Saturday, January 29, 2011

பிராணாயாமம் எவ்வளவு காலம் செய்யவேண்டும்?

பிராணாயாமம் எவ்வளவு காலம் செய்யவேண்டும்?
பத்து ஆண்டுகள் தியான யோகத்தால் பிராணனை கீழே போக்காமல், உள்ளடக்கும் வல்லமை கைவரப் பெற்றவர்கள் திருநீலகண்டப் பெருமானுக்கு ஒப்பாவர்.

பதினோராண்டுப் பயிற்சியில் மேலேழ், கீழேழ்  உலகங்கள் சென்று அழகு பொருந்தத நிறைந்த நிற்பார்.

--------------------------------------------------------------------------------------------------------

          ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன் 
ஏர்வொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி 
சீரொன்று மேலேழ்  கீழேழ் புவிச்சென்று 
ஏறோன்று வியாபியாய் நிற்றல்ஈ ராறே.
( திருமந்திரம் 648 )
-------------------------------------------------------------------------------------------------------

நாம் அனைவரும் இறைவன் அருளோடு, திருமூலர் அருளிய மூச்சுப்பயிற்சி செய்து, நோயின்றி நெடுநாள் வாழ்வோம்.

மிகுதி நாளைத் தொடரும்.

 

Wednesday, January 19, 2011

What would happen 2012? tamil 2

2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளது?2
உதாரணமாக, 

கடலில் உள்ள பெரிய மீன்கள், தான் செல்லும் பாதையை, அதாவது திசையை வடதுருவத்தில் இருந்து கிடைக்கும் மின்காந்த அலைகளை( ) வைத்துத் தீர்மானித்து, பின் தான், செல்லவேண்டிய இடத்திற்கு செல்கிறது. மீன்களுக்கு நம்மை போல் ரோட் இல்லாததால், மின்காந்த அலைகளின் சமிக்ஞை( ) மட்டுமே வழிகாட்டி, இப்போது ஒரு மீன் அந்த சமிக்ஞையை ( ) பயன்படுத்தி சென்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்த நேரத்தில் சன் சோலார் பிளாஷ் ஏறதுகிறது. அதனால் பூமியில் மிக சிறிய தாக்கம் ஏற்ப்படுகிறது. இதனால் பூமி சிறிது திரும்புகிறது. இப்போது அந்த மீனுக்கு கிடைக்கும் சமிக்ஞையின் படி பாதையை தெரிவு செய்து மிக வேகமாக செல்வதால், அதனால் உடனடியாக தன் பெரிய உடலை திரும்ப முடியாமல் போகவே, அந்த மீன் வந்த வேகத்தில் பாதை மாறியதால், கடலில் செல்லவேண்டிய மீன் கரையை கடலென நினைத்து ஒதுக்கி விடுகின்றது. 

2012: Polar Shift Explained 


மேலும் அவற்றால் திரும்பி செல்ல முடியாததால் கரையிலேயே இறந்துவிடுகிறது. நீங்கள் உங்களின் வாழ்வில் ஒருமுறையாவது, செய்திதாளில் மீன்கள் ஆமைகள் கரையில் ஒதுங்கியதாக வாசித்திருப்பீர்கள். இப்படி ஒதுங்க இதுவே காரணம். மீன்கள் மிக மென்மையானவை ஆகவேதான் மிக சிறிய சன் சோலார் பிளாஷ் கூட அவற்றை தாக்குகிறது.
2012 tamil 3 இல் தொடரும்...

What would happen 2012? tamil 1

2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?
இந்த கேள்விக்குப் பதில் எவரையும் பயப்படுத்துவதர்க்காக எழுதவில்லை, நீங்கள் 
சில விடயங்களை தெரிந்து தெளிவுபெற்று விழிப்புணர்வோடு இருந்து வர இருக்கும் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்க்கே எழுதுகிறேன்.


True About Dec 2012 From Nasa

நம் உடலிலும், உடலைச் சுற்றியும் மின் காந்த அலைகள் இருக்கின்றன. இதை (Bio magnetic field) என்று விஞ்ஞானிகள் (Scientist)  கூறுகிறார்கள். இதன் மையமாக இருப்பது, நெற்றிக்கண் எனப்படும், ஆக்ஞா சக்கரம் இருக்கும் இடத்தில் உள்ளது. இந்த மின் காந்த அலைகள் ஒரு வட்டமாக நம்மை சுற்றி இருப்பதால் இதை மின்காந்த வளையம் என்றும் கூறலாம். இந்த மின்காந்த வளையத்தைப்போல், நம் பூமியைச்சுற்றியும் ஒரு மின்காந்த வலயமும் உள்ளது, இதை ( Geometric magnetic field)என்று கூறுவர். இதன் மையமாக ( North Pole)வடதுருவம் உள்ளது.
மனிதனின் மின்காந்த வளையமும் பூமியின் மின்காந்தவளையமும் எப்பொழுதும் இணைக்கப்பட்டு உள்ளது.
நம் எண்ணங்கள் அனைத்தும் பூமி சூரியனை சுற்றிவரும் பாதையில், அதாவது பூமி சுற்றிவரும் கோட்டில் பதிவாகிக்கொண்டிருக்கிறது. அதாவது நம் பழைய நினைவுகள் எதிர்கால கற்பனைகள் மற்றும் அனைத்து மன ஓட்டங்களும் இதில் பதிவாகிறது.

இப்போது நாம் சூரியனைப் பற்றி பார்ப்போம். பூமிக்கும் நமக்கும் எப்படி மின்காந்தவளையத்தால் தொடர்பு உள்ளதோ அதே போன்று பூமிக்கும் சூரியனுக்கும் தொடர்பு உள்ளது. 

Michio kaku desmisses the 2012

சூரியன் தன்னிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சூரியப் பந்தின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து வெப்பக்காற்றை மிக வேகமாக வெளியிடுவது வழக்கம். இதை (Sun Solar Flash) என்று விஞ்ஞானிகள்( Scientist ) கூறுவர். இப்படி வெப்பத்தை வெளியிடும்போது அதன் வேகத்தாலும் அதிர்வாலும், சூரியனுக்கு அருகிலோ அல்லது அதே நேர்க்கோட்டிலோ உள்ள கிரகங்கள் தன் வட்டப்பாதையிளிருந்து வெளியேறி குறிப்பிட்ட நேரத்திற்கு பின் மீண்டும் தன் வட்டப்பாதைக்கு திரும்பிவிடுகிறது. ஆனால் அந்த நேரத்தில் அந்த கிரகங்களில் மிகப் பெரிய அல்லது சிறிய அளவில் சேதங்கள் ஏற்ப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் நாம் அந்த கிரகங்களில் இல்லாததால் நமக்குத் தெரிவதில்லை. சில நேரங்களில் இந்த சன் சோலார் பிளாஷ் ஆல், நம் பூமியும் சிறிய சிறிய தாக்கங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.
உதாரணமாக,             2012 ? தமிழ் 2 இல் பார்ப்போம்.    

Tuesday, January 18, 2011

பிராணாயமம் செய்ய ஏற்ற நேரம் எது?

பிராணாயமம் செய்ய ஏற்ற நேரம் எது?
பிராணாயாமம் மாலையில் செய்தால் உடலுக்குத் துன்பம் தரும் கபம் நீங்கும்.

மத்தியானத்தில் செய்தால் வஞ்சக வாதம் நீங்கும்.

விடியற்காலையில் செய்தால் பித்தம் நீங்கும்.
--------------------------------------------------------------------------------------------------------
அஞ்சனம் போன்று உடல்ஐ அறும் அந்தியில் 
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில் 
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தறும் 
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.
(திருமந்திரம் 727 )
------------------------------------------------------------------------------------------
பிராணாயாமம் எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?
என்பதை நாளை காண்போம்.

ருதிராக்ஷையின் மகிமை

ருதிராக்ஷையின் மகிமை:
1.உருத்ராக்ஷையின் மகிமை. 

நம் உடல், உயிர், அறிவு இவையனைத்திலும் நிரவிக்கிடப்பவன் சிவநேயன்றி வேறில்லை.
நம் செயலில் உண்டாகும் புகழுக்குக்கூட நாம் கர்வப்படக்கூடாது. நாம் ஆட்டுவிக்கும் பொருள் மட்டுமே, ஆடுவதும், ஆனந்தமடைவதும், அறிதலும், புரிதலுமை உலகில் இயைந்து, மானுடனை வழிநடத்தும் மகத்தான சக்தி அந்த மகேசனே!
          நடமாடும் இறைவனாய் நம்மை ஆழவந்துள்ள ருத்ரட்சையின் வகைகள் பற்றி இனி அறிவோம்.

ஒரு முக ருத்ராக்ஷை :
 இரண்டு முகம் கொண்ட ருத்ராக்ஷை பற்றி நாளை அறிவோம்.
தொடரும்...

சிவபெருமான் கூறும் நந்திதேவரின் பெருமை:


சிவபெருமான் கூறும் நந்திதேவரின் பெருமை.

 சாண்டில்ய முனிவர் ஒருமுறை பிரதோஷம் பற்றி கூறுகையில், பிரதோஷ வேலையில் சிவபெருமானைப் பூஜிப்பதற்கு முன் நந்தி தேவரைப் பூஜிப்பதே மிகவும் உத்தமமாகும். இவ்வாறு நந்திதேவரை முதலில் பூஜை செய்வதற்கான காரணகாரியங்களை சிவபெருமான், உமாமஹெஸ்வரியிடம்  கூறியதை இங்கு காண்போம்.  

ஒருமுறை பூவுலகில் மக்களிடையே ஏற்ப்பட்ட இறைபக்தியின்மையும், அதனால் மக்களிடையே அறியாமை, அநீதி, துஷ்ட செயல்கள் போன்றவை கூடிகொண்டிருப்பதை நாரத முனிவர் சிவபிரானிடம் கூறியதற்கு, அவரும் தனக்கு நிகரான சக்தி கொண்ட இரண்டாம் சிவனாம் நந்திதேவரை, பூவுலகிற்கு அனுப்பி யாம் அதை சரி செய்வதாகக் கூறினார். இதைக் கேட்ட பார்வதி தேவி. நந்திதேவர் எந்த வகையில் உங்களுக்கு நிகரானர்வர் என்று சிவபெருமானிடம் கேட்டார். அதற்கு பரவேச்வரன்,

"தேவி! நந்திதேவன் தந்து தூய்மையான பக்தியால், தவத்தால் எனக்கு நிகரானவன், உண்மையைச் சொன்னாள், நானே நந்திதேவன், அனாதியே தோன்றியவன். தர்ம வடிவானவன், நான்மறைகளையும் தன் நான்கு பாதங்களாக அடைந்தவன். எங்கும் நிறைந்துள்ள எனக்கே, இந்த நந்திதேவன் வாகனமாகி என்னை எக்காலமும் சுமப்பதால் எனக்கு ஈடானவன். வேதன்கலனைத்தும் புகழ்ந்தேற்றும் உன்னதமானவன். எனவே இந்த நந்திதேவரை துதிப்பவர்க்கு, பக்தி, செல்வமும்,காரியசித்தியும், மக்கட்செல்வத்தையும், சகல சௌபாக்கியங்களையும், தந்து இறுதியில் வீடு பேற்றையும் அளித்து வருகிறேன்" என்று கூறி முடித்தார்.




 எம்பெருமான் கூறியதைக் கேட்டு பரமேஸ்வரி, மனம் நெகிழ்ந்துருகி, நீங்கள் கூறுவது உண்மைதான், ஒழுக்கம், உண்மை, நியாயம், ஞானம், மோட்சம், உறுதியான பக்தி, சிவநேசம் ஆகிய அனைத்தும் ஒருங்கினந்தவரும், ஈரேழு உலகங்களிலும் எங்கும் பரவியிருப்பவருமான தங்களையே சுமக்கின்ற வலிமையைப் பெற்றவருமாகிய, அனைத்து சிறப்புகளும் பெற்றவரான நந்தி தேவரைத் தங்களுக்கு ஈடானவரென சொல்வது சாலப் பொருந்தும் என்று கூறினார்.

எனவே, இத்தகைய மேன்மைகளுக்கும் பெருமைகளுக்கும் உரியவரான நந்திதேவரை இரண்டாம் சிவன் என்ற முழுநம்பிக்கையுடன், புனிதமான பிரதொசவேலையில் வழிபடுவதால் அளவிட முடியாத அளவு புண்ணியத்தையும் நன்மையையும் நாமும் நம் அடுத்த தலைமுறையும் பெற்று சிறந்து விளங்கலாம்.     
தொடரும்...

Monday, January 17, 2011

பிரதோஷ விரதம்

பிரதோஷ விரத மகிமை:
பிரதோஷ விரத மகிமை 
          எம் ஞான குருவாகிய அந்த யானை முகத்தான், விக்கினங்கள் அகற்றும் விநாயக பெருமானின் திருப்பாத கமலத்தில் அடியேனின் சிரம் பதித்து வணங்கி இந்த அருத்த்தொகுப்பைத் துவங்குகிறோம்.

முதலில் நாம் வாழும்காலத்தில் வாழ்ந்த சிவஞானப்பழமாம், சிவசக்தி சொரூபம் கொண்ட, கருணைக்கடலாம், எல்லோராலும் மஹா பெரியவர் என்று பயபக்தியுடன் அழைக்கப்படும், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தம் திருவாயால் மலர்ந்தருளிய பிரதோஷ தத்துவம் பற்றி பார்ப்போம்.

 



 
           காஞ்சி மஹா பெரியவர் அருளிய பிரதோஷ தத்துவம்.
பிரதோஷ காலம், சூர்யஷ்த்தமனத்தோடு ஆரம்பிக்கிறது. பிரதொஷகாலம் பரமேஸ்வரனை தியானம் செய்வதற்குத் தகுந்த காலமாகும். ஈஸ்வரன், உயிர்களை தன்வசப்படுத்திக் கொள்ளும் காலம், இது மிகவும் விசேஷமாகும்.


இந்த காலத்தில் உலகம் ஒடுங்குகிறது, மனசும் ஈஸ்வரனிடம் ஒடுங்க அதுவே நல்லநேரம். பகலின் முடிவு, சந்தியா காலத்தின் ஆரம்பம். சிருஷ்டி முடிவு பெற்று தன் ஸ்வரூபத்தில் அடக்கிக் கொள்ளும் நேரம். வில்லைவிட்டு அம்பு சென்றுவிட்டாலும், மந்திர உச்சாடன பலத்தால் அந்த அம்பை உபச்ம்ஹாரம் செய்வது போல், ஈஸ்வரன் தான் விட்ட சக்தியை எல்லாம் தன் வசப்படுத்திக் கொகிறான்.

பிரதோஷ காலத்தில் ஈஸ்வரன் எல்லாவற்றையும் தன்னிடம் அடக்கிக்கொல்வதால் வேறொரு உயிரும் இல்லாத நேரமாக அது அமையும். உதயத்தில் சிருஷ்டியும், பிரதோஷகாலத்தில் சம்ஹாரமும் நடக்கின்றன. ராத்திரி ஆரம்பத்தைத்தான் பிரதோஷகாலம் என்கிறோம். அதனால் தான் இரவு நித்யப்ரலய காலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவொருநாளும் நித்ய சிருஷ்டியும் நித்ய பிரளயமும் நடக்கின்றன.

அந்தக் காலம் தான், சித்தத்தை ஏகாந்தமாக லயிப்பதற்கு தகுந்த காலம். ஒருவராக இருந்து, நித்ய பிரளய நேரத்தில் நடராஜர் நடனம் செய்கிறார். எல்லாம், அதில் லயித்து விடுகிறது. அப்போது சஞ்சாரம் செய்யும் பூதப்பிசாசுகள் கூட அந்த நர்த்தனத்தில் லயித்து, யாருக்கும் உபத்திரவத்தைக் கொடுக்கமாட்டா. அது கண்கட்டு வித்தை போல் நடக்கிறது. கூத்தாடி யாருடைய கண்களையும் கட்டுவதில்லை. ஆனால் பார்த்துக்கொண்டிருக்கும் போதே நம் மனசையும் கண்களையும் வேறொன்றில் ஆகர்ஷித்து விட்டு, தான் செய்வதைச் செய்துவிடுகிறான்.

உஷாக்காலத்தில் ஹரி ஸ்மரனையும், சாயங்காலத்தில் சிவநாம ஸ்மரனையும் உகந்தாவை. நடராஜ மூர்த்தியின் நாமாவை உச்சாடனம் செய்வதற்கு  பிரதோஷ் வேலைதான் சிறந்தது.

இப்படி சிவனை வழிபடுவதற்குத்தான் கோவில்களைக் கட்டினார்கள். சிவ பஜனை செய்வதற்கு எல்லோருக்கும் அவரவர் வீட்டில் வசதி இருக்காது. அதற்காகத்தான்  பெரும் சிவன் கோயில்களைக் கட்டினார்கள். பிரதோஷ வேளைகளில், பரவேச்வரன் உலக சக்தி முழுவதையும் தன்வசம் ஒடுக்கிக் கொண்டு, நர்த்தனம் செய்யும் வேளையில், நாம் ஈஸ்வரனையே வழிபட்டுக் கொண்டு இருக்கவேண்டும். 
---------------------------------------------------------------------------------------- 

 தொடரும். ..

பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?

பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?
ஆசனம்
நீண்ட நேரம் அமர்ந்து பிராணாயாமம் செய்ய சிறந்த இருக்கை முறை (ஆசனம்) மிகவும் முக்கியம். ஆசனம் மொத்தம் 126 நிலைகள் உள்ளன. அவற்றில் 8 சுகாசனம் எனப்பெயர்படும். அவை பத்மம், பத்திரம், கோமுகம், கேசரி, சௌத்திரம், வீரம், சுகாதனம், சுவத்திகம் என்பவை.
------------------------------------------------------------------------------------------------------
பங்கயம் ஆதி பரந்தபல் ஆசனம் 
அங்கு உளவாம்  இரு நாளும் அவற்றினுள் 
சொங்கு இல்லை யாகச் சுவத்திகம் எனமிகத் 
தங்க இருப்பத் தலைவரும் ஆமே.
 (திருமந்திரம் 558 )
-----------------------------------------------------------------------------------------
பிராணாயாமம் 
 16 மாத்திரைகள் அளவு இடது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, 64 மாத்திரைகள் அளவு உள்ளடக்கி, 32 
மாத்திரைகள்  அளவு வலது நாசி வழியாக வெளிவிட 
வேண்டும். 
----------------------------------------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல்  கும்பகம் அறுபத்து நாலதில்
உறுத்தல் முப்பத் திறந்ததில் ரேசகம் 
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே 
(திருமந்திரம் 568 )
---------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் - உள்ளிழுத்தல் - எரெட்டு = 16 மாத்திரைகள்
ஆறுதல் கும்பகம் - அடக்குதல் -64 மாத்திரைகள் 
ஊறுதல்  இரேசகம் - வெளிவிடுதல் - 32  மாத்திரைகள் 
மாறுதல் - இடது நாசி, வலது நாசி என மாறுதல்.
-------------------------------------------------------------------------------------------------

பிறகு வலது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, இடது நாசி வழியாக 
வெளிவிட வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த 16:64:32 என்ற கணக்கில் பயிற்சி 
செய்வது இயலாத காரியமாகலாம். எனவே, 4:16:8  
என்ற கால அளவில் துவங்கி, படிப்படியாக நேரத்தை 
அதிகரிக்கலாம்.

மேல்  எனப்படும் தலை, கண், காதுகளும் கீழ் எனப்படும் 
 கால், பெருவிரல் முதலியவைகளும், நடு எனப்படும் 
 நெஞ்சகம், கொப்பூழ் முதலியவைகளும் நிறையுமாறு 
 மூச்சை உள்ளிழுத்தல் வேண்டும். அவ்வாறு உளிழுத்த 
மூச்சை  உள்ளே தங்கச் செய்து அளவோடு வெளியிட 
வேண்டும். அவ்வாறு செய்ய ஆலாலம் உண்டான் - சிவன்
அருள்பெறலாமே.
---------------------------------------------------------------------------------------------------
மேல்கேழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப் 
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து 
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே 
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
(திருமந்திரம் 572 ) 
------------------------------------------------------------------------------------
பிராணாயாமம் செய்ய ஏற்ற நேரம் எது?
என்பதை நாம் நாள் 5 இல் காண்போம்.  


 

Friday, January 14, 2011

பிராணாயாமம் என்றால் என்ன?

பிராணாயாமம் என்றால், பிராணனை பற்றிய அறிவு மற்றும் அதை நமது வயப்படி அடக்குதல் என்று பொருள்.
பிராணாயாமம் செய்வதால் என்ன பயன்?
நாம் வாழும் இந்த மனித உலகம், மற்றும் அண்ட வெளியெங்கும், பிராணன்  எனும்  எல்லையற்ற சக்தியால் நிரம்பியுள்ளது.

அந்த பிராணன் தான், நம்மை, நமது உடம்பை, நமது உயிரை இயக்குகிறது. உயிருக்கு ஆதாரமாக இருப்பது மூச்சுதான். எனவேதான் அதை உயிர்மூச்சு என்கிறோம்.

ஆக, நாம், நமது மூச்சை (இடது நாசி, வலது நாசி) இறைவன் அருளோடு, கட்டுப்பருத்தி அடக்குவதன் மூலம், பிராணனை வசப்படுத்த முடியும்.

ஆரியன் நல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகுஅறி வார்இல்லை 
கூறிய நாதன் குருவின் அருள்பெற்றால் 
வாரிப் பிடிக்க வசப்படும் தானே.
(திருமந்திரம் 565 ) 

பறவையைவிட, வேகமாகச் செல்லக்கூடிய இந்த பிராணனாகிய குதிரையை நம் வசப்படுத்திக் கொண்டால், கள் உண்ணாமலேயே கள் உண்ட ஆனந்த நிலையை உணரமுடியும், சுறுசுறுப்பும், துள்ளலும் தானே ஏற்படும்.

புள் எனும் ஒரு வகை பறவை, குஞ்சுபோரித்தவுடனேயே, வேகமாக பறக்கும் தன்மையுடையது, அதுபோலதான் நமது மூச்சும்.

புள்ளிரும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம் தானே களிதரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடையார்க்கே.
(திருமந்திரம் 566 )
பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?
இதை நாம் நாள் 4கில் காண்போம். 




Wednesday, January 12, 2011

திருமூலரின் மூச்சுப்பயிற்சி.

2 ஆம் நாள் செய்தி:


திருமுலர்: 
சைவத்தை பரப்பிய 63 நாயன்மார்களில் குறிப்பிடத்தக்கவர், இந்த திருமூல நாயனார். இவர் ஏறத்தாழ 2800 ஆண்டுகளுக்குமுன் வட இந்தியாவில் இருந்து தமிழகத்தில் உள்ள சித்தூருக்கு வந்தவர். இவர் சிவபெருமானின் விருப்பத்திற்க்கேற்ப, சைவ ஆகம விதிகளை தமிழில் எழுதினார், அதுவே திருமந்திரம் ஆகும். இனி நாம் திருமந்திரத்தில் திருமூலர் கூறும் மூச்சுப்பயிற்சியை காண்போம்.
பிணி, திரை, மூப்பு இல்லாத் வாழ்க்கை வேண்டும் என்பதே மனிதனின் ஆசை. இதற்கான வழிமுறைகளை திருமந்திரத்தில் அட்டாங்க யோகம் என்ற தலைப்பில் அருளியுள்ளார்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் 
உடம்பினுக்கு உள்ளே உறுப்பொருள் கண்டேன் 
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான்என்று 
உடம்பினை யான்இருந்து ஒம்புக்கின்றேனே.
 (திருமந்திரம் 725 ) 
அட்டாங்கயோகம் என்றால் என்ன?
 அட்டாங்கயோகம் என்பது.
1 இமயம் - கொல்லாமை, பொய்கூறாமை, களவாமை, ஆராய்ந்தறிதல், நல்லான்,    அடக்கம் உடையான், நடுநிலை தவறாமை, பகுந்துண்ணுதல்.
2 நியமம் - பரிசுத்தமான மனம், கருணை காட்டும் உள்ளம், குறைவான உணவு  உண்ணுதல், பொறுமை, நேர்மை, உண்மையே பேசுதல், நடுநிலை தவறாமை, மற்றும் காமம், களவு, கொலை செய்யாமை.
3  ஆதனம் - இருக்காய் 
4  பிராணாயாமம் - மூச்சுப்பயிற்சி.
5  பிரத்தியாகாரம் - புலன்களை அகத்தே ஒடுக்குதல்.
6  தாரணை - மனதை ஒரு நிலைப்படுத்துதல்.
7  தியானம் - யோகநிலை.
8  சமாதி - உணர்வும் நினைவும் அற்ற நிலை (தன் நிலை அற்ற நிலை).

 அடுத்து திருமூலர் கூறுவது பிராணாயாமம் அதாவது மூச்சுப்பயிற்சி.
மூச்சுப்பயிற்சியை நாம் 3 ஆம் நாள் செய்தியில் காண்போம்.

Monday, January 10, 2011

கடவுளை காண்பது எப்படி?

பயிற்சி நாள் 1:
கடவுளை காண எடுக்கும் முதல் அடி.
கடவுளை காண்பதற்கு எத்துணையோ வழிகள் இருந்தாலும், நான் முதலில் எடுத்துகொள்வது, இரண்டு வழிகள். அவற்றில் ஒன்று தியானத்தின் முலம் கடவுளை காண்பது, மற்றது பக்தியின் முலம் கடவுளைக் காண்பது.  
இந்த இரண்டிற்கும் முதலில் தேவைப்படுவது, நம் உடலில் மின் காந்த அலையின் அளவை அதிகப்படுத்த வேண்டும். அதனால் சக்தி ஓட்டத்தின் அளவை அதிகமாக்கிவிடலாம், அதற்கு நாம் முதலில் செய்யவேண்டியது, மூச்சு பயிற்சி.

இந்த மூச்சுப்பயிற்சியில் (பிரணாயமம்) பல வகை இருந்தாலும் அடியேன் முதலில், இந்த பயிற்சியின் மூலம் தொடங்குகிறேன். 
இந்த பயிற்சிக்குத்தேவை 
தூய்மையான, அமைதியான இடம், மற்றும் வசதியான இருக்கை.(ஆசனம்)
தற்போது நீங்கள் பத்மாஷனத்திலோ அல்லது உங்களுக்கு வசதியான ஒரு ஆசனத்தில் அமர்ந்துகொள்ளவும், பத்மாசனத்தில் இருக்க விரும்பினால், முடிந்தால், கீழே உள்ள படத்தில் இருப்பதுபோல் அமர்ந்துகொள்ளவும். நீங்கள் மிகவும் வசதியாக இருக்கவேண்டும் என்பதே இங்கே முக்கியமாக இருக்கிறது. உங்களின் இருக்கை உங்களுக்கு சிரமத்தை கொடுக்காமல் இருக்கவேண்டும். 
பத்மாசனம் 
இப்போது உங்களின் முதுகு, கழுத்து மற்றும் தலை ஒரு நேர்கோட்டில் இருப்பதுபோல் நிமர்ந்து அமர்ந்துகொண்டு கண்களை மூடவும்.
1  நீங்கள் இப்போது உங்களின் வலதுகையின் பெருவிரலால், மூக்கின் வலதுபுரத்தை     அமத்திகொண்டு, இடது புற நாசியின் வழியே மூச்சை சப்தமில்லாமல் உள்ளே  இழுக்கவும். அப்படி இழுக்கையில் 1 முதல் 6 வரை உங்களுக்குள்(மனத்தால்) எண்ணவும்.
2 பின் மூச்சை உள்ளேயே நிறுத்திகொண்டு 1 முதல் 3 வரை எண்ணவும்.

3 இப்போது உங்களின் வலது கை மோதிரவிரல் மற்றும் நடுவிரளாலும் மூக்கின் இடதுபுற நாசியை அமத்திகொண்டு வலது நாசியின் வழியாக மூச்சை சத்தமில்லாமல் வெளியிடவும். இப்போது 1 முதல் 6 வரை எண்ணவும்.

4 தற்போது மூச்சை உள்ளே இழுக்காமல் அப்படியே ௧ முதல் ௩ வரை எண்ணவும்.
 இப்படி 5 நிமிடங்கள் வரை செய்யவும்.
இப்பயிற்சி செய்வதற்கு பொருத்தமான நேரம்.
விடியற்காலை, மதியம் மற்றும் சூரியன் மறையும் நேரம்.
இந்த பயிற்சித்தொடர்புடைய ஒரு ஒளிப்பதிவு (வீடியோ கிளிப்) கீழே கொடுத்துள்ளேன். அதை பார்த்து பழகவும். இது ஆங்கிலத்தில் உள்ளது. இருப்பினும் உங்களுக்கு விழங்கும் என்று நம்புகின்றேன்.
  இதை பார்த்து பழகவும். 
மூச்சுபயிர்ச்சிக்கும், கடவுளை காண்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது பற்றி 
பயிற்சி நாள் 2 இல்  பார்ப்போம்