Monday, January 17, 2011

பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?

பிராணாயாமம் செய்யும் வழிமுறை என்ன?
ஆசனம்
நீண்ட நேரம் அமர்ந்து பிராணாயாமம் செய்ய சிறந்த இருக்கை முறை (ஆசனம்) மிகவும் முக்கியம். ஆசனம் மொத்தம் 126 நிலைகள் உள்ளன. அவற்றில் 8 சுகாசனம் எனப்பெயர்படும். அவை பத்மம், பத்திரம், கோமுகம், கேசரி, சௌத்திரம், வீரம், சுகாதனம், சுவத்திகம் என்பவை.
------------------------------------------------------------------------------------------------------
பங்கயம் ஆதி பரந்தபல் ஆசனம் 
அங்கு உளவாம்  இரு நாளும் அவற்றினுள் 
சொங்கு இல்லை யாகச் சுவத்திகம் எனமிகத் 
தங்க இருப்பத் தலைவரும் ஆமே.
 (திருமந்திரம் 558 )
-----------------------------------------------------------------------------------------
பிராணாயாமம் 
 16 மாத்திரைகள் அளவு இடது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, 64 மாத்திரைகள் அளவு உள்ளடக்கி, 32 
மாத்திரைகள்  அளவு வலது நாசி வழியாக வெளிவிட 
வேண்டும். 
----------------------------------------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல்  கும்பகம் அறுபத்து நாலதில்
உறுத்தல் முப்பத் திறந்ததில் ரேசகம் 
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே 
(திருமந்திரம் 568 )
---------------------------------------------------------------------
ஏறுதல் பூரகம் - உள்ளிழுத்தல் - எரெட்டு = 16 மாத்திரைகள்
ஆறுதல் கும்பகம் - அடக்குதல் -64 மாத்திரைகள் 
ஊறுதல்  இரேசகம் - வெளிவிடுதல் - 32  மாத்திரைகள் 
மாறுதல் - இடது நாசி, வலது நாசி என மாறுதல்.
-------------------------------------------------------------------------------------------------

பிறகு வலது நாசி வழியாக மூச்சை 
உள்ளிழுத்து, இடது நாசி வழியாக 
வெளிவிட வேண்டும்.

ஆரம்பத்தில் இந்த 16:64:32 என்ற கணக்கில் பயிற்சி 
செய்வது இயலாத காரியமாகலாம். எனவே, 4:16:8  
என்ற கால அளவில் துவங்கி, படிப்படியாக நேரத்தை 
அதிகரிக்கலாம்.

மேல்  எனப்படும் தலை, கண், காதுகளும் கீழ் எனப்படும் 
 கால், பெருவிரல் முதலியவைகளும், நடு எனப்படும் 
 நெஞ்சகம், கொப்பூழ் முதலியவைகளும் நிறையுமாறு 
 மூச்சை உள்ளிழுத்தல் வேண்டும். அவ்வாறு உளிழுத்த 
மூச்சை  உள்ளே தங்கச் செய்து அளவோடு வெளியிட 
வேண்டும். அவ்வாறு செய்ய ஆலாலம் உண்டான் - சிவன்
அருள்பெறலாமே.
---------------------------------------------------------------------------------------------------
மேல்கேழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப் 
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து 
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே 
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
(திருமந்திரம் 572 ) 
------------------------------------------------------------------------------------
பிராணாயாமம் செய்ய ஏற்ற நேரம் எது?
என்பதை நாம் நாள் 5 இல் காண்போம்.  


 

No comments:

Post a Comment