்?
இப்படியான பலப்பல கேள்விகளுக்கு பதில்களை பாகம் 3ல் பார்ப்போம்
No comments:
Post a Comment