Thursday, February 3, 2011

பிரதோஷ விரதம் (part 5 )

பிரதோஷ விரதம் (part 5 )
முப்பது முக்கோடி தேவர்களும் , உடனடியாகச்செயலில் இறங்கினர். பிரம்மன் வழிகாட்டிவிட்டார். பரந்தாமன் பார்கடலைக்கடைய அனுமதியளித்து வழிவிட்டுவிட்டார்.
மும்மூர்த்தியரில் இருவரை வேண்டியாகிவிட்டது. அதே சமயம், எப்படியாவது அசுரர்களை வெல்லவேண்டும் என்ற அவசரத்தில் தேவர்களுக்கு, ஆதிமூலமான சிவபெருமானை வணங்கி செயலில் இறங்கவேண்டும் என்ற நினைவு அற்றுப்போய்விட்டது. பார்கடலைக்கடைந்தால் அமுதம் கிடைக்கும் என்ற யோசனைகிடைத்த மகிழ்ச்சியில், மகேசனை மறந்தே விட்டனர். பாற்கடலில் யோகத்துயில்புரிபவன் திருமால் அல்லவே? 
அந்த மாதவனிடம் சென்று, அவன் ஆணைபெற்றதுமே பாற்கடலைக் கடயலாம் என்ற துணிவு துளிர்த்தது. தேவர்களுக்கு, கடையப் போவதோ பாற்கடல். சாதாரண காரியமா? அதற்கு வேண்டிய உபகரணங்களைச் சேகரிக்க வேண்டுமே?








மந்திர மலையே மத்தாகியது. அட்ட நாகங்களுள் ஒன்றான வாசுகி, கடைய உதவும் தாம்புக் கயிராகிறது. கடைய ஆரம்பித்தனர் அமரர்கள். அடிவாங்கியே அல்லல் பட்டுக்கிடந்த தேவர்கள், அரைக்கணம் கூட பாற்கடலைக் கடைய முடியாமல் பரிதவித்தனர். கலைத்தனர். தேவகுரு அவர்களைத்தேற்றினார். மந்தகுணம் உள்ள அசுரர்களை உதவிக்கு அழைத்துக்கொள்ளலாம் பங்கு பிரிக்கும்போது சமாளித்துக்கொள்ளலாம் என்று யோசனை சொன்னார்.


'சரி' என்று சம்மதித்தார்கள் தேவர்கள். அசுரர்களிடம் கேட்டார்கள். அவர்களும் 'சரி' என்று சொல்ல, வாசுகியின் வால்புறம் தேவர்களும் தலைப்புறம் அசுரர்களும் பிடித்துக் கடைய, மத்து கடலில் அமிழ்ந்துவிடாதிருக்க மகாவிஷ்ணு கூர்மாவதாரம் எடுத்து, மலையின் அடியையும் முடியையும் தன் முதுகினாலும், கைகளாலும் பற்றிக் கொண்டார்.


பாற்கடலுள் மத்து அமிழ்ந்து கடிதல் ஆரம்பமாகிறது. ஆயிரம் தலைகளும் கொடிய நஞ்சும் கொண்ட வாசுகி என்னும் நாகத்தை கயிராகச்சுற்றிக் கடந்தனர் அல்லவா? மலையின் மீது சுற்றி இழுக்கப்பட்டதால், வாசுகிக்குக் களைப்பு மேலிட்டது. வாயில் நுரை தள்ளியது. வியர்வை வழிந்து ஓடியது. அப்போது ஏற்ப்பட்ட வேதனையைத் தாங்க முடியாமல் பெருமூச்சுடன் நஞ்சையும் வெளிப்படுத்தியது, வாசுகி. அதன் ஆயிரம் வாய்களிளிருந்தும் விஷம் வெளிப்பட்டது. அகிலத்தையே அந்த விஷம் அச்சுறுத்தியது.
மிகுதியை பிரதோஷ விரதம் part 6ல் பார்க்கவும் 





No comments:

Post a Comment