Friday, October 4, 2013

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?

கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.

ஆகம விதிகளின்படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் 

கோவில்களிலும் வேத, ஆகம, சிற்ப சாஸ்திர முறைப்படி 

யந்திர 
ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல்

 சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து

 வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் 

வேளையில், நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வதை 

அனுபவ பூர்வமாக பலர் உணரலாம்.

ஆகவே தான், பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் 

வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 

கோவில்களிலும் 
விக்கிரகங்களை உலோகத்தால் 

செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள். இதற்கு 

முக்கியமான ஒரு காரணம் உண்டு.உலோகத்தின் ஆற்றலை 

விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு 
அதிகமானது. எந்த 

சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் 
தன்மை

யுடையது கருங்கல். இதில் நீர், நிலம், நெருப்பு, காற்று, 

ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது. 

இது வேறு எந்த உலோகத்திலும் வெளிப்படுவது இல்லை.

நீர்: கல்லில் நீர் உள்ளது. எனவே தான் தனது இயல்பான 

குளிர்ந்த 
நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது. கல்லில்

 நீரூற்று இருப்பதை காணலாம். கர்நாடக மாநிலத்தில், சில 

கோவில்களில் கல்லில் 
நீரூற்று 
வருவதை காணலாம்.

நிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் 

கல்லில் 
உள்ளது. எனவே தான், கல்லில் செடி கொடிகள் 

வளர்கின்றன.

நெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு. கற்களை 

உரசினால் 
தீப்பொறி பறக்கிறதே சான்று.

காற்று: கல்லில் காற்று உண்டு. எனவே தான் கல்லில் 

தேரை 
கூட உயிர் 
வாழ்கிறது.

ஆகாயம்: ஆகாயத்தைப் போல், வெளியிலிருக்கும் 

சப்தத்தை 
தன்னகத்தே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி

 கல்லுக்கு உண்டு. 
எனவே 
தான், கருங்கல்லில் கட்டப்

பட்ட கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் 

அதிசயம் நடக்கிறது. திருவையாறு ஐயாரப்பன் 

கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்

பதை நாம் ஆனந்தமாக 
கேட்டு மகிழலாம்.இக்காரணங்

களினால், 
இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின்

 
(ஐம்பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் 

வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம், 

அர்ச்சனை, ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது, 

ஒரு கோவிலின் பஞ்ச பூதங்களின்
தன்மை 
அதிகரிக்

கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும் போது, நம்

 உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி, அதன் 

மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் ஏற்படுகின்றன.

இதுவே, கருங்கல்லில் சிலை வடிப்பதன் இரகசியம்.

நல்ல செய்திகளை பகிர்வோம், பயனடைவோம்.

No comments:

Post a Comment