Thursday, February 3, 2011

பிரதோஷ விரதம் பகுதி 6

பிரதோஷ விரதம் பகுதி 6
உலகம் இருண்டது, தேவர்களும் அசுரர்களும் பயந்து ஓடினார்கள். உலக உயிர்கள் எல்லாம் ஊழிக்காலம் உதித்துவிட்டதோ என்று பயந்து அலறினர். அதிகக் கண்ட மகாவிஷ்ணு, அந்த விஷத்திர்கேதிரே தன் ஆயுதங்களுடன் புகுந்தார். ஆனால் அந்தக் கொடிய நஞ்சு அவர்மேல் பரவி அவர் உடலைக் கறுப்பாக்கியது. விஷ்ணு கரியமேனிகொண்டவர் (நீல மேக சியாமளன்) என்று புராணங்கள் வர்நிக்கின்றனவே, அதற்க்குக் காரணம் இதுதான். விஷ்ணுவின் அம்சம்தான் கிருஷ்ணன், கிருஷ்ணன் என்றால் கருமை நிறம் கொண்டவன் என்று ஒரு பொருள் உண்டு.


அதே சமயத்தில், பாற்கடலில் அந்த நெஞ்சின் வெக்கை படர்ந்து அதிலிருந்தும் ஒருவித விஷம் வெளிப்பட்டது. ஆலம் என்றால் நஞ்சு. வாசுகி கக்கிய ஆலமும், பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட ஆலமும் ஒன்றாகி ஆலாலம் எனும் மிகக் கொடிய நஞ்சகியது. வேதனையும் சோதனையும் இருமடங்காகியது. ஆலாலம் வாட்டிய அந்த சமயத்தில்தான்  தேவர்களுக்கு ஞாபகம் வந்தது. தாங்கள் சூலாயுதபாணியை மறந்துவிட்டோம் என்று.


கயிலயங்கிரியை நோக்கி ஓடினார்கள். கையில் வெள்ளிப்பிரம்பு, உடைவாள் கொண்டு சிவபெருமானின் வாசஸ்தலத்தை நந்திதேவர் காத்து நிர்ப்பது தெரிந்தது. அவர் உத்திரவின்றி எவரும் நுழைய முடியாது.(இராவணன் போன்றவர்கள் தடையை மீறி நுழைந்ததால் ஏற்ப்பட்ட துன்பங்களை நாம் புராண வாயிலாக அறிகின்றோம்.)
தடுப்பாரோ நந்தி? தாமதமாகுமோ தயாபரனை தரிசிக்கத் தவிப்போடு விரைந்தனர் தேவர்கள்.
குறிப்பால் அவர்களின் குறை உணர்ந்தார் நந்திதேவர், தடுக்காமல் வழிவிட்டார். நந்தியின் ஆணைகிடைத்ததும் உட்புகுந்து நெற்றிக்கன்னனைத் தரிசித்து, அவரை வணங்காமல் பாற்கடலை கடையப்புகுந்ததின் விளைவை விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் தங்கள் காரியம் தடையின்றி முடிந்து அமுதம் கிடைக்க அருளவேண்டும் எனக்கூறி வணங்கிநின்றனர்.

மிகுதியை பார்ட் 7ல் .paarkkavum

No comments:

Post a Comment