Wednesday, September 18, 2013

பித்ரு தர்ப்பணம்.

பித்ரு தர்ப்பணம்
பிறக்கும் முன் பட்ட கடனுக்கு நாம் எப்பொழுது, எப்படித் திருப்பி அடைக்கிறோம்?

தாய், தந்தையரது செல்களின் ஒடுக்கத்தில் நுழைந்து பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்கிறோமே, அப்பொழுது கடன் படவில்லையா? அவர்களது மரபணு மூலமாக, ஐம்பூதங்களிளிருந்தும், சத்தினை இழுத்து நம் உடலை வளர்க்கிறோமே, அந்த ஐம்பூதங்களுக்கும் கடன் படவில்லையா? இழுக்கும் மூச்சுக் காற்றுக்கே, திருப்பித் தந்தால்தான் நம் வாழ்கை நோயற்று இருக்கும். பலப் பலவிதமான உடல் பகுதிகளுக்காக ஐம்பூதங்களிலிருந்து ஓயாது பத்து மாதங்கள் தேவையானவற்றை தாயின் கொப்பூழ் கொடி மூலமாகப் பெற்றிருக்கிறோமே, அது கடன் இல்லையா? அதை எப்படி, எப்பொழுது திருப்பித் தருகிறோம்?

அங்குதான் வேத மதத்தின் மிக உயர்த்த இயற்கை சமன்பாடு சிந்தனை தெரிகிறது. பிண்டமாக, உதகத்தில் (நீரில்) நிலைபெற்று கர்ப்பத்தில் நாம் பெற்றதை, உதகத்தில் பிண்டத்தை இணைத்து, பிண்டோதகக் கிரியையாக, யார் மூலமாகப் பெற்றோமோ, அவர் மூலமாக, அவர் நாம் பிறக்கும் முன் இருந்த நிலையை ஒத்த நிலையை இறப்பில் அடைந்தவுடன், திருப்பித் தருகிறோம்.

இங்கே கடனைத் திருப்பிச் செலுத்த உதவும் Medium பெற்றோர். கடன் பட்டது இயற்கைக்கு.

உதகத்தில், பிண்டம் வளரக் கடன் வாங்கினோம். பிண்டத்தை உதகத்தில் கரைத்து அதைத் திருப்பிச் செலுத்துகிறோம்.

நம் பெற்றோர், பாட்டன்கள், அவர்தம் பெற்றோர் என்று குறைந்தது மூன்று தலைமுறை வரை மரபணுவை கருவில் கடன் வாங்குகிறோம். அதன் அடிப்படையில் இயற்கையிலிருந்து நமக்குத் தேவையானதை எடுத்துக்கொள்கிறோம். அதைத் திருப்பித் தரவில்லை என்றால், நம்மிடம் உள்ள இருப்பு குறைந்து விடும். குறைந்த இருப்பிலிருந்து நம் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் எந்த அளவு எடுத்துக் கொள்ள முடியும்? சொத்து இருந்தால்தானே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்க முடியும்? கடன் வைத்திருந்தால் கடன் கொடுத்தவன் (இயற்கை) நம் பிள்ளைகளை விடுவானா? அல்லது அவர்கள் கடன் கேட்டால் கொடுப்பானா? இல்லையே! இயற்கை நமக்குத் தருவது நோயற்ற வாழ்வு. நாம் இயற்கைக்குக் கடன் பட்டால், நம் பிள்ளைகளுக்குக் தேவையான கடன் (நோயற்ற வாழ்வு) இயற்கையிலிருந்து கிடைக்காமல் போகும்.

மேலே கூறப்பட்ட சிசேரியன் குழந்தை உதாரணத்தைப் பாருங்கள். வயிற்றைத் திறந்தும், அது ஜீவிதத்தில் இருக்கிறது. அந்த ஜீவிதம் வளர இடம் தந்தது தாய் வயிறு. ஜீவிதம் பெற்றது அவள் கொப்பூழ் கொடி மூலமாக; அது அவள் இயற்கையிலிருந்து பெற்ற உணவு. இன்றைக்குப் பரிசோதனைக் குழாயில் கருவை உண்டாக்கினாலும், கரு வளர வேண்டியது தாயின் கர்ப்பத்தில். அதற்கு மாற்று என்றுமே வர இயலாது.

பெற்றோர் மூலமாக நாம் பஞ்ச பூதங்களுக்கும் பட்ட கடனை, தீவிர சிந்தனையுடன் (ஸ்ரத்தையுடன்) பிண்டம் வைத்து நீர் மூலமாகத் திருப்பித் தருகிறோம்.

பிரபஞ்சங்களை கர்ப்பத்தில் வைத்துள்ள இறைவனை இதே எண்ணத்தில் பாருங்கள். அவனுக்கும் நாம் கடன் படவில்லையா? நம்மை உருவாக்கி, பிறப்பித்து, கர்ம வினையை முடிக்க உதவி, இந்தக் கர்மச் சக்கரத்திலிருந்து விடுபட உதவுகிறானே, அவனுக்கு என்ன திருப்பிச் செய்கிறோம்?

அவன் எதிர்பார்க்க மாட்டான்; எதிர்பார்க்கக் கூடாது என்றெல்லாம் சொல்லலாம். பெற்ற தாயும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. எதிர்பார்ப்பதும் இல்லை. ஆனால் பிள்ளைகளான நமக்குக் கடமை உண்டல்லவா? அவளுக்கு ஏதேனும் செய்து அவளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்ய வேண்டும்; நாம் செய்வதில் அவள் பெருமை அடைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம் அல்லவா? அதைத்தான் கடவுளுக்கும் நாம் செய்ய வேண்டும். அவனை உயர்த்திப் பேசுவதில், புதிதாக அவனுக்குப் பெருமை வந்து விடுவதில்லை. அப்படிப் பேசுவது நமக்குத் தான் பெருமை- எப்படிப்பட்ட தாயை நான் அடைந்துள்ளேன் என்று பிள்ளைகள் பெருமிதத்துடன் சொல்வதைப் போல.


மகாளய அம்மாவாசை.

இது புரட்டாதி மாதம் வரும் அம்மாவாசை.

செப் 19 2013 அமெரிக்க நேரப்படி. புரட்டாதி மாதம் வரும் பிரதமை திதியில் தொடங்கி அமாவசை வரை 16 தர்ப்பணம் செய்யவேண்டும். அதாவது 14 நாட்களும் செய்து அமாவசை அன்று 2 தர்ப்பணம் செய்யவேண்டும், ஒன்று எப்பவும் செய்யும் அமாவசை தர்பனமும் அதன் பின் மகாளய அமாவசை தர்பனமும் செய்யவேண்டும்.

இந்த பித்ரு தர்ப்பணம் செய்ய. நீங்கள் 

இதற்கு நீங்கள் ஒரு பிராமணரை தொடர்புகொண்டு அவர்மூலமாக செய்வது சிறந்தது. ஆனால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அப்படி யான வசதி இல்லாத காரணத்தால். நீங்களாகவே மிக எளிமையான முறையில் செய்யலாம். அதற்க்கு உங்களுக்கு தேவையானவை.

1 பெரிய தட்டம், (தாம்பாளம்)
1 டம்ப்ளரில் தண்ணீர் 
அரிசி மாவு 

காசு 48 coin  ஒரு நாளைக்கு மூன்று வீதம் 16 தர்பனத்திற்கு 48

கருப்பு எள்ளு 

தரப்பை  4 அங்குலம் அதாவது 4 inch நீளமுள்ள 96 தர்ப்பை ( ஒரு நாளைக்கு  6 வீதம் 16 நாட்களுக்கு 96 தரப்பை)

பூ அல்லது துளசி 

மஞ்சள் பிள்ளையார் அல்லது சிறிய பிள்ளையார் சிலை.

சந்தானம், குங்குமம், அட்சதை (பூ கிடைக்காதவர்கள் மஞ்சள் கலந்த அரிசி)

எப்படி செய்வது.

முதலில் பிள்ளையாரை வணங்கி அவருக்கு தூப தீபம் காட்டி பின் கிழக்குமுகமாக அமர்ந்துகொண்டு.
தாம்பாளத்தில் (தட்டத்தில்) 6 தர்ப்பையை அதன் நுனிப்பகுதி தெற்கும் வடக்குமாக பார்க்கும் படி வைத்து. 
அதன் இரு நுனியிலும் சந்தானம் குங்குமம் வைத்து பின் நடுவிலும் சந்தனம் குங்குமம் வைக்கவும். பின் 3 (coin ) காசுகளை எடுத்து, ஒன்று ஒரு நுனியிலும் மற்றது நடுவிலும் மூன்றாவது மற்ற நுனியிலும் வைத்து பின் பூ அல்லது துளசி அல்லது மஞ்சள் அரிசியை தர்ப்பையின் மூன்று பக்கத்திலும் போட்டு.

இப்போது உங்களின் வலது கையில் அதாவது உள்ளங்கையில் சிறிது பச்சரிசிமாவையும் கருப்பு எல்லையும் எடுத்து கொண்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும், 

இப்போது மிகவும் மனம் உருகி உங்களின் விருப்பமான தெய்வத்தை மனதில் மனமுருகவேன்டவும் அப்பாடி வேண்டும் பொது உங்களில் கடவுளின் அருள்வெள்ளம் பரவும். கடவுளின் தீட்சண்யம் பரவும், சிலர் அதை உணரமுடியும், சிலரால் உணரமுடியாது. அப்படி உணரமுடியவில்லை என்றாலும் கட்டாயம் அங்கே கடவுளின் தீட்சண்யம் இருக்கும். ஆகவே அப்போது நீங்கள் இவ்வாறு சொல்லவேண்டும்.

எனது தாய் வழி 6 தலைமுறைமூதாதயர்களையும்  தந்தை வழி 6 தலைமுறை மூதாதயர்களையும் நான் மிகவும் அன்புடனும் மரியாதையுடனும் வணங்குகின்றேன், தயவுசெய்து இப்போது அடியேன் வழங்கும் இந்த எள்ளும் அரிசிமாவையும் தண்ணீரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்,  அத்துடன் இப்போது ஏற்ப்படும் கடவுளின் தீட்சண்யத்தை பயன்படுத்தி உங்கள் குறைகலனைத்தும் நீங்கி முழுமையான நிறைவுடனும் ஆனந்தத்துடனும்  பேரானந்த பரஞ்சோதியில் கலந்திடுங்கள்.  
 அத்துடன்  அடியேனையும் எனது குடும்பத்தையும் எனது அடுத்த தலைமுறையினரையும் ஆசீர்வதித்து வாழ்த்துமாறு அன்புடன் வணங்குகின்றேன்.  என்று கூறி.

கையில் உள்ள அரிசி மா , எள்ளு , தண்ணீரை தர்ப்பையில் போட்டுவிட்டு கையை அந்த தட்டத்திலேயே கழுவிவிட்டு, தூபம் (சாம்பிரானிகுச்சி ) காட்டி பின் தீபம் காட்டி விட்டு. தட்டத்தின் முன் விழுந்து வணங்கி விட்டு தட்டத்தில் உள்ளதை ஆற்றிலோ அல்லாது பூசெடிக்கோ (வீட்டிற்க்கு வெளியே இருக்கும் பூச்செடியிலோ அல்லது மரத்திர்க்கோ ஊற்றவும்.

இது போல் 14 நாட்கள் செய்துவிட்டு 15 வது நாள் வீட்டிலும் பின் சிவன்கொவிளிலும் செய்யவும். 
இது கலை சூர்யோதயத்தின் போது செய்யவேண்டும்.
நீங்கள் அனைவரும் பித்ருக்களின் பரிபூரண ஆசிபெற்று ஐஸ்வரியம் ஆரோக்கியம், ஆனந்தமான உறவுமுறை, பரிபூரணமான தனிமனித ஒழுக்கம், சம்பூர்ண ஜீவன்முக்க்தியும் பெற்று வாழ பேரானந்தப் பெருன்ஜோதியின் அருளால் வாழ்த்துகின்றோம்.



http://www.youtube.com/watch?v=iDbR7fuSDsc&feature=player_detailpage