Sunday, April 24, 2011

சைவத்தின் சரிதம். 8

4 . சைவ சித்தாந்தம்  


அடிப்படை நூல்கள்
           சைவ சித்தாந்தம் தமிழ் நாட்டில் வழங்கும் மெய்ப்பொருட் கொள்கையாகும்.
இதற்கு அடிப் படையை அமைத்துத் தருவன வேதங்களும் திருமுறைகளும் சித்தாந்த சாத்திரங்களும் ஆகும். இவற்றுள்ளும் பின்னர்க்கூறிய இரண்டுமே மிகவும் இன்றியமையாதவை. சைவ நாயன்மார்கள் அருளியவை பன்னிருதிருமுறைகள் எனப்படும்.
திருஞான சம்பந்தர் 1 - 3 திருமுறைகள். 
திரு நாவுக்கரசர் 4 - 6 திருமுறைகள்.    
சுந்தரமூர்த்தி நாயனார் 7 ஆம் திருமுறையும்,
 தேவாரங்கள், மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் - திருக்கோவையார் 8    திருமுறை. ஆகியவை முதல் எட்டுத் திருமுறைகள் ஆகும்.
இந்நால்வரும் சமயக்குரவர் எனப்படுவர். 
திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்வர் இயற்றிய திருவிசைப்பா - திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறை;
திருமூலரின் திருமந்திரம் 10 ஆம் திருமுறை.
திரு ஆலவாயுடையார் (சிவபெருமான்) தொடங்கி நம்பி ஆண்டார் நம்பிகள் வரை உள்ள பன்னிருவர் செய்த 40 பிரபந்தங்கள் 12 ஆம் திருமுறை.
நம்பியாண்டார் நம்பிகளே இராசராச  சோழன் காலத்தில் திருமுறைகளாகத் தொகுத்தவர் (கி.பி.1000 - 1040 ). இதன் பின்னர் தோன்றிய சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் 12 ஆம் திருமுறை.

         சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கு ஆகும். அவை: 
1 . திரு உந்தியார் - ஆசிரியர் திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் (கி பி 1148 )
2 . திருக்களிற்று பாடியவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் கி பி 1178 
3 . சிவஞான போதம் - திருவெண்ணெய் நல்லூர் மெய்க்கண்ட தேவநாயனார்.
4 . சிவஞான சித்தியார்.
5 . இருப்பா இருபஅஃது இவ்விரண்டையும் இயற்றியவர் மெய்கண்ட தேவரின்     
     சீடர் அருள் நந்தி சிவாசாரியார் (கி.பி. 1253 )
6 . உண்மை விளக்கம்- திருவதிகை மனவாசகம் கடந்தார். இனி வரும் எட்டு 
     நூல்களையும் இயற்றியவர் தில்லை வாழ் அந்தணர் மரபைச் சேர்ந்த 
     கொற்றவன் குடி உமாபதி சிவம் (கி.பி.1300 - 1325 ) இவை சித்தாந்த அஷ்டகம் 
    எனப் பெயர் பெரும்.
7 . சிவபிரகாசம்
8 . திரு அருட்பயன் 
9 . வினா வெண்பா 
10 .போற்றிப் பக்ரோடை
11 .கொடிக்கவி
12 .நெஞ்சு விடு தூது 
13 .உண்மைநெறி விளக்கம்
14 .சங்கற்ப நிராகரணம்.

        சைவ சித்தாந்தக் கொள்கையை முறைப்படி வகுத்துத் தத்துவமாக்கிய முதல் முயற்சியாளர் மெய்கண்டாரே ஆவார். இவரே திருக்கயிலாய பரம்பரையில் வந்த சந்தான குரவர்கள் நால்வருள் முதல்வர். அதனாலேயே இந்த நூல்கள் மெய்க்கண்ட சாத்திரங்கள் எனப்படுகின்றன. மெய்க்கண்டார், அருள் நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம் ஆகிய நால்வரும் சந்தான குறவர் எனப்படுவர். இவர் இயற்றிய சிவஞான போதமே இச்சாத்திர நூல்களுள் தலைமை சான்றதாய் விளங்குகிறது. காரணம் இதுவே சிவாகம அறிவும் திருமுறை ஞானமும் ஒன்றை ஒன்று-சிவம், அதன் உண்மை இயல்பை உணரும் அறிவு - ஞானம் அவ்வறிவினால் தெளிவடைந்து பெரும்பயன்- போதம். இதற்கு ஆகமாந்தம் என்றொரு பெயரும் உண்டு. இச்சிவஞான போதத்தைச் சிறப்பித்துக் கூறும் பாடல் ஒன்று.

வேதம் பசு; அதன்பால் மெய் ஆகமம்; நால்வர்
ஓதும் தமிழ் அதனின் உள்ளுறு நெய் - போதம்மிகு
நெய்யின் உருசுவையால் நீள்வெண்ணெய் 
மெய்கண்டான் 
செய்த தமிழ் நூலின் திறம்.

     இதன் பொருள்: வேதம் பசு; அதன் உண்மையான பால் ஆகமம்;
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் பாடிய நற்றமிழ் 
அப்பாளிநின்றும் எழுந்த நெய்; அந்த நெய்யின் சுவைதான் திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் இயற்றிய இந்தச் சிவஞான போதம் என்னும் செந்தமிழ் நூல். இந்நூல் வடமொழியில் உள்ள ரௌரவாகமத்தின் 73 -ஆம் பகுதியான பாபவிமோசனப் படலத்தின் 12 ஆம் அத்தியாயத்தின் மொழிப்பெயர்ப்பு என்பது ஒரு சிலரின் கருத்து.

அடுத்து நாம் சித்தாந்த மெய்ப்பொருள்கள்        

Friday, April 22, 2011

சைவத்தின் சரிதம். 7

ஆன்ம விடுதலை 

                 தனித்த ஆன்மா, சிவத்தின் ஒரு பகுதி (அம்சம்) தான். ஆகவே, சிவத்திடமிருந்து புறப்பட்ட அது, சிவசாராம்சத்தில் பங்குகொண்டு, இறுதியில் சிவத்திடமே சென்று சேர்ந்து அமைதியைக் காண்பதே அது தன்னைச் சிவத்திடமிருந்து வேறுபட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறது. அறிவு கொளுத்தப்பட்டதும் அறியாமை நீங்கப்பெற்றுத்தான் சிவத்தைச் சார்ந்தது என்பதை உணர்ந்து வீடு பெற முனைகிறது. அது சிவத்திடம் இருந்து வேறுபட்டதில்லை என்றாலும் சிவத்துடன் ஒத்ததும் அல்ல. இந்த இரண்டுக்கும் உள்ள இந்தத் தொடர்புதான் பேதாபேதம் ( பேதம்+அபேதம்) வேற்றுமையில் ஒற்றுமை எனப்படுவது. ஆன்மாவின் இறுதி நோக்கம் இந்த தொடர்பினை உணர்ந்து கொள்வதுதான். இப்படி உணர்தலே சேர்க்கை (ஐக்கியம்) ஆகும். இந்தச் சேர்க்கையினால் ஆத்மா ஈடிணை இல்லாத இன்பத்தை அடைந்து மகிழ்கிறது. இந்த அனுபவத்தின் இறுதி நிலையே 'லிங்க சாமரஷ்ய' என்பது; அதாவது லிங்கத்துக்கும் (சிவம்) அதன் பகுதியான அங்கத்துக்கும் (ஆன்மா) இடையில் உண்டாகும் அகநிலை முற்றொருமை என்பது.

விடுதலைக்கு வழிகள் 

              வீரசைவ நெறியில் விடுதலைக்கு வழிவகுக்குமிடத்து மூவரைக் குறிப்பிடுகிறது. அவர்கள் குறு, ஜங்கம, லிங்க ஆகியோர். நல்லாற்றுப்படுத்தும் ஆசிரியனே குரு, உய்வு பெற்ற நல்லான்மாக்களே ஜங்கம. முதலிலேயே குறிப்பிட்ட சிவ பரம்பொருளே லிங்க வீடு பேற்றை விழைபவன் இம்மூவரிடத்தும் சரண் புக வேண்டும்; தெய்வ அருளைப்பெற வணங்கி வழிபட வேண்டும்; அத்துடன் தன்னை இவர்களுடன் முற்றோருமைப் படுத்திக் கொள்ளவேணும்.
இந்த முற்றோருமைப் பேற்றை அடையவிரும்புபவன் 'அஷ்டாவறன' என்னும் எட்டு விதிகளை கடைபிடிக்க வேண்டும்;
1 . குருவுக்குப் பணிந்து நடத்தல். 
2 . லிங்க வழிபாடு 
3 . ஜங்கமத்திர்க்குப் பணிவு
4 . திருநீறு (விபூதி) பூசுதல்
5 . ருத்திராட்ச மாலை அணிதல் 
6 . குரு அல்லது ஜங்கம ஆகியோர் பாத தீர்த்தம் பருகுதல் (பாதோக)
7 . குரு, ஜங்கம, லிங்க ஆகியோருக்கு உணவிட்டு எஞ்ஞியத்தை உண்ணுதல்                     
      (பிரசாத) 
8 . நமச்சிவாய என்னும் பஞ்சாச்சர மந்திரத்தை உச்சரித்தல். இவற்றின் மூலம்   ஆன்மிக முதிர்ச்சியைப் பெரும் ஆன்மா உய்வடைந்து இறைவனிடம்   
இணைகிறது.

அடுத்து நாம் பார்க்க இருப்பது சைவ சித்தாந்தம்
          

Thursday, April 21, 2011

சைவத்தின் சரிதம். 6

'அங்க ஸ்தல'
              
      தனித்த ஆன்மாக்களுக்கே உரிய பண்பு 'பக்தி' ஆகும். அது கடவுளை நோக்கியது இந்த நோக்கத்தின் வளர்ச்சியில் மூன்று படிகள் உண்டு. இதற்குத் தகுந்தபடி 'அங்க ஸ்தல' என்பதில், அதாவது தனித்த ஆன்மாக்களைப் பற்றியதில் மூன்று பிரிவுகள் உள்ளன. அவற்றுள் மிக உயர்ந்த பிரிவு யோகாங்க, அடுத்தது போகாங்க, மற்றயது தியாகாங்க. முதலாவது, ஒருவன் சிவத்துடன் ஒன்றுவதன் மூலம் பேரின்பம் பெறுதல்; இரண்டாவது அவன் சிவத்துடன் சேர்ந்து மகிழ்ச்சி அடைதல்; மூன்றாவது இந்த உலகம் தற்காலிகமானது அல்லது மாயையானது என்று விட்டு விடுதலை ஆதல். இதையே இன்னொரு விதமாகவும் சொல்லலாம்;
       முதலாவது காரணத்தில் உறுதிப்பாடும் ஆழ்ந்த உறக்க நிலையும் போன்றது; 
இரண்டாவது; நுன்னுடலும் உறக்கத்தில் கனவும் போன்றது;
மூன்றாவது; மொத்த உடலும் உறக்கம் நீங்கி எழுகின்ற நிலையும் போன்றது.
இங்குச் சொன்ன மூன்று அங்கங்களும் ஒவ்வொன்றும் மேலும் இருவகைப் பட்டிருக்கும்.யோகாங்க என்பது ஐக்கிய, சரண என இரண்டாகும்.
1 . இவ்வுலகம் முழுவதும் உண்மை இல்லை என உணர்ந்த ஒருவன் சிவத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்வது, ஐக்கிய என்னும் சமரசா பக்தி. இதில் கடவுளும் ஆன்மாவும் பேரின்ப அனுபவத்தில் ஒன்றி விடுகின்றனர்.
2 . சரண பக்தியில் ஒருவன் லிங்கம் அல்லது கடவுளையும், ஒருவனே துய்க்கும் தனி அனுபவம் இது. யோகாங்க என்பது பிராணலிங்கின், பிரசாதின் என இருவகைப்படும்.
3 . வாழ்க்கையின் மீதுள்ள பற்றினை விடுவித்து, அகங்ககாரத்தைத் துறந்து, மனம் முழுவதையும் லிங்க அல்லது கடவுள் மேல் செலுத்துதல் பிராணலிங்கின்.
4 .பிரசாதின் என்பது ஒருவன் தான் அனுபவிக்கும் அனைத்துப் பொருள்களையும் கடவுளுக்கு அர்ப்பணித்து அமைதியை (பிரசாத) நாடுவதால் கைவரப்பெறுதல் ஆகும். இறுதியான தியாகங்க என்பது மகேஸ்வர, பக்த என இரு பிரிவினதாகும். 
5 . ஒருவன் கடவுள் இருக்கிறார் என்று ஆழ்ந்த நம்பிக்கையும் உறுதியும் கொண்டு, அக்கடவுளான லிங்கத்துடன் ஒன்ற வேண்டும் என்னும் பிடிப்புடன் உண்மை, நல்லொழுக்கம், தூய விரதம் ஆகியவற்றைக் கடைப்பிடித்து வாழ்தல் மகேஸ்வர ஆகும். 
6 . பக்தன் ஆனவன் ஈர்க்கும் எல்லாப் பொருட்கள் மீதும் தன் மனத்தைச் செலுத்தாமல் பக்தியுடன் பூசனை புரிந்து உலக மக்களினின்றும் வேறுபட்ட வாழ்க்கை வாழ்வதே பக்த எனப்படுவது.

அடுத்து நாம் காண இருப்பது ஆன்ம விடுதலை.        

Wednesday, April 20, 2011

சைவத்தின் சரிதம். 5 கடவுட் கொள்கை

கடவுட் கொள்கை 

               சத் (உண்மை) சித் (அறிவு) ஆனந்த (மகிழ்ச்சி) என்னும் மூன்று பண்புகளையும் சேர்த்துள்ள மிக உயர்ந்த பிரம்மம் தான், சிவதத்துவம். வீரசைவம், இதனை 'ஸ்தல' என்று குறிப்பிடுகிறது. இதற்கு இடம்,  நிலை, இருப்பிடம் என்றும் பொருள்கள் உண்டு. எல்லாப் பொருள்களுக்கும் இருப்பிடமாய் இருப்பது பரசிவம். அவருக்குள் இவ்வுலகம் இருக்கிறது(ஸ்த):  இறுதியில் அவரையே சென்று அடைகிறது (ல). அவர் தனது விருப்பத்தின் பேரிலேயே லிங்கமாகவும் அங்கமாகவும் பிரிந்திருக்கிறார். அவரது சக்தியும் கலா (பகுதி) என்றும் பக்தி (அன்பு) என்றும் இரு பிரிவாய் இருக்கிறது. 'கலா' சிவத்தை நாடுகிறது. 'பக்தி' தனித்த ஆன்மாவைச்சேருகிறது. சிவத்தினின்றும் உலகத்தை வெளிப்படுத்தும் பணியைக் 'கலா' செய்கிறது. சிவத்திடம் ஆன்மாவைச் சேர்த்திடப் 'பக்தி' துணை நிற்கிறது.

               'லிங்க ஸ்தல' ஆறு வடிவங்களில் வெளிப்படுகிறது. இவை 'ஷட் ஸ்தல (ஷட்-ஆறு) எனப்படும். இவ்வாறே 'அங்க ஸ்தல' என்பதும் ஆறு வடிவங்களைப் பெறும். ஒவ்வொரு வடிவ வெளிப்பாடும் நன்மையில் தொடங்கி மொத்த நிலையை அடைகிறது. ஒவ்வொரு லிங்க வெளிப்பட்டின்போது அதற்குப் பொருந்திய அங்க வெளிப்பாடும் தோன்றும். இதனால் இவ்விரண்டும் எல்லா நிலைகளிலும் பிரிந்திராத் தன்மை கொண்டுள்ளன என்னும் உண்மை புலப்படுகிறது. இந்த உண்மையின் மூலம் உணர்த்தபடுவது என்ன வெனில் இதன் இறுதி இலக்கு அங்கமும் லிங்கமும் ஒன்றாக சேர்வதே அதாவது ஒன்றுவது என்பதே.

'லிங்க ஸ்தல'

                 லிங்க என்பது சிவமே தவிர அவரை எந்த விதத்திலும் குறைக்கும் அடையாளம் அல்ல. லிங்க ஸ்தல - பாவலிங்க, பிராணலிங்க, இஷ்டலிங்க என மூன்று வகைப்படும். 1 .பாவ லிங்க என்பது பகுதிகள் (கலா) இல்லாதது.
நம்பிக்கையால் மட்டுமே உணரப்படுவது. சத் (உண்மை)  ஆனா அது இடத்தாலும்  காலத்தாலும் கட்டுபடாதது: உயர்ந்ததை விட மிகவும் உயர்ந்தது. 2 .பிராண லிங்க என்பது மனத்தாலேயே உணரக்கூடியது. பகுதிகள் உடையது.   3 .இஷ்ட லிங்க என்பது பகுதிகள் கொண்டது, ஆனால் கண்ணால் காணக் கூடியது. விரும்பிய பொருளை தரவல்லது, துயர்களை கலயவள்ளது; இது விரும்பி வணங்கப்படுவதால் இப்பெயரைப் பெறுகிறது. 'பிராணலிங்க' பேரான்மாவின் உணர்வு (சித்) என்றால் 'இஷ்டலிங்க ' மகிழ்ச்சி,இன்பம் ஆகும். முதலாவது மிகஉயர்ந்த தத்துவம். இரண்டாவது நுண்ணிய உருவம், மூன்றாவது மொத்த உருவம். இந்த மூவகை லிங்கங்களும் ஆன்மா, வாழ்க்கை, மொத்தம் என்னும் வடிவங்கள் கொண்டு, பயன் (பிரயோகம்), மந்திரங்கள், செயல் (கிரியை) ஆகியவற்றால் முறையே விவரிக்கப் படுகின்றன; கலா, நாத, விந்து என்னும் வடிவங்களைப் பெறுகின்றன. இந்த மூன்று லிங்கங்களும் மீண்டும் மூவகைபடுகின்றன. முதலாவது மகாலிங்க, பிர சாதலிங்க எனவும், இரண்டாவது சரலிங்க, சிவலிங்க எனவும், மூன்றாவது குருலிங்க, ஆசாரலிங்க எனவும் ஆகும்.


               இந்த ஆறும் ஆறு வகைச் சக்தியினால் இயக்கப்பட்டு ஆறு வடிவங்களைப் பெறுகின்றன.
 1 .சித்தின் ஆற்றலால் சிவா தத்துவம் இயக்கப்படும் போது மஹா லிங்க வடிவம் பெறுகிறது. இதன் சிறப்புத் தன்மைகள் பிறப்பு, இருப்பு, இன்மை, மலம் (களங்கம்) இன்மை, திரிபு இல்லாமை, ஆழமுடைமை, நம்பிக்கையாலும் அன்பாலும் உணரக் கூடிய தன்மை, கருத்தியலான்மை (சைதன்ய ரூப).
 2 . சிவா தத்துவம் மிக உயர்ந்த ஆற்றலான பராசக்தியுடன் கலக்கும் போது சதாக்யம் என்னும் தத்துவம் வெளிப்படுகிறது. இது தான் ஒளிமயமானது, நித்தியமானது. பிரிக்க முடியாதது, புலன்களால் உணர முடியாதது, அறிவினால் உணரக்கூடியது, அழிவிலாதது. வளரும் குணம்கொண்ட ஆதி நிலையான இதுவே பிரசாதலிங்க.
 3 .மூலாதார ஆற்றலால் (ஆதி சக்தி) சிவ தத்துவம் இயக்கப்படும் பொழுது சரலிங்கம் உருப்பெறுகிறது. இது வரம்பிலாதது, உலகெங்கினும் பரவி இருப்பது. முழுதும் ஒளிமயமானது. புருஷ எனப்படும் இது பிரதான அல்லது பிரக்ருதியினும் மேம்பட்டு, உயர்ந்து. உள்ளத்தினால் மட்டும் உணரக்கூடியது.
 4 .இச்சா சக்தியினால் இயக்கமுறும் சிவதத்துவம் சிவலிங்கமாக வடிவம் பெறுகிறது. அகங்கார உணர்வு, அறிவு, ஆற்றல் ஆகியன கொண்டு தெய்வீக ஒளியும் அமைதியும் தவழுகின்ற ஒற்றை முகத்துடன் விளங்கும் இது வரம்புக்குட்பட்ட தத்துவமாகும். 
5 .அறிவு, ஆற்றல் (ஞான சக்தி) கொண்டு இயக்கப்படும் சிவதத்துவம் குருலிங்க வடிவம் ஏற்கிறது. அறிவு புகட்டும் கலை, அறிவியலுக்குத் தலைமை தாங்கி, முழு, ஒளியுடன், எல்லையற்ற மகிழ்ச்சிக் கடலில் திளைத்து மனித புத்தியில் உறைகிறது. 
6 .செயல் ஆற்றலின் (கிரியா சக்தி) ஆளுமைக்கு ஆட்படும் சிவ தத்துவம் ஆசார  லிங்க வடிவம் பெறுகிறது. இது தன்னுடைய செயற்பாட்டினால் எல்லாப் பொருள்களையும் தாங்கும் அடிநிலையாக இருக்கிறது. உள்ளத்தால் உணரப்படும், இதை துறக்க வாழ்வுக்கு இட்டுச் செல்கிறது.

மூல முழுமுதற் பொருள் தனக்கே உள்ள ஆற்றலினால் கடவுள் எனவும் ஆன்மா எனவும் பகுக்கப்பட்டு ஆறு வடிவங்களைப் பெறுகிறது என்பது, பரம்பொருளைப் பலவகையிலும் பார்க்கலாம். என்று கூறுவதாகும். முதல் வடிவம் வரம்பிலாப் பொருள், சுதந்திரத்துடன் இயங்குவது, இரண்டாவது மிக உயர்ந்த ஆற்றலினால் வளர்ந்து உருக்கொள்வது. மூன்றாவது இந்தச் சட உலகினின்றும் கடவுள் வேறானவர் என்று காட்டுவது, நான்காவது உடல் உருவம் கொண்டது. இந்த உடல் பொருள்களால் ஆனது அன்று; வைணவர்கள் கருதும் நாராயண, இராம, கிருஷ்ணர் போன்று தெய்வீக உடல் உரு உடையது. ஐந்தாவது மனித குலத்திற்கு அறிவு கொளுத்துவது. ஆறாவது தனித்த ஆன்மாவின் செயல்களை வீடு பெரும் வரை வழி நடத்த உதவுவது. இந்த வடிவில் சிவன் இரட்சகர் ஆகிறார்.
                                                                 'அங்க ஸ்தல'       
இனி அடுத்த தொடரில் 'அங்க ஸ்தல' பற்றி பார்ப்போம்.                                                                               
                                                                                                                                                                                  

Tuesday, April 5, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 4

வீர சைவம்  

இது தன்னுடைய தோற்றத்தை மிகப் பழங்காலத்தில் இருந்தே தொடங்குகிறது. ஆயினும் இது மிகவும் புகழ் பெற்றது. கி.பி.12   ஆம்  நூற்றாண்டில்தான். இதற்கு காரணமாக இருந்தவர் அப்போது கன்னட நாட்டில் வாழ்ந்த பசவா என்பவரே. இவரே இதனை நிறுவினார் என்னும் கருத்துக்கள் உள்ளது. ஆனால் இவரது வரலாற்றைக் கூறும் பசவபுரானத்தில் இவருக்கு முன்னரே விஷ்வேச்வரராத்ய, பண்டிதாராத்ய,  ஏகோராம  போன்றவர்கள் இருந்து சிவசக்தியை நிலை நாடியுள்ளதாகச் சான்றுகள் உள்ளன.

             பசவர் பிஜ்ஜ்ள (கி.பி.1157 - 1167 ) என்னும் அரசனிடம் அமைச்சராய் இருந்தவர். இவருடைய சகோதரியை அரசன் மணந்து கொண்டான். இவர் அரசச் செல்வத்துக்கு அதிகாரியாய் இருந்தபோது, வீர சைவ நெறியைப் பின்பற்றியவர்களுக்கு செல்வதை வாரி இறைத்தனர். இதை அறிந்த அரசன் இவர்மீது வெறுப்புக் கொண்டு இவரைத் தொலைத்திடத் திட்டமிட்டான். பசவர் அங்கிருந்தும் வெளியேறி விடவே அவரிப் பிடித்துவரப் பலரையும் ஏவினான். அவர் அவர்களை வென்று விரட்டி அடித்தார். ஆனால் அரசன் படை ஒன்றினை அனுப்பினான். பசவர் பலரையும் திரட்டித் தம்மை எதிர்கொண்ட படையினரை வென்றார். பின்னர் இருவருக்கும் ஒருவாறு உடன்படிக்கை ஏற்பட்டது. ஆயினும் உட்பகை மட்டும் இருந்து கொண்டே இருந்தது. இறுதியில் அரசன் கொல்லப்பட்டான். அதில் பசவருக்கும் பங்குண்டு என்பர். இந்த வரலாற்றிலிருந்து பசவர் கைதேர்ந்த அரசியல்வாதியாக இருந்தார் என்பதும், வீரசைவர்களுக்கு நிதி உதவி செய்து ஆதரித்தார் என்பதும் புலனாகின்றன. ஆகவே, வீர சைவம் கன்னட நாட்டில் பரவுவதற்குப் பசவர் தூண்டுகோலாய் இருந்தார் என்பதும் உண்மை. இவருக்குப் பின்னரே இது ஆந்திரத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் பரவியது.

அடிப்படை நூல்கள் 

             இதற்கு வேதங்கள், சைவ ஆகமங்கள், புராணங்கள், ஆகியவற்றுடன் புராதனர்கள் எனக் கருதப்படும் தமிழ் நாயன்மார்கள் பாடிய பாடல்களும், கன்னட அநுபூதிமான்கள் மொழிந்த அருளுரைகளும் (வதனங்கள் ) அடிப்படையான பிரமாண நூல்களாகும். இது லிங்காயதம் என்றும் வழங்கப்படுகிறது. காரணம் இதனைப் பின்பற்றுபவர்கள் எப்போதும் தமது உடலில் லிங்க உருவை அணிந்து கொண்டிருப்பதுதான். இதற்குச் சக்தி விசிஷ்டாத்வைதம் என்னும் பெயருண்டு. கடவுளின் அத்வைத நிலை அவருடைய 'சக்தி'யினால் 'விசேஷிக்'கப்படுவதால் இப்பெயர். இச்சமயத்தின்படி, கடவுளும் ஆன்மாவும் இந்தச் சக்தியின் மாற்றமுடியாத ஆற்றலினால் பிரிக்க முடியாதவாறு பினைப்புண்டிருக்கின்றனர். கடவுள் என்னும் முழுமையின் சிறிய பகுதிதான் தனித்த ஆன்மா, கடவுள் ஆன்மா என்றால் உடல் தான் தனித்த ஆன்மா.


உலகப் படைப்பு 

           பரமசிவம் எனப்படும் கடவுளே இவ்வுலகத்தின் இறுதி நிலைக் காரணர். ஆயினும் இவ்வுலகப் படைப் பாக்கத்தில் அவர் எந்த மாற்றத்தையோ, குறையையோ அடைவதில்லை. இதற்குக் காரணம் இந்த உலகபடைப்பானது அவரிடம் இருந்து பிரிக்கமுடியாத ஒரு சிறப்பு பகுதியான(கூறுஆன) மஹா சக்தியினாலேயே நடைபெறுவதுதான். சக்தி, மூலப் பிரகிருதி அல்லது மாயை என்பதுதான் பிரபஞ்சமாக உருப்பெறுகிறது. இந்த மாயை என்பது இயற்கையாகவே முழுமுதற்பொருளான பிரம்மத்துக்கு உரியதாயும், அதனுள்ளேயே வாழ்வதாயும் இருப்பது. அதாவது சிவத்துக்கு உரியதாயும் சிவத்துள்ளே வாழ்வதாயும் உள்ளது. உதாரணமாக நாம் ஒரு பாத்திரத்தை கடலில் போட்டுவிட்டு பார்க்கும் பொழுது அந்த பாத்திரத்தில் இருக்கும் நீர் கடல் நீரில் இருந்து பிரிந்து தனித்திருப்பது போல் தோன்றும் ஆனால் உண்மையில் அந்த நீர் கடலுக்கு உரியாதாயும் கடலுக்குள்ளேயே இருப்பதுவுமே உண்மை.

அடுத்து நாம் பார்க்க விருப்பது கடவுட் கொள்கை 

Monday, April 4, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 3

ஆன்ம விடுதலை 

முழுமுதற் பொருளான சிவத்துடன் முழுவதுமாக கரைந்து இருப்பதே  தனித்த ஆன்மா, இருந்தபோதிலும் தன்னுடைய இயல்பினை  (சொரூபத்தை) மறந்து சம்சாரத்தில் கிடந்தது உழல்கிறது. அந்த ஆன்மாவினை அதன் உண்மை நிலைக்குக் கொண்டு வருவதுதான் பிரத்யபிஜ்ஞா நெறியின் நோக்கமாகும். இதற்குரிய வழி, அதுதான் பரம்பொருளுடன் ஐகியம்மண நிலையில் இருப்பதை உணர்த்துவது தான். இதனை ஓர் எகிக்ஹ்கக்க்ட்டின் மூலம் உணர்த்தலாம்.
     வீரன் ஒருவனுடைய நற்குணங்களைக் கேள்விப்பட்ட ஒரு இளம் பெண், அவனைக் காணாமலேயே காதல் கொள்கிறாள். அவனைப் பார்க்க வேண்டும் என ஏங்குகிறாள். ஆகவே தனது விருப்பத்தை கடிதம் மூலம் எடுத்து உஅரைக்கிறாள். அவனும் வந்தான், அவனுடைய குணங்களை மட்டும் அறிந்திருந்த அவள், அவனை இதற்கு முன்னர் கண்டிராததால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. பின் தன தோழியர் எடுத்து சொன்னதும் அவனைப் புரிந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தாள். அதைப்போல, இந்தத் தனித்த ஆன்ம அந்த பேரான்மாவான பரம்பொருளுடன் ஒன்றிணைந்த ஒன்றே என்னும் உண்மையினை உணர்ந்துகொள்ளும் வரைக்கும் முழுமையான நிறைவு அடையமுடிவதில்லை. மகேஸ்வரனுடைய முழு நலன்களும் எல்லாம் வல்ல தன்மையும், அதை முழுமையாக அறிந்து உணரும் தன்மையும் போன்ற பல குணங்களும் எம்மிடமும் உள்ளது என்பதை சரியான குருவின் மூலம் உபதேசம் செய்யப்பட்டதும், நாம் ஆகிய தனித்த ஆன்மா தன்னை அடியாளம் கண்டு கொண்டு தன் இயல்பான முழு நலத்தையும் அடைகிறது.   

வீடு பேரு 


இத்தாகைய நிலையடைந்து ஆன்மா ஆதிநிலையான முழுமைக்கும் தூய உணர்தலுக்கும் திரும்புவதுதான் மோட்சம் (முக்தி, துரியா, ஸ்வர்க்கம்)என்கிறது காஷ்மீர சைவம். 'இப்படிப் பண்புகளைப் பற்றிய கற்பனை மறைந்ததும் (கட்டறுத்த ஆன்மாவான) அவன் மாயையின் திரிபுக் காட்சிகளை ( உண்மை என நினைத்து அவன் இவ்வளவுகாலம் செய்து வந்த அனைத்தும் போலியானவை என்று உணர்ந்ததும்) வென்றவனாகின்றான். அவன் பிரம்மத்தோடு நீருடன் நீரும், பாலுடன் பாலும் கலப்பது போல் ஒன்றாகிறான். சிவம் என்னும் முழுமுதற் பொருளுடன் இணைந்த அவனைத் துயரமும் மருட்சியும் ஆட்பருத்தமுடியாது ஏனெனில் அவனும் பிரம்மமாய் இருந்து இந்தப் பிரபஞ்சத்தையே அன்றோ பார்த்துக் கொண்டிருக்கிறான்? என்கிறார் அபிநவகுப்தர். 

ஆன்ம விடுதலைக்குத் தடைகள்

காஷ்மீர சைவத்தில் தனித்த ஆன்மா பரம் பொருட் பேரான்மாவுக்கு ஒத்த நிலையுடையது. ஆனால் மலங்களின் ஆளுமையால் ஆன்மாவால் இதை உணரமுடிவதில்லை. இம்மலங்கள் மூவகைப்படும். ஆன்மா அறியாமையினால் தன்னுடைய பொது இயல்பினை மறந்து, தன்னை மிககுரையுள்ளதாகக் கருதி, தனதல்லாத எல்லபோருட்களையும் தனதாய் நினைத்து ஒரு வரம்புக்குட்பட்டுத் தன்னைத்தானே சிறுமைபடுத்திக் கொள்வது ஆணவ மலம். ஆன்மாவின் உடலில் தோன்றும் மற்றக்கலங்கங்கள் பொருட்களை உருவாக்கும் வல்லமை படைத்த மாயாவினால் தோன்றும் மாயா மலம். நம் உள் உறுப்புகள் அல்லது இதயம் போன்றவற்றால் நிகழும் செயல்களால் ஏற்படும் மலம், கன்மம் ஆகும். சிவனின் நாத என்னும் பெண்மைக்கூறான முதன்மைச் சக்தியால் தொழிற்படுத்தப்படும் பொது பேச்சு நிகழ்கிறது. பேச்சில்லை என்றால் கருத்துக்கள் இல்லை. உலக வாழ்க்கை, உலக வாழ்க்கை இல்லை, மலங்களின்  தோற்றம் பேச்சிலேயே தொடங்குகிறது. இந்த நாத சக்திக்குப் பெண்ணுருவம் தந்து அம்பாள், அம்பா, ஜ்யேஷ்டா, ரௌத்ரி, வாமா, எனப்படுகிறாள். இறைவனை ஆழ்ந்து சிந்திப்பதன் பயனாகப் பரம்பொருளின் பார்வை நம்மில் படுகிறது . அப்படி படவே மலங்கள் களையப் பெற்று  வரம்புக்குட்படும் தன்மையும் நம்மை விட்டு நீக்கப்படுகிறது. இத்தகைய நிலைமை நிலைத்து இருக்கும் போது தனித்த ஆன்மா சுதந்திரனாகி பரம்பொருட் பெரான்மாவாகிறது. இந்தப் பரம்பொருட் பார்வை பைரவ எனப்படுகிறது. இப்பார்வை அவருடையதாகவும் அவரால் உண்டாக்கப்படுவதாலும் இப் பெயர் பெறுகிறது. 

அடுத்து நாம் காண இருப்பது  வீர சைவம். 



Thursday, March 31, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 2

2 . காஷ்மீர சைவம்
 காஷ்மீரத்தைச் சேர்ந்த தத்துவ தரிசிகளால் தொற்றுவிக்கப்பட்டுப் பெரும்பாலும் அப்பகுதியிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படும் சைவத்திற்குக் காஷ்மீர சைவம் என்று பெயர். இதற்குத் திரிக, ஸபந்தபிரத்யபிஜ்ஞா என்றும் பல பெயர்கள் உண்டு. பதி - பசு - பாசம் என்னும் மூன்று பொருள்களும் ஒன்றாய்க் கொண்டு விளங்கும் தத்துவம் 'திரிக' எனப்படுகிறது. சிவம் - சக்தி - அணு ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து இருப்பதாலும் இப்பெயர் பெறுகிறது என்று சொல்வர். முழுமையான ஒன்று என்பதிநின்றும் உலகின் பன்மை நிலைக்கு மாறும் கொள்கையைக் கொண்டிருப்பதை 'ஸ்பந்த' என்பது குறிப்பிடுகிறது. பிரத்யபிஜ்ஞா என்பது முற்றொருமை; அதாவது ஆன்மா தன்னைச் சிவத்துடன் ஒருமைப்படுத்திக் கொள்ளும் வழியினை அடையாளங் கண்டு தெளிந்திடும் நிலையைச் சுட்டுகிறது என்கின்றனர்.
               
இரு பிரிவுகள் 

காஷ்மீர சைவத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று ஸ்பந்த சாஸ்திரத்தையும், மற்றொன்று பிரத்யபிஜ்ஞா சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்டு உள்ளன. ஸ்பந்த சாஸ்திரத்திற்கு அடிப்படையாகக் கொண்டு உள்ளன. ஸ்பந்த சாஸ்திரத்திற்கு மூலவர்கள் வசுகுப்தரும் அவரது சீடர் கல்லதரும் என்கிறது சான்றுகள். இதன் ஆதார நூல்கள் 1 . சிவசூதிரம் அல்லது சிவசூதிராமணி, 2 .ஐம்பத்தொரு செயுல்களைகொண்ட ஸ்பந்தகாரிகை ஆகியன ஆகும். முதலாவது நூலைச் சிவனே வசுதேவருக்கு வெளிப்படுத்தினர் என்பது மரபு. சித்தர் அல்லது மானிட உருக்கொண்டு வந்து இதை வெளிப்படுத்தியதாகக் கூறுவார். இச்சூத்திரங்கள் மகாதேவமலை என்னும் இடத்தில் சிவனே வசுகுப்தரை அங்கு அழைத்துச் சென்று காட்டிக் கொடுத்ததாகவும் சொல்வதுண்டு. கடவுள் கனவில் வந்து சொன்னதாகவும் கூறுவதுண்டு.

              இரண்டாவது நூலைப்பற்றியும் இப்படிப்பட்ட மரபுவழிச் செய்திகள் உள்ளன. ஒன்று வசுகுப்தர் செய்தார் என்றும், இன்னொன்று கல்லதர் இயற்றினார் என்றும், பிறிதொன்று இந்தக் கொள்கைகளை வசுகுப்தரிடமிருந்து பெற்ற கல்லதர் தம் மாணவர்களுக்குக் கற்றுத் தந்திடவே சாரிகை ஆக்கித்தந்தார் என்றும் சொல்லப்படுகிறது. கல்லதர் அவன்திவர்மனின் ஆட்சிக்காலத்திலும் (கி பி 854 ). வசுகுப்தர் அவருக்கு முந்தியும் இருந்தவர்களாவர்.

ப்ரத்ய பிஜ்ஞா நெறியைத் தோற்றுவித்தவர் சோமனந்தர். இவர் இயற்றிய நூல் சிவதிருஷ்டி. ஆயினும் இந்நெறியின் தலைமை சான்ற சாத்திரத்தை உதயகரர் என்பவர் சூத்திர வடிவில் செய்யுள்களாக இயற்றியுள்ளார். இச்சூதிரங்களுக்கு விரிவுரைகளும் வியாக்கியானங்களும் செய்தவர் அபினவகுப்தர். இவர் இயற்றிய நூல் பரமார்ந்த சாரம் எனப்படும். இவர் கி பி 993 -1015 ஆண்டுகளுக்கு இடையில் நூல் செய்தார் என்பர்.

முடிந்த உண்மைப் பொருள் 

காஷ்மீர் சைவத்தின்படி சிவன் அல்லது சம்புதான் முடிந்த உண்மைப் பொருள். அசையும் பொருள், அசையாப்பொருள் ஆகிய அனைத்துப் பொருள்களின் ஆன்மாவைத் திகழ்பவரும் அவரே. அவர் எங்கும் கலந்த தன்மையராயும் (விஸ்வமய), எதையும் கடந்த நிலையினராயும் (விஷ்வோத்திர்ண) விளங்குகிறார். அவர் தூய உணர்வினர் (சைதன்ய ). முழுமையாய் அனுபவிக்கத்தக்கவர் (பரமேஸ்வர்), அவரிடம் இருந்துதான் இந்த உலகம் தோன்றுகிறது.

              காட்சிப் பொருளாயினும் சரி, பிரதிபளிப்பாயினும் சரி, எவ்வாறு சாறு, பாகு, வெள்ளம், சர்க்கரை, கற்கண்டு என்று எல்லாம் கரும்புச் சாற்றிலிருந்து ஒவ்வொன்றாய்த் தோன்றுகின்ற்னவோ அவ்வாறே வெவ்வேறு நிலைகளில் தோன்றுபவர் தலைமை நிலைக்கு ஏற்ப ஆன்மாவைத் திகழும் சம்பு என்னும் ஒருவரே என்பார் அபினவகுப்தர், கண்ணாடியில் தெரியும் காட்சிகளைக் கண்ணாடியினின்ரும் பிரிக்க முடியாது. ஆனால், அக்காட்சிகள் ஒன்ரினின்றும் ஒன்று வேறுபட்டவை. அதுபோல பரம்பொருளான பைரவரின் தூய முழுமைக் காட்சியிலிருந்து இந்தப் பிரபஞ்சம் வேற்றுமையின்றித் தோன்றினும் ஒவ்வொரு பகுதியும் வேறுவேறு, காட்சியும் வேறு வேறுதான். 

உலகப்படைப்பு

            இந்தப் பேருலகம் அவரது ஆற்றலால் வெளிப்படுவது இவ்வாற்றல் சக்தி எனப்படும். இது   ஐந்து வகைப்படுகிறது. 1 சித் சக்தி = தன்னொளி அல்லது தெளிவு ஆற்றல்; 2 ஆனந்த சக்தி = ஆனந்தமயமான சுதந்தர ஆற்றல்; 3 இச்சா சக்தி = விருப்பு அல்லது வேட்கை ஆற்றல்; 4 ஞான சக்தி = அறிவு ஆற்றல்; 5 கிரியா சக்தி = செய்கை அல்லது வினை ஆற்றல். தம் சொந்த விருப்பின் மூலம் (ஸ்வேச்சயா) இச்சக்திகளால் சிவன் வெளிப்படுகிறார். இவற்றைத் தாங்கியும் நிற்கிறார். (ஸ்வபித்தாவ்). அவர் சுதந்தரறாய், தமது விருப்பின் ஆற்றலினால் இருக்கும் பொருள்கள் யாவற்றையும் தோற்றுவிக்கிறார். இவ்வுலகையும் படைக்கிறார். அவர் தம்மிளிருந்து இந்த உலகைதொன்றச் செய்கிறார். அது உண்மையில் அவரினின்றும் வேறுபட்டது இல்லை. கண்ணாடியில் தோன்றும் வீடுகளும் நகரங்களும் இப்படி கண்ணாடியைப்பாதிப்பதில்லையோ அப்படித்தான் இந்த உலகத் தோற்றமும் அவரைப் பாதிப்பதில்லை. இதிலிருந்து இந்த உலகை உருவாகுவதற்குக் கடவுளுக்கு 'தர்மம்' எனப்படும் தூண்டும் (மூல காரணமோ, 'பிரதான' எனப்படும் முதற் (உபாதான) காரணமோ தேவை இல்லை என்பது நமக்கு விழங்குகிறது. ஆகவே கடவுளே முதற் காரணமாய் இருந்து உலகைத் தோற்றுவிக்கிறார் என்னும் வேதாந்த சூத்திரக் கொள்கையும், சங்கரரது மாயை என்னும் திரிபுகாட்சி தத்துவமும் காஷ்மீர சைவத்துக்கு உடன்பாடில்லாமல் உள்ளது.

அடுத்த பகுதியில் நாம் பார்க்கவிருப்பது ஆன்ம விடுதலை.                   
     

Tuesday, March 29, 2011

சைவத்தின் சரிதம். பூ.ஜெயராமன் 1

சைவத்தின் சரிதம் 


நன்றி
பூ.ஜெயராமன் மற்றும் அனுராகம்.

1 . வரலாற்றுப் பின்னணி 

இந்திய நாட்டில் வழங்கி வரும் மிகப் பழமை வாய்ந்த வழிபாடுகளுள் சிவ வழிபாடும் ஒன்று. இவ்வழிபாடே சைவம் என மலர்ச்சியுற்றது. சிவனை முதல்வனாகக் கொண்டு வழிபடும் சமயங்கள் பல உள்ளன. தமிழ்ச் சைவசித்தாந்த நூல்களில் பாசுபதம், மகாவிரதம், காபாலம், வாமம், பைரவம், ஐக்கியவாதம் என ஆறு அகப்புறச் சமயங்களையும் பாஷானவாதம், பேதவாதம், ஈசுவர அலிகார வாதம் சிவசமவாதம், சிவசங்கிராந்த வாதம், சிவாத்துவிதவாதம்  என ஆறு அகச்சமயங்களையும் குறிப்பிடுவர். இன்னும் சங்கர மடத்தினர் அத்வைதத்தின் பெயரால் சைவ சமயத்தையே பின்பற்றுவதையும் காணலாம்.
இந்தியாவில் பெரு வழக்கிலுள்ள இச்சமயம் இந்நாட்டின் பெரும்பான்மைச் சமயம் (Majority religion ) என்றால் அது மிகையாகாது.

              சிவ வழிபாடு ருக் வேதத்தில் இருந்தே தொடங்குகிறது. அதில் சிவன் என்னும் பெயர் கையாளப்படவில்லை. அவன் ருத்திரனாய்க் காட்சி அளிக்கிறான். ருத்திரன் விண்ணையும் மண்ணையும் ஊடுருவிச் செல்லும் அம்புகள் உடையவனாகவும் (VII 46 .3 ) பசுக்களையும் மக்களையும் கொல்லும் ஆயுதங்களைத் தாங்கியவனாகவும் ( I , 114 , 10 ) இடியினால் உயிர்ச்சேதங்கள் இழைப்பவனாகவும் (II , 33 .14 ) விளங்குகின்றான். அவன் நோய்களைச் செர்ப்பவனாகவும் தீர்ப்பவனாகவும் தீர்பதற்குரிய மருந்துகள் உடையவனாகவும் (I 43 .4 ) மருத்துவர்களுக்கும் மிகச்சிறந்த மருத்துவனாகவும் ( II 33 .4 ) ஆயிரம் மருந்துகளை உடையவனாகவும் ( VII 46 .3 )சித்திரிக்கப்படுகின்றான். அதனால் மக்கள் தங்களை அழிவினின்றும் காத்திடுமாறு அவனை வேண்டுகின்றனர். 'ருத்ரனே சினத்தினால் எங்கள் பிள்ளைகள், சந்ததியினர், மக்கள் மாடுமனைகள் ஆகியவர்களுக்கு ஊறு விளைவிக்காதே! எங்கள் மக்களையும் கொல்லாதே! நாங்கள் என்றும் உனக்குக் காணிக்கை செலுத்தித் தொழுகிறோம்' (1 .114 .8 ) என்று வழிபடுகின்றனர்.
               இவ்வாறு பயத்தினாலும் அச்சத்தினாலும் பீடிக்கப்பட்டபோது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ருத்ரனை நினைத்தான். வேண்டினான், வணங்கினான மனிதன். இவை பின்னால் ருத்திரன் எங்கும் நிறைந்த பரம்பொருளாக மாறுவதற்கான காரணங்களாயின. மக்களின் வாழ்க்கையில் அச்சத்தினால் அவதிப்படும் நிகழ்ச்சிகள் ஏற்ப்படுவதுண்டு. தோற்று நோய்களும் மற்ற நோய்களும் வரும்போது அஞ்சுகிறான். இடி மின்னலினால் தாக்குறும் போது நடுங்குகிறான். புயல் மழையினால் தாக்குறும் போது பதறுகிறான். இவற்றை அளிக்கும் கடவுளை அடிக்கடி நினைக்கிறான். ஆகவே காக்க வருமாறு மற்ற கடவுல்களினும் மேலாக இக்கடவுலையே அடிக்கடி வேண்டுகிறான்.
            இப்படிக் கடவுள் நிலைக்கு உயர்ந்தவனே ருத்ரன். மனிதனின் அடிமனதில் குடிகொண்டிருந்த அச்ச உணர்வு என்னதான் மறைக்க முயன்றாலும் முடியாமல் மேலெழுந்து உருத்துவதன் விளைவாக உருவானவனே உருத்திரன் என்னும் ருத்திரன். அவனே பின்னர் மங்கலமயமாக்கப்பட்டுச் சிவமயமாகின்றான் என்கின்றனர் ஆய்வாளர்.
           யஜுர் வேதத்தின் பகுதியான சடருத்த்ரியத்தில்தான் ருத்ரன் சிவனாகக் காட்சி அளிக்கிறான். 'மங்கல வடிவினனும், அடைந்தாரையும் சிவமாக்கும் மங்கலம் மிக்க வடிவினனும் ஆகிய நினக்கு வணக்கம்!' என்று அதில் வருகிறது. ருத்ரன் அச்சந்தரத் தக்கவனாய் இருந்தும் மங்கலம் சேர்க்கும் சிவனாக மாறும் பொருட்டு வணங்கப்பருகிறான். பின்னர் சிவன் என்னும் பெயர் வேதங்களின் பிற்பகுதிகளில் சிறப்புப் பெரும் பெயரானது.
இறுதியில், ச்வேதாச்வதர உபநிஷத்தில் இச்சிவன் பிரமம் என்னும் நிலைக்கு உயர்ந்து முழுமுதற் கடவுளாகிறான். 'வேதங்களை வெளிப்படுத்தி அனைத்து உயிர்களையும் வாழ்விக்கும் ருத்ரனே! அச்சத்தையும் பாவத்தையும் போக்கும் மங்கலமான திருமேனியால் ( சிவதானு) எங்களை இன்புறச் செய்வாயாக! (III 5 ) என்று வேண்டப்படும் ருத்ரன், 'உலகம் யாவையும் தமது சொந்த ஆற்றலால் காத்து ஆள்பவன் ருத்ரன். அவனை இரண்டாமவன் ஆக்ககூடியவர் வேறு எவரும் இல்லை. அதாவது சிவனுக்கு மேல் ஒருவர் வந்து அவரை இரண்டாவது இடத்திற்கு தள்ளக்கூடியவர் இது வரை யாரும் இல்லை. அவன் ஒவ்வோர் உயிருள்ளும் நிலைத்திருக்கிறான். உலகங்கள் யாவையும் வெளிப்படுத்திக் காத்து இறுதிக்காலத்தில் தனக்குள் ஒடுக்கிக் கொள்பவன்' அவனே!, (VI . 2 ) என்று பரம்போருளாகத் தொழப்படும் நிலையைப் பெறுகிறான். இப்படி ருத்ரனும் சிவனும் ஒன்று பட்டுச்சிவனாக முகிழ்ந்தவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு சைவசமயம் உருப்பெற்றது. 
              இந்தச் சைவ சமயம் தத்துவ அடிப்படையில் பல வகையினதாகப் பிரிந்துள்ளது. அவற்றுள் மிகவும் புகழ் வாய்ந்தவையாக இருப்பவை வடக்கில் வாழும் (இந்தியாவின் வடபகுதியில்) காஷ்மீர சைவம். கன்னடத்தில் வழங்கும் (கர்நாடகா மாநிலத்தில்) வீர சைவம் எனும் லிங்காயதம், தமிழகத்தில் திகழும் சைவ சித்தாந்தம் ஆகியவையாகும். 

இனி நாம் காஷ்மீர சைவம், வீர சைவம், சைவ சித்தாந்தம் ஆகிய மூன்றையும் தனித்தனியாக விரிவாகப் பார்ப்போம்.

காஷ்மீர சைவம் அடுத்த தொடரில் பார்ப்போம்.     
   

Sunday, March 27, 2011

திருச்சிற்றம்பலம் 6

திருக் கேதீசுரப் பதிகம்
1    
விருதுகுன்றமா மேருவினாணர வாவன லெரியம்பாப்
போருதுமூவெயில் செற்றவன்பற்றிய நின்றுரைப்பதியெந்நாளாம்  
கருதுமூவெயில் கனைகடர்கடிகமழ் பொழிலனிமா தோட்டம்
கருதநின்றகே தீச்சரங்கைதொழக் கடுவினையடையாவை 
பாடல்வீனையர் பல பலசரிதைய ரெருதுகைத்தரு நட்டம்
ஆடல் பேனுவரமரர்கள் வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர் 
இடமாவது விருங்கடற்கரையினி லேழிறிகழ் மாதோட்டம் 
கேடிலாதகே தீச்சரந் தொழு தெழக் கெடுமிடர் வினைதானே 
பெண்ணோர் பாகத்தர் பிறை தவழ் சடையின ரறைகழல் சிலம் பார்க்கச்
சுன்னமாதிரித் தாடுவர் பாடுவ ரகந் தொறு மிடுபிச்சை 
ருண்ணலாவதோ ரிச்சையினுழல் பல ருயர் தரு மாதோட்டத் 
தண்ணனண்ணுகே தீச்சரமடைபவர்க் கருவினையடையாவே 
பொடிகொண்மேனியர் புலியதளரையினர் விரிதருகரத் தேந்தும் 
விடிகொண் மூவிலை லேலினர் நூலினர் மறிகடன் மாதோட்டத் 
தடிகளாதறித் திருந்த கேதீச்சரம் பரிந்த சிந்தையராகி 
முடிகள் சாய்த்தடி பேணவல்லார் தம் மேன் மெய்த்தெழும் வினைபோமே 
நல்லராற்றவு ஞான நன்குடயர்தம் மடைந்தவர்க் கருளிய 
வல்லார்பார்மிசைவான் பிறப்பிப்பிலர் மலிகடன் மாதோட்டத் 
தேல்லையில்புகழந்தை கேதீச்சர மிராப்பகனினைந்தேத்தி
அல்லலாசறுத் தரனடியினை தொழுமன் பராமடியாரே 
பேழைவார்சடைப் பெருந்திரு மகடனைப் பொருந்தவைத்தொரு பாகம்
மாழையங்கயற் கன்னிபாலருளியர் பொருளினர் குடிவாழ்க்கை 
வாழையம் பொழின் மந்திகள் களிப்புற மருவியமா தோட்டக் 
கேழல்வேண் மருப்பணிந்த நீண்மார்பர்கேதீச்ச்சரம் பிரியாரே 
பண்டுநால்வருக் கரமுரைத்தருளிப்பல் லுலகினிலுயிர் வாழ்க்கை 
கண்டனாதனார் கடலிடங்கை தொழக் காதலித்துறைகோயில்
வண்டுபன்செயு மாமலர்ப் பொழின மஞ்சை நடமிடு மாதோட்டம் 
தொண்டர் நாடொறுந் துதிசெயவருள் செய்கே தீச்சர மதுதானே
தென்னிலங்கையர் குலபதிமலை நலிந்தெடுத் தவன்முடி திண்டோள் 
தன்னலங்கேட வடர்த்தவர்க்கருள் செய்த தலைவனார் கடல்வாயப் 
போன்னிலங்கிய முத்துமாமணிகளும் பொருந்தியமாதொட்டத்
துன்னியன் பொடு மடியவரிறைஞ்சுகே தீச்சரத்துள்ளாறே                                
   9 
வுளானுமப் பொருகடல் வண்ணனும்புவியிழந் தெழுந்தோடி
மேவிநாடிநுன் னடியிணைகான்கிலா வித்தக மேன்னாகும்   
மாவும் கமுங் கதலியுநெருங்குமா தோட்டன்கர் மன்னிதி
தேவிதன்னோடுந்திருந்து கேதீச்சரத்திருந்தவெம்பெருமானே
10 
புத்திராய்ச்சில புனை துகிலுடையவர் புரனுரைச்சமனாதர்
எத்தராகி நின் றுன்பவரியம்பிய வேழைமைகேளேன் மின் 
மத்தயானையை மருகிடவுரி செய்து போர்த்தவர் மாதோட்டத் 
தத்தர்மன்னுபா லாவியினகரையிற்கே தீச்சரமடைமின்னே 
11 
மாடெலாமான முரசெனக்கடலின தொலிசுவர் மாதோட்டத்
தாடலேருடை யண்ணல் கேதீச்சரத் தடிகளை யணிகாழி 
நாடுளார்க்கின்ற ஞானசம்பந்தன் சொனவின்றெழு பாமாலைப் 
பாடலாயின பாடுமின் பத்தர்கள் பரகதி பெறலாமே.   

திருச்சிற்றம்பலம்

ஸ்ரீ சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்.
ஓம் நமசிவாய நாமஹ

நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய 
பஸ்மாங் கராகாய மகேச்வராய
நித்யாய சூத்தாய திகம்பராய
தஸ்மை  நகாராய நமச்சிவாய 

மந்தாகிணீ சலில சந்தன சர்ச்சிதாய 
நந்தீஸ்வர ப்ரமத நாத மகேச்வராய 
மந்தார முக்ய பஹூ புஸ்ப சூபூஜிதாய 
தஸ்மை மகார மஹிதாய நமச்சிவாய 

சிவாய கௌரீ வதனாப்ஜ ப்ருந்த
சூர்யாய தக்சாத்வர நாசகாய 
ஸ்ரீ நீலகண்டாய வருஷத்வஜாய 
தஸ்மை சிகாராய நமச்சிவாய 

வசிஷ்ட கும்போத்பவ கௌதமாதி 
முனீந்திர தேவார்ச்சித்த சேகரைய 
சந்த்ராக்க வைச்வாணர லோசனாய 
தஸ்மை வகாராய நமச்சிவாய 

யக்சஸ்வரூபாய ஜடாதராய பினாக 
ஹஸ்தா சனாதனாய 
திவ்யாய தேவாய திகம்பராய 
தஸ்மை யகாராய நமச்சிவாய 

பிரதோஷ வேளையில் பாட வேண்டிய பரமன் பாடல் 

மங்களம் தந்திடும் பரமனின் திருவடி 
நம்மனம் தன்னில் இருத்தியே துதிப்போம் 
சந்தியா காலத்து பிரதோஷ நாயகன் 
கங்கன பிரியன் சிவநம சிவயன்

கிள்ளை கரமதில் பிடித்திடும் இமையுடன் 
பிள்ளையை ஒருசேர பணிந்திடும் அடியர்க்கு
தில்லையில் நடித்திடும் திருமறை இறையவன் 
இல்லையென் ட்ரோதே திருவருள் தருவான் 

ஆடிடும் பாதம் தேடிடும் கண்கள் 
நாடிடும் மனமோ கூடிடும் இசையில் 
வாடிடும் வாழ்வில் சேர்ந்திடும் வளங்கள் 
பாடிடும் சூடிடும் பரமனை நெஞ்சம் 

ஹரஹர சிவசிவ தாண்டவ சங்கர 
புரஹர நமசிவ குண்டலங்களை 
நரஹர நடனம னோஹர ரஞ்சித
கரஹர திகபர ஆண்டவா வல்லபா

தும்புரு நாரதர் தம்புரு மீட்டி
இன்புற பாடிய தீநிற அண்ணலே 
துன்புறம் வாழ்வில் நிம்மதி தந்திடும் 
அன்புடை கோவே அருள்வாய் சிவனே

தாம்ததிம் தகயென ஆடிடும் நாதா
சாம்பச தாசிவ சத்குரு தேவா
பாம்பினை அணிந்திடும் முக்கண்ணா ஏ 
காந்தம் விரும்பிடும் நாதஸ்வ ரூபா 

நந்தியின் மீதே எழுந்தாய் போற்றி 
சந்தியா நேர இறைவனே போற்றி 
சிந்தியில் நிறைத்தாய் தேவா போற்றி 
எந்தையும் தாயும் ஆனாய் போற்றி 

வளியிடை நிறைந்தாய் பித்தா போற்றி 
வெளியினில் நிறைந்தாய் சித்தனே போற்றி
தெளிந்திட மனத்தினில் நிறைவாய் நிற்பாய் 
களித்து நடித்திடும் ஆண்டவா போற்றி . 

ப்ரதோஷாஷ்டகம்
சத்யம் ப்ரவீமி பரலோகஹிதம் ப்ரவீமி சாரம் ப்ரவீம்யும்பநிஷத்ருதயம் ப்ரவீமி /
சன்சார முன்பணமசார மவாப்ஜந்தோ; சாரோயமீஸ்வரபதாம் புருஷத்ய சேவா// 1 


யே நார்சயந்தி கிரீசம் சமே ப்ரதொஷயே நார்சிதம் சிவமபி ப்ரனமந்தி சானே/
ஏதத்கதாம் - ஸ்ருதிபுடைர்ண பிபந்தி மூடா ஸ்தே ஜன்மஜன்மஷூபவந்தி நாரா தரித்ரதா;// 2 


யேவை பிரதோஷ சமயே ப்ரமேச்வரஷ்ய சிர்வந்த்ய நன்யமான சொன்கிருத சரோஜ பூஜாம்/
நித்யம் ப்ரவ்ருத்த தனதான்ய கலத்ரபுத்ர சௌபாக்ய சம்பதாதிகாச்த இஹைவலோகே// 3 


கைலாச சைல புவனே தரிஜ கஜ்ஜ நித்ரீம் கௌரீம் நிவேஷ்ய கனகாஞ்சித ரத்னபீடே /
த்ருத்யம்விதாது மபிவாஞ்சதி சூவபாருணனே தேவாம்; பிரதோஷ 
சமயேனுபஜந்தி  சர்வே// 4 


வாக்தேவி த்ருதவல்லகீ சதமகோ வேணும் தத்தத் பத்ம ஜாஸ்தாலோன்னித்ரகரோ ரமா பகவதிகேய பிரயோகான்விதா/
விஷ்ணுச்சந்த்ர ம்ருதங்கவாதன படுதேர்வாஸ் சமந்தாத் ஸ்திதாரசே
வந்தே தமனு பிரதோஷ ஸமயே தேவம் ப்ருடாநிபதிதம்// 5 

கந்தர்வஜாக்ஷ பதகோரக ஷித்தஷாத்ய வித்யாதராமாவாரப் சரசாம் கனாஸ்ஸ/
யேன்ய த்ரிலோக நிலயாச்சஹா பூதவர்கா ப்ராப்ய பிரதோஷ சமையே ஹரபாஸ்வர சன்ஸ்தா// 6   

அத: ப்ரதோஷே ஸிவ ஏகஏவ பூஜ்யோத நான்யே ஹரிபத்மஜாத்யா/
தஸ்மின் மகேசே விதிநேஜ்யமானே சர்வே ப்ரசீதந்தி சூராகினாதா// 7  

ஏஷே தி தனியா: பூர்வஜன்மானி ப்ராஹ்மானோத்தம: பிரதிக்ஹைவர்யோ நித்ய ந தானாத்யைஸ் சூகமார்பி:// 8 

அதோ தாரித்ரமாபன்ன: புத்ரச்தே த்விஜபாமினி/
தத்தோஷ பரிஹாரத்த சாணப் யாது சங்கரம்// 9  
*****        


நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர் 


சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி
சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி 
கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி
கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி
பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி 
பார்வதியின் சொல்கேட்டு சிரிக்கும் நந்தி
நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி
நாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்தி
செங்கரும்பு உணவுமாலை அணியும் நந்தி
சிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்தி
மனகலங்கள் அனைத்தையுமே கொடுக்கும் நந்தி 
மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி
அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி
அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி 
வருங்காலம் நலமாக வைக்கும் நந்தி 
வணங்குகிறோம் எமைக்காக்க வருக நந்தி
பிரதோஷ காலத்தில் பேசும் நந்தி 
பேரருளை மாந்தருக்கும் வழங்கும் நந்தி
வரலாறு படைத்துவரும் வல்ல நந்தி
வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி
கெட்டகனா அத்தானையும் மாற்றும் நந்தி
கீர்த்தியுடன் குலம்காக்கும் இனிய நந்தி
வெற்றிவரும் வாய்ப்பளிக்க உதவும் நந்தி
விதியினைத்தான் மாற்றிவிட விளையும் நந்தி
வேந்தன்நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி
வியக்கவைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி
சேர்ந்த திருப்புன் கூரிலே சாய்ந்த நந்தி 
செவிசாய்த்து அருள்கொடுக்கும் செல்வ நந்தி 
கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி
குடம்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி
போன்போருளை வழங்கிடவே வந்த நந்தி 
புகழ்குவிக்க எம்இல்லம் வருக நந்தி.

நந்திகேஸ்வரர் பாடல்
திருமூலர்.

அப்பனை நந்தியை ஆரா அமுதனை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரிசு ஆயினும் ஏத்துமின் ஏத்தினால் 
அப்பரிசு ஈசன் அருள் பெறலாமே.

நந்தியருளாலே நாத நாம் பேருபெற்றோம்
நந்தியருளாலே மூலனை நாடி னோம்
நந்தியருளாவது என் செய்யும் நாட்டினில் 
நந்தி வழிகாட்ட நான் இருந்தேனே.
******

நந்தியம்பெருமான் தன்னை நாடொறும் வணங்குவோர்க்கு
புந்தியில்ஞானம் சேரும் பொலிவுறு செல்வம் கூடும்!

சிந்தையில் அமைதி தோன்றும்! சிறப்புறு மக்கள் சேர்வர்!
இந்திரபோகம் கிட்டும்! இணையிலா வாழ்வுதானே!
********

தாயுமானவர் பாடல் 

ஆழழி கரையின்றி நிற்கவிலையோ கொடிய 
ஆலமமு தாக விலையோ?
அக்கடலின் மீதுவட வனல்நிற்க வில்லையோ?
அந்தரத் தகில கோடி
தாழாமல் நிலைநிற்க வில்லையோ? மேருவும் 
தனுவாக வளைய வில்லையோ? 
சத்தமே கங்களும் வச்ரதரன் ஆணையின் 
சஞ்சரித் திடவில்லையோ?

வள்ளலார் பாடல் 

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே 
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே 
அன்பெனும் கரத்து அமர் அமுதே 
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே 
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே
அன்புருவாம் பரமசிவமே!

வேண்டுகோள்

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும் 
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான்சென்றே 
எந்தை நினது அருள்புகழை இயம்பி இடல் வேண்டும் 
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்தோங்க அருள்ஜோதி செலுத்தியிடல் வேண்டும் 
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் 
தலைவநினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே.


சுபம்.









  

Sunday, February 13, 2011

What would happen 2012? tamil 7, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?

3 . உங்களால் முடிந்த அளவு அதிகமான குருமார்களை சந்தித்து அவர்களிடம் சக்தி தீக்ட்சை பெறுவது மிகவும் சிறந்ததாகும். இப்படி தீக்சை பெரும் போது மற்ற எந்த முறைகளிலும் கிடைக்கும் சக்தி ஓட்டத்தின் அளவைவிட இது மிகவும் அதிகமாகும். சில குருமார் தங்களின் ஒரு பார்வையில் அல்லது ஒரே ஒரு தொடுதலின் மூலம் முக்தியையே  கொடுப்பவர்களும் உண்டு. தற்போது உள்ள குறுகிய காலத்தில் இதுவே மிக சிறந்த வழியாகும். 

4 . முன்பே கூறியது போல். ஒரு குரு உபதேசித்த மூலமந்திரத்தை 24 மணி நேரமும் அதன் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும். அப்படி சொல்லி உரு ஏற்றும்போது நீங்கள் ருத்திராட்சை மாலையை கையில் வைத்து, மோதிரவிரலின் நுனியிலிருந்து முதல் கணுவில் மாலையை வைத்துக்கொண்டு பெருவிரலின் நுனியால் மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ  ஒவ்வொன்றாக தள்ளிக் கொண்டே மந்திரத்தை சொல்லுவதால், உங்களின் மூலாதார சக்கரம் தூண்டப்பட்டு சக்தி ஓட்டம் அதிகரிக்கும்.
4 இல் 1 .முதலில் மந்திரத்தை சத்தமாக சில காலம் சொல்ல வேண்டும்.
4 இல் 2 . சிறிது காலத்திற்கு பின் மந்திரத்தை உங்களின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி  சொல்ல வேண்டும்.
4 இல் 3. சிறிது காலத்திற்கு பின் மந்திரத்தை உங்களின் உதடுகள் அசையும்படி சத்தமில்லாமல் சொல்லவேண்டும்.
4 இல் 1 . சிறிது காலத்திற்கு பின் மந்திரம் உங்களுக்குள் மட்டும் அதாவது மனதிற்குள் மட்டும்  சொல்லவேண்டும். இப்படி செய்வதால் நீங்கள் 4வது நிலைக்கு வரும் பொழுது  ஒவ்வொரு முறையும் நீங்கள் மந்திரம் சொல்லும் பொழுது உங்களின் உடலில் சக்தி ஓட்டம் அதிகரிப்பதையும் அதனால் மின் காந்த அலை, உங்களின் முதுகெலும்பின் கீழிருந்து உச்சந்தலை வரை செல்வதை உணர்வீர்கள்.
இதன் மூலமும் உங்களின் மின் காந்த சக்தி வலையம் வலிமை அடைகிறது.
5 .சிவசூத்திரத்தில் உள்ள ஒவ்வொரு பயிர்ச்சியையும், ஒரு பயிற்சி 10 நாட்கள் விகிதம் செய்து பார்த்து அந்த அனுபவத்தை அடைந்ததும், அடுத்த 10 நாட்களுக்கு அடுத்த பயிற்சியை செய்து பார்க்கவேண்டும். இப்படி உங்களுக்கு முக்தி கிடைத்து விட்டது  என்று நீங்கள் உணரும் வரை, அதாவது நீங்கள் உணரும் வரை, சந்தேகம் இல்லாமல் நீங்கள் உணரும் வரை. செய்து முக்தியை உணர்ந்ததும் ஜீவன் முக்திக்கு முயற்சிக்கவேண்டும். முக்தி உங்களைக்காக்கும், ஆனால் ஜீவன் முக்தியின் மூலம் நீங்கள் மற்றவரைக்காக்க முடியும்.  

இதற்க்கு சில உதாரணங்களை பாகம் 8 இல் காண்போம்.   
 

Saturday, February 5, 2011

What would happen 2012? tamil 6, 2012 இல் என்ன என்ன நடக்கும் சாத்தியகூறுகள் உள்ளது?



இதற்கு என்ன செய்யவேண்டும்?
1  பிராணாயாமம் (மூச்சுப்பயிற்சி)  
இது சரியாக அமர்ந்து அதாவது முதுகு, கழுத்து, தலை, இவை நேர் கோட்டில் இருப்பதாக அமர்ந்துகொண்டு மூச்சுப்பயிற்சி செய்யவும்.
இதனால் மனம் அமைதியடையும், அதாவது அடங்கும், அப்போது உங்களின் சக்திவிரயம் தடுக்கப்படும். மேலும் மின்காந்த வளையம் சக்தி பெரும். 
இது மட்டும் அல்ல பலவிதமான நோய்கள் அனைத்தும் குணமடைய மூச்சுப்பயிற்சி மிக சிறந்தது.


இப்போது இதை நாம் தமிழில் வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோவை தயவு செய்து முழுமையாக பார்த்து கவனமாக செய்யுங்கள். முழு ஆரோக்கியமும் பேர்ஆனந்தமும் பெறுங்கள்.

Yoga Health Fitness - Baba Ramdev - Pranayam - Tamil



Baba Ramdev - Yoga for the Youth - English - Yoga Health பிட்நெஸ்




அடுத்தது ஒரு குரு உபதேசித்த மந்திரத்தை முடிந்த வரை 24 மணி நேரமும் திரும்பத் திரும்ப சொல்லிகொடிருக்க வேண்டும். 

இப்படி சொல்லும்போது அதன் பொருள் உணர்ந்து சொல்லவேண்டும். முதலில் சிறிது காலம் சத்தமாக சொல்லவேண்டும். பின் உங்கள் காதுகளுக்கு கேட்கும்படி சொல்லவேண்டும். அதன்பின் சிலகாலம் உங்களுக்குள் சொல்லவேண்டும், ஆனால் உங்கள் உதடு மட்டும் அசையவேண்டும். அதன்பின் உள்ளுக்குள் மட்டுமே சொல்லவேண்டும். இப்படி நீங்கள் செய்யும் பொது உங்களின் உடலில் மின் ஓட்டம் ஏற்படுவதை நன்றாக உணரமுடியும். இந்த மிநோட்டமே, மின்காந்த சக்தியாகும். இந்த சக்தி அதிகமாகும் பொது உங்களின் மின்காந்த வளையம் பெரியதாகும், இதனால் நீங்களும் உங்களை சுற்றி உள்ளவர்களும் sun solar flash இல் இருந்து தப்புவது உண்மை. 

இது எப்படி நிகழ்கிறது? இதை பக்கம் 7 இல் பார்க்கவும்.